01-25-2006, 10:33 AM
<span style='color:green'><b>விடுதலைப்புலிகள் சுவிற்சலாந்தில் பேசுவதற்கு விட்டுக் கொடுப்புடன் தயார்: தேசியத் தலைவர் எரிக் சோல்ஹெய்மிடம் தெரிவிப்பு! </b>
விடுதலைப்புலிகள் புரிந்துணர்வு உடன்படிக்கையை செம்மையாக அமுல்படுத்துவது தொடர்பாக பேசுவதற்கு தயாரெனவும் அந்தப் பேச்சுவார்த்தைகளை சுவிற்சலாந்தில் நடத்துவதற்கு விட்டுக் கொடுப்புடன் செயற்படுவதாகவும் அறிவித்துள்ளனர். இன்று நோர்வேயின் சமாதானத்துக்கான தூதுவரும் அபிவிருத்தி அமைச்சருமான எரிக் சோல்ஹெய்ம் அவர்களை நேரில் சந்தித்துப் பேசிய தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் இந்த நிலைப்பாட்டை அறிவித்துள்ளார்.
நோர்வே தூதுவருடனான சந்திப்பின் முடிவில் பத்திரிகையாளர் மாநாட்டை நடத்திய அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் இதனைத் தெரிவித்தார்.
விடுதலைப்புலிகள் சமாதான இலட்சியத்தில் என்றும் பற்றுறுதி கொண்டவர்கள் என்பதை தலைவர் இச்சந்திப்பில் விளக்கியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சுவிற்சலாந்தில் பேச்சுக்களை நடத்துவதற்கு இயல்பான சூழ்நிலையை சிறிலங்காவின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது அதிகாரத்தை பயன்படுத்தி ஏற்படுத்த வேண்டும் எனவும் இராணுவத்தினதும் அதன் ஒட்டுப்படைகளினதும் படுகொலைகள், அட்டூழியங்கள் நிறுத்தப்பட்ட வேண்டும் எனவும் விடுதலைப்புலிகள் இதில் கேட்டுள்ளனர்.
இந்தப் பேச்சுவார்த்தைகளில் விடுதலைப்புலிகள் தரப்பில் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம், அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன், கட்டளைத் தளபதி கேணல் ஜெயம், மட்டக்களப்பு அரசியல்துறை பொறுப்பாளர் இளந்திரையன் ஆகியோரும் திருமதி அடேல் பாலசிங்கம் அவர்களும் கலந்து கொள்வார்கள் என்று அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் தெரிவித்துள்ளார். </span>
<i><b>தகவல் மூலம்- ஈழநாதம் - மட்டக்களப்பு பதிப்பு</b></i>

"
"
"