Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அமைதிமுயற்சி - பின்தொடரும் சிங்களத்தின் சீண்டல்கள்
#1
<span style='color:red'><b>வெலிக்கந்தையில் சிறிலங்கா இராணுவத் தாக்குதலில் ஒரு போராளி வீரச்சாவு: விடுதலைப் புலிகள் கடும் கண்டனம் </b>
[வியாழக்கிழமை, 26 சனவரி 2006, 19:01 ஈழம்] [மட்டக்களப்பு நிருபர்]

மட்டக்களப்பு - பொலன்னறுவ வடமுனை எல்லையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னணி காவல் நிலை மீது சிறிலங்கா இராணுவ உதவியுடன் துணை ஆயுதக் குழுவினரால் நடத்தப்பட்ட ஊடுருவித் தாக்குதலில் ஒரு போராளி வீரச்சாவைத் தழுவியுள்ளார்.

தமது முன்னணி காவலரண் பகுதியில் வழமை போல் காலை நேர கண்காணிப்பில் போராளிகள் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது மோட்டார்க் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதில் வீரச்சாவடைந்தவர் போராளி மேஜர் கபிலன் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளும் பதில் தாக்குதலை நடத்தினர்.

இந்த பதில் தாக்குதலிலிருந்து இராணுவத்தினரையும் துணைப்படையையும் விடுவிக்க வெலிக்கந்த சிறிலங்கா இராணுவ முகாமிலிருந்து செல் தாக்குதல், விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதியை நோக்கி நடத்தப்பட்டதாக விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட அரசியல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்தத் தாக்குதல் தொடர்பாக இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் தயாமோகன் கூறினார்.

யுத்த நிறுத்த அமுலாக்கப் பேச்சுகளுக்கு விடுதலைப் புலிகள் இணங்கி 24 மணிநேரத்துக்குள் விடுதலைப் புலிகள் மீது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தத் தாக்குதலுக்கு விடுதலைப் புலிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

விடுதலைப் புலிகளின் சமாதான செயலகப் பணிப்பாளர் புலித்தேவன் இது தொடர்பில் கூறியதாவது:

கிழக்கில் எமது போராளிகள் மீதான இந்தத் தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறோம். வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவருவதாக ஒப்புக்கொண்டு இத்தகைய தாக்குதல்களை மேற்கொண்டு சிறிலங்கா அரசாங்கம் இரட்டை வேடமிட்டுச் செயல்படுகிறது.

சிறிலங்கா இராணுவ முகாமிலிருந்து எமது போராளிகள் தாக்குதல் நடத்தப்பட்டுள்ள நிலையிலும் நல்லெண்ண நடவடிக்கையாக நாம் சிறிலங்கா காவல்துறையினர் ஒருவரை இன்று விடுதலை செய்துள்ளோம் என்றார் புலித்தேவன்</span>.

<i><b>தகவல் மூலம்-புதினம்.கொம்</b></i>
"
"
Reply


Messages In This Thread
அமைதிமுயற்சி - பின்தொடரும் சிங்களத்தின் சீண்டல்கள் - by மேகநாதன் - 01-26-2006, 08:12 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)