01-25-2006, 09:24 AM
varnan Wrote:Mathan Wrote:<b>கன்சர்வேட்டிவ் கட்சியின் இலங்கை தொடர்பான கொள்கைகள் தமிழர் நலனுக்கு பாதகம் விளைவிக்க கூடியவை </b>
என்று கள நண்பர் ஒருவர் சொன்னார். இந்த தேர்தலில் போட்டியிட்ட தமிழர்கள் அனைவரும் தோல்வியடைந்துவிட்டதாகவும் அறிந்தேன். இது குறித்த மேலதிக தகவல்களை கனடிய நண்பர்கள் தாருங்களேன்
அப்பிடி ஒண்ணும் ஆகிவிடாது-
எந்த ஒரு நாட்டிற்கும்- வெளிதெரியா-வெளியுறவு கொள்கை ஒன்று இருக்கு- அதன் மீது அரசியல் கட்சிகளின் வெற்றிகள் செல்வாக்கு செலுத்த முடியாது!
புஷ் ஆட்சிக்கு வந்ததால்தான்- நெருக்கடி- உலக போராட்ட இயக்கங்களூக்கு வந்தது- என்று நினைப்பவர்கள்-அதை ஆரம்பித்துவைத்ததே கிளிங்டன் என்று புரிந்துகொண்டால் உண்மை புரியலாம்!
லிபரல் ஆட்சியில் இருந்தால் நல்லம்-
கொன்செவேர்டிவ்- வென்றால் - எமக்கு பாதகம் என்று நினைப்பவர்கள்- ஒன்றை நினைவு வைத்துக்கொள்ள முயற்சிக்கலாம்.
அது-இந்த கடும்போக்கு கட்சியின் மீது மாநிலங்கள் அளவில் பெரியதொரு வெறுப்பு உண்டாகி இருக்கிறது-
ப்ளொக்-கியுபெக்குவா- எனும் கட்சி மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற்றிருக்கிறது- ஆகவே- கியுபெக் மாநிலம்- மீண்டும் தன் பிரிந்து போகும் - கொள்கையை தீவிரபடுத்தும்- இதன் மூலம் உள் நாட்டு நெருக்கடி மோசமாகலாம்-
இதுக்குள்ள எங்கட பிரைச்சினை எல்லாம் கவனம் எடுக்க அவர்களூக்கு நேரம் வராது- வெயிட் அண்ட் சீ! 8)
கியூபெக் மாநிலம் உடனடியாக பிரிந்து போவதற்கு கோருவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. ஆனாலும் இதுவொரு நீறுபூத்த நெருப்பு. இவ்வருடம் இத்தேர்தல் வருவதற்கு முக்கிய காரணங்களில் அன்று கியூபெக் மாநிலம் பிரிந்து போவதை தடுப்பதற்கு செய்யப்பட்ட நடவடிக்கைகளில் ஊழல் இடம்பெற்றுஅதனை விசாரித்ததும் ஒரு காரணம். அதன் மூலம் லிபரல் அரசின் மீது மக்களை வெறுப்படைய வைத்து அதை தமக்கு சாதகமாக எதிர்க்கட்சிகள் பயன்படுத்தின.
அடுத்து இன்றைய நெருக்கடியான அரசியல் சூழலில் தனிப்பெரும்பான்மை இல்லாத அரசு ஒரு முக்கியமான விடயத்தில் தன்னை ஈடுபடுத்தி ஒரு இக்கட்டுக்குள் மாட்ட விரும்பாது என்றே எதிர்பார்க்கிறேன்.
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
<b>
</b>
.

