Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பேருவளை - அழுத்கமை பிரதேசத்தில் ஊடரங்குச் சட்டம்
#1
<b>பேருவளை மற்றும் அழுத்கமை பிரதேசத்தில் ஊடரங்குச் சட்டம் </b>
[<i>வெள்ளிக்கிழமை, 27 சனவரி 2006</i>

இரு இனங்களுக்கிடையில் ஏற்பட்டுள்ள மோதலையடுத்து பேருவளை மற்றும் அழுத்கமை பிரதேசங்களில் காவல்துறையின் ஊடரங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.


அழுத்கமை தர்காநகரிலுள்ள முஸ்லிம் இனத்தவருக்குச் சொந்தமான கையடக்கத் தொலைபேசி விற்பனை நிலையத்துக்குச் சென்ற சிங்கள இளைஞர்கள் சிலரை நேற்று முன்நாள் அந்த விற்பனை நிலையத்தைச் சேர்ந்தவர்கள் தாக்கியுள்ளனர்.

தாங்கள் தொலைபேசியை வாங்கச் சென்றதாக சிங்கள இளைஞர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் அவர்கள் திருட வந்தவர்கள் என நினைத்துத் தாக்கியதாக விற்பனை நிலையத்திலுள்ளவர்கள் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தையடுத்து இரு இனத்தவர்களுக்கும் இடையில் மோதல் நடைபெற்று பின்னர் நிலைமை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது. எனினும் மீண்டும் இவ்விருசாராருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது.

இதையடுத்து நேற்று நண்பகல் முதல் பேருவளை மற்றும் அழுத்கம பிரதேசங்களில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது

<b><i>தகவல் மூலம்- புதினம்.கொம்</i></b>
"
"
Reply


Messages In This Thread
பேருவளை - அழுத்கமை பிரதேசத்தில் ஊடரங்குச் சட்டம் - by மேகநாதன் - 01-26-2006, 08:37 PM
[No subject] - by மேகநாதன் - 01-26-2006, 08:41 PM
[No subject] - by மேகநாதன் - 01-28-2006, 04:58 AM
[No subject] - by தூயவன் - 01-28-2006, 05:09 AM

Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)