01-25-2006, 07:19 PM
வணக்கம்...
கள உறுப்பினர்களை ஒருங்கிணைத்து, யாழ் களத்தில் ஒரு பட்டிமன்றத்தை ஒழுங்கமைத்து தனது பள்ளி வேலைகளுக்கு மத்தியிலும் மிகுந்த சிரமத்துக்கு மத்தியில் இரசிகை இந்த பட்டிமன்றத்தை நெறிப்படுத்துகிறார். தமிழர்களை ஒருங்கிணைத்து ஒருவேலையைச் செய்வது எவ்வளவு சிரமமான வேலையென்பது இந்தப் பட்டிமன்றத்திலும் தெளிவுபடத் தெரிகிறது. ஒரு பயனுள்ள விடயத்துக்கு உங்கள் ஒத்துழைப்பை வழங்குவதை விடுத்து ஆளாள் ஒவ்வொரு திக்கில் நிப்பது வருத்தமளிக்கிறது. எனவே அனைவரும் தயவுசெய்து ஒன்றிணைந்து பட்டிமன்றத்தை பயனுள்ளதாக நிறைவுசெய்ய பங்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இரசிகை ஆரம்பத்தில் பட்டிமன்றத்தை ஒழுங்கமைக்கும் பொழுதே எந்த அணியில் கருத்தாட விரும்புகிறீர்கள் என்று கேட்டிருந்தார். அவரவர் விரும்பிய அணியிலேயே விடப்பட்டனர். யாரையும் வற்புறுத்தி இரசிகை அணிபிரிக்கவில்லை என்பது அனைவருக்கும் தெரியும். இருந்தும் இப்படி பட்டிமன்றம் முடிவுறும் தருணத்தில் அவர் மாறுகிறார், இவர் மாறுகிறார் நானும் மாறவேண்டும் என்று கருதுவது அழகல்ல.
அதேபோல் நடுவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கும் பலரிடம் இரசிகை கேட்டிருந்தார். ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் கடமைகளை காரணம் காட்டி ஒதுங்கிக் கொண்டார்கள். தமிழினியும் தனது பள்ளிவேலைகளுக்கும், பரீட்சைகளுக்கும் நடுவில் தயங்கித் தயங்கி இரசிகையின் வெண்டுகோளுக்கு சம்மதித்தார். ஆரம்பத்திலேயே இது தனது முதல் முயற்சி/பயிற்சி என்றும் தெரிவித்திருந்தார். மற்றும், செல்வமுத்து அவர்கள் நடுவராக பங்குகொள்ள முடியாமல் இருந்த சந்தர்ப்பத்தில் தனியாக நின்று பொறுமையாக தனது கருத்துக்களை தமிழினி முன்வைத்திருந்தார். எனவே, அவரது இந்த ஒத்துழைப்புக்கும், சிறப்பாக அனைவரது கருத்துக்களையும் வாசித்து விளங்கிக்கொண்டு தொகுத்து வழங்குகிற திறனுக்கும் உரிய மரியாதையை அளியுங்கள்.
பூனைக்குட்டி, தயவுசெய்து குழப்பம் விளைவிக்காமல் உங்கள் அணியின் சார்பில் உங்கள் கருத்துக்களை முன்வையுங்கள். மற்றவர்கள் அணிமாறுவதை குறைசொல்லும் நீங்களே அணிமாறப்போவதாக சொல்வது சிரிப்பாக உள்ளது. மற்றும் நீங்கள் பட்டிமன்றத்தில் கருத்து வைப்பதும் வைக்காததும் உங்கள் பிரச்சனை. அதை நீங்கள் தான் தீர்மானிக்கவேண்டும். ஆனால் அதனை ஆரம்பத்திலேயே தீர்மானித்திருந்தால் இரசிகைக்கு சிரமங்கள், சிக்கல்கள் இல்லாமல் இருந்திருக்கும். நீங்களே முடிவெடுத்துக்கொள்ளுங்கள்.
தமிழினி, களத்தில் இறங்கிய பின் மற்றவர்களின் குற்றச்சாட்டுகளுக்கு அஞ்சாமல், உங்கள் மீது நம்பிக்கை வைத்து உங்கள் கருத்துக்களைத் தொடருங்கள். நாம் ஒவ்வொரு செயற்பாட்டுக்கும் பாராட்டுகள், குறைகூறல் எல்லாம் வந்துகொண்டுதான் இருக்கும். இதையெல்லாம் பொருட்படுத்தாமல் தொடருங்கள். இப்படிப் பார்த்தால் இன்று மட்டுறுத்துனர்களாக களத்தில் பணியாற்றுபவர்கள் எல்லோரும் எப்போதோ வெளியேறி இருக்கவேண்டும். தயங்காமல், பின்வாங்காமல், குறைகண்டு சோராமல் நடுவராக உங்கள் கருத்துக்களை முன்வைத்து பட்டிமன்றத்தை நிறைவுசெய்து வைக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். மீண்டும் உங்கள் சிறப்பான நடுவர் பணிக்கு பாராட்டுகளும் நன்றிகளும்.