Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கால் சென்டர் கலகல!
#1
ன்னிக்கு நிலைமையிலே வெரி ஹாட் வேலைகளில் ஒண்ணு கால் சென்டர் வேலை. நம்ம பைய ஒருத்தன், பேரு சுப்ரமணி. ஏதோ சில பல ஆங்கில வார்த்தைகள் பேசுவான். முக்கித் தக்கி ஒரு கால் சென்டர்ல வேலை கிடைச்சுடுச்சு. சில ஆயிரங்கள் சம்பளம்னு சொன்னவுடனே சுப்ரமணியின் பல்லெல்லாம் கொஞ்ச நேரம் வாயை விட்டு வெளிய வந்து சிரிச்சுட்டுப் போச்சு. அது எந்த மாதிரி கால் சென்டர் தெரியுமா...00007 -அப்படீங்கிற நம்பருக்கு யாருன்னாலும் போன் பண்ணி, "பீட்சா எங்க கிடைக்கும்?நம்பர் தாங்க!', "பரங்கிமலை ஜோதி தியேட்டர்ல ஷகிலா படம் ஓடுதா?' "என் இடது கால் சுண்டு விரல் சுளுக்கிக்கிச்சு. ஆம்புலன்ஸ் நம்பர் சொல்லுங்க' -இப்படி எதுன்னாலும் விசாரித்துத் தெரிஞ்சுக்கிற மாதிரியான சேவை பண்ணுற கால் சென்டர். ஒரு வாரம் டிரெய்னிங் எடுத்துட்டு, டியூட்டியில ஜாய்ன் பண்ணினான் சுப்ரமணி. முதல் நாள். காதுல ஹெட்போன், முன்னால் கம்ப்யூட்டர், சுத்திச் சுத்தி கேட்குற இங்கிலீஷ் வார்த்தைங்க...அப்படியே புல்லரிச்சுப் போய் உட்கார்ந்திருந்தான். அவனுக்கும் அழைப்பு வர ஆரம்பிச்சுது.

சுப்ரமணி : குட்மார்னிங். மே ஐ ஹெல்ப் யூ சார்?

எதிர்முனை: வணக்கமுங்க. நமக்கு இங்கிலிபீசெல்லாம் வராதுங்க. தமில்லயே பேசுங்க.

சுப்ரமணி : சொல்லுங்க சார். உங்களுக்கு என்ன உதவி வேணும்?

எதிர்முனை: எம் பேரு ஆண்டிங்க. ஊரு தூக்கநாக்கன் பாளையமுங்க. இங்க மெட்ராசுலதான் எம் மச்சான் மாரி இருக்கான். பாவி மவ, என் பொண்டாட்டி அவன் வெலாசம், போன் நம்பரு எழுதி வைச்சிருந்த சிட்டையைத் தொலைச்சுப்புட்டா. என் மச்சான் மாரியோட போன் நம்பரை சொல்லுங்களேன். புண்ணியமாப் போகும்.

சுப்ரமணி: சார், மிஸ்டர் மாரி எங்க வேலை பார்க்கிறாங்கன்னு சொல்ல முடியுமா?

எதிர்முனை: அவன் எங்க வேலை பாக்குறான். வெட்டிப் பய எங்கியாவது ஊர் மேய்ஞ்சுக்கினு இருப்பான். அது அவன் குடியிருக்கிற வூட்டுக்காரரோட நம்பரு.

சுப்ரமணி: வேற ஏதும் தகவல் தெரியுமா சார்?

எதிர்முனை: நம்ம தலிவரு ரசினி சிரிச்சாப்ல போஸ் கொடுக்காருல்ல. அந்த தியேட்டரு பக்கத்துல நின்னுதான் போன்ல பேசுறேன். எதிர்த்தாப்லயே அண்ணா கையைத் தூக்கிட்டு நிக்காருங்க. இந்த போன் கடை தம்பி கூட சிவப்புல கட்டம் போட்ட சொக்கா போட்டிருக்கு.

சுப்ரமணி: (கொஞ்சம் டென்சனாக) நீங்க எந்த ஏரியாவில இருக்கீங்க சார்? உங்க ரிலேட்டிவ் மிஸ்டர். மாரி எந்த ஏரியாவில தங்கி இருக்காரு?

