01-25-2006, 06:00 PM
kurukaalapoovan Wrote:வெளிப்படையாகவே எனது செந்த கருத்தாக செல்கிறன்.
நீர் மடத்துறுத்தினராக எவற்றை தணிக்கை செய்ய வேண்டும் என்று எடுக்கும் தீர்மானங்களில் எனக்கு நம்பிக்கையில்லை. ஆகவே நீர் என்னுடைய கருத்துக்களை தணிக்கை செய்வதாக இருந்தால் தணிக்கை செய்யப்பட்டவற்றை தனிமடலில் அனுப்பி வீண்சச்சரவுகளை தவிர்த்துக் கொள்ள ஒத்துளைப்பீர் என்று நம்புறன்.
இந்த எதிர்பார்ப்பை <b>ஏற்கனவே</b> வேறு கள உறுப்பினர்கள் கொண்டு வந்தார்கள். அதன் பிரகாரம் சில மடத்துறுத்தினர்கள் முன்னர் அவ்வாறு தணிக்கை பற்றிய விபரங்களை தனிமடலில் அறிவித்திருந்தார்கள்.
நன்றி
வணக்கம் குறுக்காலபோவான்,
பிறமொழி ஆக்கங்கள் பிரிவில் உள்ள ஆரியர் தொடர்பான இரண்டு தலைப்புக்களில் பல கருத்துக்களை தனிமடல் மூலம் தொடர்பு கொண்டு அவர்களாகவே நீக்குமாறு கேட்டு வந்தேன். எனினும இம்முறை தனிப்பட்ட தாக்குதல்கள் எல்லை மீறியதாலும் பல உறுப்பினர்களின் பல கருத்துக்கள் நீக்கப்பட்டதாலும் அவற்றை ஒவ்வொரு உறுப்பினராக தொடர்பு கொண்டு நீக்குவது சாத்தியமற்றது என்பதால் அவை ஒட்டுமொத்தமாக நீக்கப்பட்டுள்ளன.
கள உறுப்பினர்களின் கருத்துக்கள் தணிக்கை செய்யப்பட வேண்டிய நிலை ஏற்படும் போது அவை தனிமடல் மூலமாக தொடர்பு கொண்டோ அல்லது நேரடியாகவோ நீக்கப்பட வேண்டிய அவசியம் ஏற்படுகின்றது. இதனை தவிர்க்க தயவு செய்து அனைத்து கள உறுப்பினர்களும் சுயதணிக்கையுடன் கருத்துக்களை முன்வையுங்கள் நன்றி.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

