Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கொழும்பில் குண்டுவெடிப்பு
#16
<b>கொழும்பில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்பை அடுத்து மேல் மாகாணம் முழுவதும் சோதனை.</b>

கொழும்பில் நேற்று இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புகளை அடுத்து மேல் மாகாணம் முழுவதும் சோதனை நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.

காவல்துறையினருக்கு மேலதிகமாக படையினரும் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டனர்.எனினும் எவரும் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்படவில்லை என கொழும்பு குற்றத்தடுப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இந்த சோதனை நடவடிக்கையின் போது சில வீதிகள் மூடப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நேற்று இரவு 7.45 முதல் 9.15 க்கு இடைப்பட்ட நேரத்தில் பொரல்ல, நுகேகொட கல்கிஸ்ஸை கிரிபத்கொட, வத்தளை ஆகிய இடங்களில் இந்த குண்டுவெடிப்புகள் இடம்பெற்றன.

நேற்று இரவு 7.45 க்கு பொரல்ல பெண்கள் வைத்தியசாலைக்கு அருகில் குண்டு வெடிப்பு இடம்பெற்றது.எனினும் உயிர்சேதமோ அல்லது பொருட்சேதமோ ஏற்படவில்லை.

நுகெகொடை பழைய கெஸ்பாவ வீதி தொடரூந்து கடவையில் 8.10 அளவில் மற்றும் குண்டு வெடிப்பு சம்பவம் இடம்பெற்றது.

இதன்காரணமாக அந்த இடத்தில பாரிய குழி ஏற்பட்டது.

கொழும்பு கோட்டையில் இருந்து அவிசாவளைக்கு செல்லவிருந்த இரவு 8 மணி தொடரூந்து 8.30 அளவில் நுகெகொடை தொடரூந்து மையத்தை வந்தடையவிருந்தது.

இந்தநிலையில் இந்த தொடரூந்தை இலக்கு வைத்து குண்டு வெடிக்கவைக்கப்பட்டிருக்கலாமா என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இதனையடுத்து கல்கிஸ்ஸை மா ஹோட்டலுக்கு செல்லும் பாலத்திற்கு அருகில் இரவு 8.50 அளவில் குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளது.

இதனால் பாரிய குழி; அந்த இடத்தில் ஏற்பட்டுள்ளது.

கிரிபத்கொடையின் 155 பேரூந்து மையத்தில் இரவு 8.40 அளவிலும் வத்தளை பசளை களஞ்சிய பகுதியில் 8.20 அளவிலும் குண்டு வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

குறித்த தொடர் குண்டுவெடிப்புகள் தொடர்பில் இன்று இரசாயன பகுப்பாய்வு அறிக்கை பெறப்பட்ட பின்னரே குண்டுகள் குறித்து இறுதி தீர்மானத்திற்கு வரமுடியும் என கொழும்பு பிராந்தியத்திற்கு பொறுப்பான பிரதிகாவல் அதிபர் பூஜித் ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் குண்டு வெடிப்புகளை அடுத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த சில தொடரூந்து சேவைகள் இயல்புக்கு திரும்பியுள்ளதாக கொழம்பு கோட்டை தொடரூந்து மையம் அறிவித்துள்ளது.


<i><b>தகவல் மூலம்-பதிவு.கொம்</b></i>
"
"
Reply


Messages In This Thread
[No subject] - by Mathan - 01-24-2006, 05:29 PM
[No subject] - by Danklas - 01-24-2006, 05:32 PM
[No subject] - by narathar - 01-24-2006, 05:34 PM
[No subject] - by SUNDHAL - 01-24-2006, 05:34 PM
[No subject] - by Mathan - 01-24-2006, 05:35 PM
[No subject] - by Mathan - 01-24-2006, 05:37 PM
[No subject] - by Danklas - 01-24-2006, 05:51 PM
[No subject] - by Niththila - 01-24-2006, 06:04 PM
[No subject] - by kuruvikal - 01-24-2006, 06:06 PM
[No subject] - by மின்னல் - 01-24-2006, 06:58 PM
[No subject] - by மின்னல் - 01-24-2006, 07:00 PM
[No subject] - by கீதா - 01-24-2006, 10:00 PM
[No subject] - by தூயவன் - 01-25-2006, 05:02 AM
[No subject] - by மேகநாதன் - 01-25-2006, 05:25 AM
[No subject] - by மேகநாதன் - 01-25-2006, 05:47 AM
[No subject] - by MUGATHTHAR - 01-25-2006, 05:53 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)