எதிர்முனை: ஏ நீ என்ன விவரங்கெட்டவனா இருக்கியே. அதான் அண்ணா கையைத் தூக்கிட்டு நிக்காருன்னு எம்புட்டு அழகா அடையாளம் சொல்லுறேன். என் மச்சான் ஏதோ ஒரு நகர் இருக்காமே, அதோட பேரு கூட மூணெழுத்துல வரும். அங்க பிள்ளையாரு கோயில் தெருவில நாலு மாடிக் கட்டிடத்துல மொட்டை மாடியில குடியிருக்கான். அங்க போயிட்டாப் போதும். அவனோட கோடு போட்ட மஞ்ச அண்ட்ராயரு கொடியில காயும். அதை வைச்சு வீட்டைச் சுலபமா கண்டுபிடிச்சுருவேன். விலாசத்தைத் தெளிவா நிறுத்தி நிதானமா சொல்லு. எழுதிக்கிறேன். ஏ புள்ள...ஒரு துண்டு சிட்டை எடு.

சுப்ரமணி: ஸôரி சார். இன்னும் கொஞ்சம் விவரம் வேணும்.

எதிர்முனை: ஏல, பட்டணத்துல எல்லோரும் ஏமாத்துக்காரப் பயலுகளா இருக்கீக. நான் என்ன முட்டாப் பயலா...(பேசிக்கொண்டிருக்கும் போதே லைனைக் கட் செய்கிறான் சுப்ரமணி. மறுநொடியே அடுத்த அழைப்பு வருகிறது.)

சுப்ரமணி: குட்மார்னிங். மே ஐ ஹெல்ப் யூ சார்?

எதிர்முனை: குழிப்பணியாரம் எங்க கிடைக்கும்?

சுப்ரமணி: (பதட்டத்தில்) குழியில கிடைக்கும் சார்.

எதிர்முனை: என்ன மேன், நக்கலா?

சுப்ரமணி : ஸôரி சார், சொல்லுங்க சார். என்ன நம்பர் வேணும் சார்?

எதிர்முனை: எந்த ஹோட்டல்ல சுடச்சுட குழிப்பணியாரம் டோர் டெலிவரி பண்ணுவாங்களோ அந்த நம்பரைக் கொடு.

சுப்ரமணி: வெயிட் எ மூமெண்ட் சார்!(கம்ப்யூட்டரில் தேடிப்பார்த்து விட்டு) ஸôரி சார், குழிப்பணியாரம் சம்பந்தமா எங்ககிட்ட எந்த நம்பரும் இல்ல சார், பீட்சா நம்பர்தான் இருக்கு சார்.

எதிர்முனை: என்ன கஸ்டமர் சர்வீஸ் பண்ணுறீங்க? நான் இன்னிக்கு குழிப்பணியாரம் சாப்பிட்டே ஆகணும். நீ யாரு என்ன பீட்ஸô சாப்பிடச் சொல்லுறதுக்கு? ஏதாவது ஹோட்டல் நம்பர் கொடு மேன்.

சுப்ரமணி: 46456487. இது பரபர பவன் நம்பர் சார். டிரை பண்ணிப் பாருங்க சார்.

எதிர்முனை: அங்க இல்லாட்டி என்ன பண்ணுவேன். இன்னொரு நம்பரைக் கொடு மேன்.

சுப்ரமணி: 46464652. இது வருணன் இட்லி கடை நம்பர் சார். ப்ளீஸ் உங்க இ-மெயில் ஐ.டி. கொடுங்க சார்.

எதிர்முனை: எதுக்கு மேன்?

சுப்ரமணி: வாங்க வேண்டியது எங்க கடமை சார்.

எதிர்முனை: ஐ.டி. கொடுத்தா என்ன அதுல பணியாரத்தைச் சுடச் சுட அனுப்பி வைக்கப் போறீயா? போனை வை மேன்.

(லைன் கட் ஆகிறது. சுப்ரமணி பிபீ கண்டபடி எகிற அடுத்த அழைப்பு வருகிறது.)

சுப்ரமணி: குட்மார்னிங். மே ஐ ஹெல்ப் யூ சார்?

எதிர்முனை: ஆங்...வணக்கம். அது வந்து...ஆங்..

சுப்ரமணி: சொல்லுங்க சார். என்ன உதவி வேணும்?

எதிர்முனை: அது..என்னன்னா...போன் டயல் பண்ணுறப்ப ஞாபகம் இருந்துச்சு. அதுக்குள்ள மறந்துடுச்சு. தம்பி, நீ ஏதாவது கேட்டுக்கிட்டே வாயேன். எனக்கு ஞாபகம் வருதான்னு பார்க்குறேன்.

சுப்ரமணி: ஏதாவது தியேட்டர் நம்பர் வேணுமா சார்?

