Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ் ஊடகவியலாளர்கள் மீதான கெடுபிடிகள்
#6
<b>கொலை அச்சுறுத்தலுக்குள் தமிழ் ஊடகங்கள்</b>


<i><b>சுகுணம்</b></i>


ஒரு நாட்டில் வாழ்கின்ற மக்கள் எந்தளவு சுதந்திரக் காற்றினை அனுபவிக்கின்றார்கள் என்பதனை இயங்கும் சுதந்திர ஊடகங்களை வைத்து அறிந்து கொள்ள முடியும்.

அபிவிருத்தியடைந்த நாடுகளை பார்த்தால் இவற்றை விளங்கிக்கொள்ள முடியும். இருந்தாலும் ஆரம்ப உலகப் போர் இடம் பெற்ற வேளையில் சுதந்திர ஊடகம் மறுக்கப்பட்டது. காரணம் ஒரு நாட்டின் யுத்த இரகசியங்கள் மற்றும் யுத்தம் நடக்கும் காலங்களில் எதிரி தமது பலவீனங்களை அறிந்து கொள்ள ஊடகங்கள் துணை போகலாம் என்ற உணர்வினைக் கொண்டிருந்தார்கள். எனினும் யுத்தம் இடம் பெறும் காலங்களில் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.

ஆனால் எந்வொரு நாட்டினதும் மக்களின் தேவைகள் குறையான அபிவிருத்தி நாட்டின் உண்மைத் தன்மை யுத்த காலங்களில் இரு தரப்புக்கும் ஏற்படும் இழப்புக்களை சரியாக சரியான நேரத்தில் உரிய முறையில் வெளிக்காட்ட வேண்டியது ஊடகங்களின் தார்மீக பொறுப்பாகும். எங்கே?இ எப்ண்;பாது? எவ்வாறு? என்ற கேள்விகளை மக்கள் எழுப்புகின்ற வேளையில் உரிய பதில் இந்த ஊடகங்களின் மூலமாகப் பெற்றுக் கொள்ள முடிகின்றது.

எவ்வாறாயினும் அரச மற்றும் தனியார் ஊடகத் துறையினர் இயங்கிய போதும் அரசு எப்போதும் தமக்கு சார்பான உண்மைகளை மறைத்துச் செயல்படுவார்கள். ஆனால் தனியார் ஊடகங்கள் அரசினை பழிவாங்கும் நோக்கம் கொண்டவை அல்ல. மக்கள் உண்மையை அறிந்து கொள்ள வேண்டும் என்பதில் உன்னிப்பாக செயல்படுபவர்கள். எந்த ஒரு விடயமாக இருந்தாலும் தெட்டத்தெளிவாக வெளிக்காட்டி விடுவார்கள்.

இந்த விடயத்தில் சிறிலங்காவில் புதுவிதமான செயல் முறையுள்ளது. அதிலும் அரசு தமக்கு எது ஏற்புடையதாக உள்ளது என்பதில் மிகவும் அக்கறையாக உள்ளது. 1990ம் ஆண்டுக்குப் பின்பு நாட்டில் போர்ச் சூழல் மிகவும் படுமோசமாக இருந்தது. அன்றைய காலத்தில் இருந்த ஆட்சியாளர்கள் நாட்டின் உண்மைத் தன்மையினை தமது நாட்டு மக்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் கூட வெளிக்காட்டவில்லை என்பது யாவரும் அறிந்த உண்மை.

சிறிலங்கா இராணுவத்தினால் எத்தனை படுகொலைகள் இடம் பெற்றது. ஆண்இ பெண்இ சிறியவர்இ பெரியவர் என்ற வயது வேறுபாடு இன்றிப் படுகொலை செய்யப்பட்டார்கள்.

யாழ்ப்பாணம்இ மட்டக்களப்பு அம்பாறை போன்ற மாவட்டங்களில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டார்கள். எதுவும் வெளியிடப்படவில்லை. சிறுபான்மைகளின் உறவுகளின் உரிமைகள் நசுக்கப்படும் போது பெரும்பான்மை இனம் வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றது. சிறுபான்மையினம் துன்பங்கள் அவல ஓலங்களை வெளிக்காட்ட மறுப்புக்கள் தெரிவிக்கப்பட்டது. இது தான் பத்திரிகை மற்றும் ஊடக சுதந்திரம்.

