Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பலஸ்தீனத் தேர்தலில் கமாஸ் வெற்றி
#2
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/41259000/jpg/_41259256_haniya_afp203body.jpg' border='0' alt='user posted image'>

எதிர்பாராத வெற்றிக்களிப்பில் கமாஸ்..!

கமாஸ் இயக்கம் 1987 இல் பலஸ்தீன தேசத்தில் இஸ்ரேலிய இராணுவ மற்றும் குடியேற்றக்காரர்களை வெளியேற்றவென்று அமைக்கப்பட்ட ஒரு தீவிரவாத அமைப்பாகும். இதன் தாக்குதல் அழுத்தத்தால் இஸ்ரேல் ஆக்கிரமிப் பலஸ்தீனத்தில் இருந்து முதலில் இஸ்ரேலிய குடியேற்றக்காரர்களும் அதன் பின் காசாவில் இருந்து கடந்த வருடம் இஸ்ரேலியப் படையினரும் வெளியேற்றப்பட்டனர். இந்த இயக்கத்தின் இக் கொள்கை வெற்றியே அதற்கு ஐரோப்பிய யூனியன் கண்காணிப்பாளர்களால் நேர்மையான தேர்தல் என்று கருதத்தக்க இந்தத் தேர்தலில் எதிர்பாராத வெற்றியை ஈட்டித்தந்திருக்கிறது..!

இஸ்ரேலில் நடத்தப்பட்ட பல தற்கொலைக் குண்டுத்தாக்குதலுக்கு கமாஸ் மீது இஸ்ரேல் குற்றம் சாட்டி இருந்ததும் அவ்வியக்கம் இஸ்ரேல் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகளால் பயங்கரவாத இயக்கம் என்று பட்டியலிடப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்க அம்சங்களாகும். பலஸ்தீன முன்னாள் அதிபர் யசீர் அரபாத் இஸ்ரேல் பலஸ்தீன ஒஸ்லோ உடன்படிக்கையின் பிரகாரம் ஆயுத வன்முறைகளைக் கைவிட்ட பின்னரும் பலஸ்தீன தேசத்தில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு நீடித்திருந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது. Idea

தகவல் மூலம் - பிபிசி.கொம்
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
[No subject] - by kuruvikal - 01-26-2006, 06:03 PM
[No subject] - by Nitharsan - 01-26-2006, 06:26 PM
[No subject] - by Mathan - 01-27-2006, 02:42 PM
[No subject] - by தூயவன் - 01-27-2006, 03:50 PM
[No subject] - by ukraj - 01-27-2006, 04:00 PM
[No subject] - by kuruvikal - 02-07-2006, 01:38 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)