Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பேருவளை - அழுத்கமை பிரதேசத்தில் ஊடரங்குச் சட்டம்
#2
<b>அழுத்கம - தர்கா நகரில் ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டது.</b>

களுத்துறை மாவட்டத்தின் அழுத்கம-தர்கா நகரில் காவல்துறை ஊரடங்குச் சட்டம் மீண்டும் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது.தர்கா நகரில் நேற்று வர்த்தக நிலையம் ஒன்றில் இளைஞர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவத்தை அடுத்து இரண்டு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக பிரதேச்த்தில் பதற்ற நிலை ஒன்று ஏற்பட்டது.

இதனையடுத்து காவல்துறையினர் பிரதேசத்ததில் ஊரடங்கு சட்டத்தை அமுல்ப்படுத்தியதுடன் இன்று அதிகாலை ஆறு மணிக்கு அதனை நீக்கினர்.

இந்த நிலையில் படையினரும் கதவல்துறையினரும் இணைந்து பிரதேச்த்தில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதேவேளை தர்கா நகரில் வெதுப்பகம் ஒன்றில் தீபற்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.இந்த தீ சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றில் ஏற்பட்ட ஒழுக்கு காரணமாக இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டனர்.

பிரதேசத்தில் அசம்பாவிதங்கள் ஏற்ப்படுவதை தடுக்க வகையில் மேலதிக படையினர் அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை தர்கா நகரில் உள்ள இரண்டு மாடி வர்த்தக மையம் ஒன்று முழுமையாக தீயினால் அழிவடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஆத்திரமடைந்த சிலர் தர்கா நகரில் உள்ள பல வர்த்தக மையங்களுக்கு தீவைத்துள்ளதாகவும் அவர்களை கலைக்க காவல்துறையினர். நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

<b><i>தகவல் மூலம்- பதிவு.கொம்</i></b>
"
"
Reply


Messages In This Thread
[No subject] - by மேகநாதன் - 01-26-2006, 08:41 PM
[No subject] - by மேகநாதன் - 01-28-2006, 04:58 AM
[No subject] - by தூயவன் - 01-28-2006, 05:09 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)