இதனை விட இராணுவத்தினால் கைது செய்யப்பட்டுக் காணாமல் போனோர் பட்டியல் சரியான புள்ளி விபரங்களை வெளியிட முடியாத நிலை. இராணுவத்தினால் கைது செய்யப்பட்டவர் என வெளிப்படையாக பத்திரிகையில் செய்தி வர மறுநாள் சடலமாக மீட்கப்படுகின்றார்கள். பத்திரிகை வெளிகாட்டியும் அதன் புனிதத் தன்மையினை பாதுகாத்துக் கொள்ள முடியவில்லை.

பத்திரிகை என்பது இனஇ மதஇ கட்சி வேறுபாடு இன்றி வெளியிடப்பட வேண்டும். ஆனால் சிறிலங்காவின் அரசியலில் அது தலைகீழாக உள்ளது. ஒரு காலத்தில் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தற்போது அரசாங்கத்தின் சார்பில் இருந்தால் அவர்களுக்கு எதனையும் செய்ய முடியும். இன விடுதலைக்காகப் போராடும் ஒரு தேசிய இயக்கத்தின் கொள்கைகள் மற்றும் அவற்றின் உண்மைகள் வெளியிட மறுக்கப்படுகின்றது. இது தான் பத்திரிகை
சுதந்திரமாம்.

அன்று யாழ்பாணத்தில் மயில்வாகனம்இ நிமலராஜன் மாற்று ஆயுத குழுக்களின் உண்மைகளை வெளியிட்டதால் ஈ.பி.டி.பி இயக்கத்தினால் அவரின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டது. சிறிலங்கா அரசாங்கம் அல்லது மாற்று ஆயுதக் குழுக்களின் அராஜகத்தினை வெளியில் சொன்னால் கிடைக்கும் பரிசு கொலை. இதே போன்று மட்டக்களப்பில் சிரேஸ்ர ஊடகவியலாளர் ஜி.நடேசன் அவர்கள் கருணா தமிழ் தேசத்திற்கு எதிராக மேற்கொண்ட துரோகங்களை அம்பலப்படுத்தியமையால் அந்தக் கும்பலால் ஈவிரக்கமற்ற முறையில் மிகவும் கோழைத்தனமாக சுட்டுக் கொல்லப்பட்டார்.

இதே வேளையில் கொழும்பில் மாமனிதர் டி.சிவராம் சிங்கள கோட்டையில் நின்று தமிழ் மக்களின் போராட்டத்தினை நியாயப்படுத்தி சிங்கள தேசத்தில் சிறுபான்மை தமிழ் இனம்; உண்டு. அவர்களுக்கான உரிமைகளை வழங்க வேண்டும் என்பதனை சாதாரண பாமர மக்கள் தொடக்கம் புத்திஜீவிகள் அரசியல்வாதிகள் வரை உணர்த்தியவரை சந்தர்ப்பத்தினைப் பயன்படுத்தி அழித்து விட்டார்கள்.

இவரின் கொலை தொடர்பாக விசாரணை மேற்கொள்ள வேண்டும் என அனைத்து ஊடக அமைப்புகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சர்வதேச சமூகத்தினை வேண்டியதால் தப்பவழியில்லாது கொலை செய்தவர்களை கைது செய்வது போல் பாசாங்கு காட்டியுள்ளார்கள். இதுவரையில் குற்றவாளிக்கு எந்தவிதமான தண்டனையும் வழங்கப்படவில்லை. இது வெறும் கண்துடைப்பாகவே உள்ளது.

அது மாத்திரமல்ல தற்போது கொழும்பில் தினக்குரல் செய்தியாளர்கள் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டனர். அவர்கள் அரசாங்கத்தின் தகவல் திணைக்களத்தின் அடையாள அட்டையினை காட்டிய போதும் விசாரிக்க வேண்டும் என்று படைத்தரப்பினர் கூறியுள்ளார்கள் என்றால் தமிழ் ஊடகவியலாளர்கள் எந்தளவுக்குப் பாதிக்கப்படுகின்றார்கள் என்பது நன்கு புலனாகும். அத்துடன் யாழ்ப்பாணத்தில் உள்ள தினக்குரல்இ நமது ஈழநாடு அலுவலகங்கள்; சோதனைக்குள்ளாகியுள்ள விடயமும் தெரிந்தவையே.