எரிமுனை: இல்ல தம்பி. நானே ஏதோ ஒரு தியேட்டர்லே இருந்துதான் பேசறேன்.

சுப்ரமணி: ஏதாவது கால் டாக்ஸி நம்பர் வேணுமா சார்?

எதிர்முனை: இல்லீயே. நானே கார்லதான வந்திருக்கேன்.

சுப்ரமணி: வேற என்ன நம்பர் வேணும் சார்?

எதிர்முனை: ஆங்...நியாபகம் வந்துடுச்சு. என்னோட வீட்டு நம்பரை மறந்துட்டேன். அது வந்து...

சுப்ரமணி: உங்க பெயர், அட்ரசைச் சொல்லுங்க சார். டைரக்டரியில பார்த்துச் சொல்லுறேன்.

எதிர்முனை: வேணாம். அது என்னோட செல்போன்லயே இருக்கும். பார்த்துக்கிறேன். ஏ...இரு. யார் நீ? அநாவசியமா எங்க வீட்டு நம்பரைக் கேட்குற. போனை வை. ராங் நம்பர்!

(அடுத்த அழைப்பு. சுப்ரமணி வெறுப்பின் உச்சக் கட்டத்தில் இருக்கிறான்)

சுப்ரமணி: சொல்லுங்க, என்ன வேணும்?

எதிர்முனை: இன்ஸ்டண்ட்டா, இலவசமா லவ் லெட்டர் எழுதிக் கொடுக்கறவங்க நம்பர் கிடைக்குமா?

சுப்ரமணி: நம்பர் 100-க்கு போன் பண்ணுடா வெண்ணை. அங்கதான் உங்க மாமனார் இருக்காரு. கை வலிக்க வலிக்க எழுதிக் கொடுப்பாரு. வைடா போனை!

(அடுத்த அழைப்பு)

சுப்ரமணி: ஹலோ, இன்னா வேணும்?

எதிர்முனை: ஏன்டா, அம்பி, நேத்து டீவியில் பரவை முனியம்மா வத்தக் குழம்பு வைக்கிறதுக்கு சொல்லிக் கொடுத்தாங்க. அடுப்புல குழம்பு கொதிக்குது. அதுல ஒரு டெüட். பரவை முனியம்மா நம்பர் கிடைக்குமா?

சுப்ரமணி: என்ன சந்தேகம்?

எதிர்முனை: குழம்புக்கு என்ன பொடி, எத்தனை ஸ்பூன் போடணும்னு கேக்கணும்?

சுப்ரமணி: ஆங்...ஏழெட்டு ஸ்பூன் சீயக்காய் பொடி போடு.

(அடுத்த அழைப்பு)

சுப்ரமணி: ஏய், என்ன வேணும்?

எதிர்முனை: நாலைஞ்சு இடத்துல வெடிகுண்டு வைக்க வேண்டியதிருக்கு. மலிவா வெடிகுண்டு தயாரிக்கிறவங்க நம்பர் வேணும்.

(சுப்ரமணி லைனைக் கட் செய்துவிட்டு, வேகமாக அங்கிருந்து எழுந்து, தன் மேனேஜர் அறைக்குச் செல்கிறான்.)

சுப்ரமணி: ஸôர். நான் என் வேலையை ரிசைன் பண்ணுறேன்.

மேனேஜர்: இன்னிக்குத்தானே ஜாய்ன் பண்ணுன. அதுக்குள்ள என்ன?

சுப்ரமணி: எனக்கு சந்தேகமா இருக்கு சார்.

மேனேஜர்: என்ன சந்தேகம்?

சுப்ரமணி: சோனியா காந்தி, அமர்சிங், வாஜ்பாயி, அத்வானி, லாலு பிரசாத் யாதவ் இவங்க எல்லாம் என் போனை ஒட்டுக் கேக்குறாங்க சார். நான் வரேன்.


கற்பனை : முகில்
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply


[-]
Quick Reply
Message
Type your reply to this message here.

Image Verification
Please enter the text contained within the image into the text box below it. This process is used to prevent automated spam bots.
Image Verification
(case insensitive)

Messages In This Thread
கால் சென்டர் கலகல! - by SUNDHAL - 01-26-2006, 03:43 AM
[No subject] - by வர்ணன் - 01-26-2006, 04:49 AM
[No subject] - by RaMa - 01-27-2006, 05:11 AM
[No subject] - by கீதா - 01-27-2006, 09:36 PM
[No subject] - by கறுப்பன் - 02-09-2006, 02:34 PM
[No subject] - by வினித் - 02-09-2006, 02:54 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)