01-27-2006, 07:52 AM
<b>இவர் ஒரு சிறந்த தேச பக்தன்</b>
தமிழர் தாயகத்தின் சிறந்ததொரு படைப்பாளியும்இ தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்துக்கு உரமூட்டிய யாழ் அளவெட்டியைச் சேர்ந்த ஞானரதன் என அழைக்கப்படும் வை.சச்சிதானந்தம் அவர்களின் சேவையைப் பாராட்டி தேசியத் தலைவர் அவர்கள் அதியுயர் தேசிய விருதான மாமனிதர் விருது வழங்கி உயர்நிலைப்படுத்தியுள்ளார்.
யாழ். அளவெட்டியைச் சேர்ந்த ஞானரதன் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இணைந்து தமது பங்களிப்பை வழங்கியுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் நிதர்சன நிறுவனத்தால் விபரணப் படங்கள் தயாரிப்பதற்கு மூல கர்த்தாவாகவிருந்தார். அதே போன்று குறும்படங்கள்இ முழு நீளப் படங்கள் என்பவற்றை தயாரிப்பதற்கான ஆரம்ப கர்த்தா. இவர் நிதர்சன நிறுவனத்தால் வெளியிடப்பட்ட ‘ஒளிவீச்சு|க்கு இவரது பங்களிப்பு அளப்பரியது.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் போது பல்வேறு இடப்பெயர்வுகள் நெருக்கடிகள் ஏற்பட்ட போதும் மாமனிதர் ஞானரதன் அவர்களின் காத்திரமான பங்களிப்பும்இ அர்ப்பணிப்பும் இருந்துள்ளது.
தற்போது தமிழீழ தொலைக்காட்சி இன்று பரந்தளவில் தமது சேவையை வழங்கிக் கொண்டிருக்கிறது. இவ்வாறான தமிழீழ தேசிய தொலைக்காட்சிச் சேவைக்கு வழிகாட்டியாக இருந்தவர் ஞானரதன். இவரின் சிறந்த படைப்புக்களுக்காக தேசியத் தலைவர் பலமுறை பரிசு வழங்கி பாராட்டியுள்ளார்.
ஞானரதன் அவர்களின் மறைவின் பின் தேசியத் தலைவர் அவர்கள் தமிழீழ அதியுயர் விருதான மாமனிதர் விருது வழங்கி அவரை உயர் நிலைப்படுத்தியுள்ளார். அந்த அறிக்கையில்:-
‘இவர் ஒரு சிறந்த தேசபக்தர். எமது மண்ணையும் மக்களையும் ஆழமாக நேசித்தார். எமக்கு ஒரு நாடு வேண்டும். எமது மக்களுக்கு விடுதலை வேண்டும். அவர்கள் சுதந்திரமாகக் கௌரவமாக வாழவேண்டும். சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க வேண்டும் எனத் துடியாய்த் துடித்தார். தேசப்பற்று அவரை எமது போராட்டத்தோடு இறுகப் பிணைத்தது. மக்களோடும் போராளிகளோடும் இணைந்து நின்று தாயக விடுதலைப் போரின் பெரும் பழுக்களைத் தானும் சுமந்து கொண்டார். நீண்ட காலமாக எமது விடுதலை இயக்கத்தின் பல்வேறு பிரிவுகளில் பல்வேறு பெரும் பொறுப்புக்களைச் சுமந்துஇ தனது முதுமைக் காலத்திலும் உறுதியோடு உழைத்தார். தனது அறிவாற்றலாலும் கடும் உழைப்பாலும் தமிழரின் தேச சுதந்திரப் போராட்டத்திற்கு அவர் ஆற்றிய பணி என்றுமே பாராட்டுக்குரியது.
இவர் தமிழீழ மண் தந்த தலை சிறந்த எழுத்தாளர். ஆற்றல் மிக்க ஒரு கலை இலக்கியப் படைப்பாளி. சிறந்த அரசியற் சிந்தனையாளர். சிங்கள பௌத்த பேரினவாதத்துடன் சதா கருத்துப் போர் நடாத்தினார். பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் ஓய்வில்லாமல் எழுதினார். எமது மக்களிடத்தில் விடுதலை உணர்வையும் தேசப்பற்றையும் தட்டியெழுப்பினார். சிங்கள இனவாத அரசின் பொய்யான பரப்புரைகளுக்குச் சாட்டையடி கொடுத்துஇ எமது தேசத்தின் உண்மை நிலையை உலகிற்குத் தெளிவாக எடுத்துக் கூறினார்|| என தேசியத் தலைவர் சுட்டிக் காட்டுகிறார்.
இவர் மறைந்தாலும் இவரது சேவைகள்இ தமிழ்த் தேசியத்துக்காக அவர் ஆற்றிய பங்களிப்பு அவரது படைப்புக்கள் என்பனவற்றை என்றும் தமிழீழம் நினைத்துக் கொண்டேயிருக்கும்.
<i><b>தகவல் மூலம்- ஈழநாதம்- மட்டக்களப்பு பதிப்பு</b></i>

"
"
"