அத்துடன் சக்தி தொலைக்காட்சி நிறுவனத் தலைவர் மகாராஜா அவர்களை கொலை செய்வதற்கான சதிகள் கூட இடம் பெற்றன. ஆனால் இது யாரால் மேற்கொள்ளப்பட்டது. ஏன் செய்ய முற்பட்டார்கள். என்பது இதுவரையில் தெரியவில்லை. அரசினால் இதுதொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்த போதிலும் அதில் எந்தளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பது தெரியவில்லை.

இது இவ்வாறிருக்க மட்டக்களப்பு மாவட்டத்தில் ஈழநாதம் (மட்டு பதிப்பு) பத்திரி;கையின் விநியோகப் பணியாளர் அரசகுமார் என்பவர் அக்கரைப்பற்றில் வைத்து ஆயுதக் குழுக்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதே போன்று மட்டக்களப்பு நகரில் வைத்து ஜோக்குமார் என்ற விநியோகப் பணியாளர் இராணுவ புலனாய்வுப் பிரிவினரால் சுட்டுகொல்லப்பட்டார். இதுவரையில் என்ன நடந்தது. பத்திரிக்கையின் தருமத்தினை பறித்தெடுக்கும் அளவுக்கு சிறிலங்காவின் ஜனநாயகம் மாறியுள்ளது.

யாழ்ப்பாணத்தில் மயில்வாகனம் நிமலராஜன்இ மட்டக்கப்பில் நடேசன்இ சிவராம் வரைக்கும் ஊடகவியலாளர்கள் படுகொலைக்கு என்ன நடவடிக்கை எடுத்துள்ளார்கள.; சிந்தியுங்கள். ஊடகங்களை அடக்குவதன் மூலம் தமது அடாவடிகளை மறைக்க முற்படலாம். ஆனால் சிறிலங்காவினை பொறுத்தவரையில் இவை இயலாத காரியமாகவே உள்ளது. சிறிலங்காவின் அடக்குமுறைகள் வெளியுலகுக்கு இன்று தெரிந்து விட்டது.
அண்மையில் கூட மட்டக்களப்பு நகரில் திருமலை வீதியில் கிளேமோர் தாக்குதல் இடம் பெற்றது. இவற்றுக்குச் சென்ற தமிழ் பத்திரி;கையாளர்களை இராணுவத்தினர் தாக்க முற்பட்டார்கள் இதே வேளையில் எமது சகோதர இனமான முஸ்லிம் பத்திரிகையாளர்கள் செல்ல அனுமதியளிக்கப்பட்டது. இது கூட அவர்களின் இனவாதப் போக்கினையே காட்டியுள்ளது. பத்திரிகையானது யாருக்கும் வக்காலத்து வாங்கவேண்டிய நிலையில்லை. அவர்களைச் சுதந்திரமாக இயங்கவிட வேண்டும் என்பதே எதிர்பார்ப்பு!

<i><b>தகவல் மூலம்- ஈழநாதம் மட்டக்களப்பு பதிப்பு</b></i>
"
"
Reply


Messages In This Thread
[No subject] - by AJeevan - 01-13-2006, 03:32 PM
[No subject] - by மேகநாதன் - 01-19-2006, 03:29 AM
[No subject] - by மேகநாதன் - 01-19-2006, 02:15 PM
[No subject] - by மேகநாதன் - 01-20-2006, 08:36 AM
[No subject] - by மேகநாதன் - 01-27-2006, 07:49 AM
[No subject] - by தூயவன் - 01-27-2006, 03:41 PM
[No subject] - by ukraj - 01-27-2006, 03:45 PM
[No subject] - by தூயவன் - 01-27-2006, 03:47 PM
[No subject] - by ukraj - 01-27-2006, 03:55 PM
[No subject] - by தூயவன் - 01-27-2006, 04:06 PM
[No subject] - by ukraj - 01-27-2006, 04:12 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)