01-25-2006, 08:29 PM
<b>குறுக்குவழிகள் - 105
[b]Bulk Rename Utility</b>
இந்த மென்பொருள் டிஜிட்டல் கமெரா வைத்திருப்பவர்களுக்கு மிகவும் பிரயோசனமானது.பல நூறு பையில்களின் பெயர்களை ஒரேயடியாக பெயர் மாற்றம் செய்வதற்கு உதவும் இலவச மென்பொருள் இது.
கமெராவிலிருந்து படங்களை கணணிக்கு மாற்றும்பொழுது படங்களின் கீழ் பெயர்கள் ஒரே மாதிரியாக காணப்படும் (சில இலக்கங்களை தவிர). இது விரும்பத்தகாத ஒன்று. சில நேரங்களில் குழப்பத்தை ஏற்படுத்துகிறது)
இப்படியான நேரங்களில் எமக்கு உதவுவது மேற்கூறப்பட்ட மென்பொருளாகும்.
பெயர்களின் முன்பகுதியில், பின்பகுதியில் அல்லது இடையில் ஓரிரு எழுத்துக்களை நீக்கவோ, சேர்க்கவோ மாற்றவோ அல்லது பெயரோடு இலக்கங்களை வரிசைக்கிரகமாக சேர்க்கவோ இதனால் முடியும். இலங்களை 1 இலிருந்தல்லாமல் வேறொரு இலக்கத்திலிருந்தும் ஆரம்பிக்க முடியும். இப்படி பல வழிகளில் பெயர் மாற்றம் செய்ய இந்த மென்பொருள் உதவி செய்யும்.
இந்த மென்பொருளை இயக்க தோன்றும் ஒரே பெட்டியில் எல்லா வேலைகளையும் செய்து கொள்ளலாம். பார்க்க ஒரு பத்திரம் போல தோன்றும். தேவையில்லாதவற்றை நிரப்ப வேண்டியதில்லை. Preview உண்டு. பெயர் மாற்றம் செய்யவேண்டியதை நிரப்பி Rename பட்டனை கிளிக் பண்ணமுன்பாக preview வை பார்த்து திருத்தம் செய்து கொள்ளலாம். இந்த மென்பொருளை நான் பாவிக்கின்றேன்.
http://www.bulkrenameutility.co.uk/Main_Intro.php