01-26-2006, 02:32 AM
<b>மூதூரில் தமிழ் வர்த்தகர் சுட்டுக்கொலை </b>
திருகோணமலை மூதூரில் தமிழ் வர்த்தகரான தம்பிபிள்ளை செல்வராஜா (வயது 48) நேற்று புதன்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
சிறிலங்கா இராணுவ ஆக்கிரமிப்புப் பிரதேசத்தில் செவ்வாய்க்கிழமையிலிருந்து சுட்டுக் கொல்லப்பட்டுள்ள மூன்றாவது தமிழர் இவர்.
மூதூர் சந்தை அருகே தனது வீட்டுக்கு அருகாமையில் உள்ள ஒழுங்கையில் நேற்று இரவு 7.30 மணியளவில் தம்பிபிள்ளை செல்வராஜாவை அடையாளம் தெரியாத நபர்கள் சுட்டுக்கொன்றனர்.
சம்பவ இடத்துக்கு மூதூர் சிறிலங்கா காவல்துறையினர் சென்றனர். செல்வராஜாவின் உடல் மூதூர் மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலையடுத்து மூதூர் நகர தமிழ்க் குடும்பங்கள் அங்குள்ள தேவாலயங்களில் பாதுகாப்பு தேடி அகதிகளாகச் சென்றுள்ளனர்.
மூதூர் தமிழர்களின் பாதுகாப்புக்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அர படையினருக்கு திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.துரைரட்ணசிங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திருகோணமலை மாவட்ட சிறிலங்கா இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் திஸ்ஸ ஜயவர்த்தன, கிழக்குப் பிரதேச பிரதி காவல்துறை மா அதிபர் றோகான் அபயவர்த்தன, காவல்துறை அதிகாரி ஹெச்.என்.பி. அம்பனவெல ஆகியோருக்கு இந்த வேண்டுகோள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை நகரில் தமிழ் ஊடகவியலாளர் எஸ். சுகிர்தராஜன் மற்றும் மூதூரில் சுந்தரலிங்கம் ஆகியோர் நேற்றுமுன் நாள் செவ்வாய்க்கிழமை காலை 6 மணி முதல் 7.30 மணிக்குள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டனர்.
<i><b>தகவல் மூலம்-புதினம்.கொம்</b></i>

"
"
"