Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தேசியத் தலைவர்- எரிக் சொல்ஹேம் சந்திப்பு
#5
[size=18]<b>மகிந்தரின் யோசனைகளுடன் சொல்ஹெய்ம் இன்று தேசியத் தலைவரைச் சந்திக்கிறார்.</b>

நோர்வேயின் அபிவிருத்தி அமைச்சரும் சிறப்புத் தூதுவருமான எரிச்சொல்ஹெய்ம் இன்று கிளிநொச்சி செல்கின்றார். அங்குதேசியத் தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்களை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். சிறிலங்காவின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை நேற்று அலரி மாளிகையில் சொல்ஹெய்ம் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். இந்தப் பேச்சுக்களில் தற்போதைய நெருக்கடி நிலை, நேரடிப் பேச்சுக்களை நடத்தவது தொடர்பிலான நாடு குறித்த சிறிலங்கா அரசின் நிலைப்பாடு போன்ற விடயங்கள் ஆராயப்பட்டன.

எனினும் விடுதலைப்புலிகளின் விருப்பம் போன்று ஒஸ்லோவில் பேச்சுக்களை நடாத்தவதற்கு மகிந்த ராஜபக் விரும்பவில்லை என்றும், இதனை சொல்ஹெய்மிடம் தெளிவு படுத்தியுள்ளதாகவும், தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

எனினும் இருவரும் நடத்திய பேச்சுக்கள் தொடர்பான விபரங்க ளை சிறிலங்கா அரசு உத்தியோக பூர்வமாகத் தெரிவிக்கவில்லை. மகிந்த ராஜபக் தெரிவித் திருக்கும் யோசனையுடன் செல்லும் சொல்ஹெய்ம் அவர்கள் தேசியத் தலைவரிடம் அவற்றைத் தெரிவிப்பார். இதன் பின்னர் விடுதலைப் புலிகளின் நிலைப்பாடு மற்றும் யோச னை தொடர்பாக கொழும்பு திரும்பியவுடன் சொல்ஹெய்ம் மகிந்த ராஜபக்சவிடம் தெரிவிக்கவுள்ளார்.

தேசியத் தலைவருடனான சந்திப்பின் போது மதியுரைஞர் கலாநிதி அன்ரன் பாலசிங்கம், தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட உயர்மட்டத்த லைவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

சொல்ஹெய்முடன் நோர்வேயின் சிறிலங்காவுக்கான தூதுவர் கான்ஸ் பிறஸ்கர் மற்றும் தூதரக அதிகாரிகளும் செல்லவுள்ளனர். இதேவேளை அண்மைக் காலமாக தமிழர் தாயகப் பகுதியில் படையினர் மற்றும் ஆயுதக் குழுக்களால் மேற்கொள்ளப்படும் தமிழ் மக்கள் மீதான படுகொலை, மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் சுட்டுக் கொல்லப்பட்டமை, திருமலையில் ஐந்து மாணவர்கள் படுகொலை, புங்குடுதீவில் தர்சினி என்ற இளம் பெண் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம், போன்ற அரச படையினரின் கொடூரச் செயற்பாடுகள் குறித்தும் சொல்ஹெய்மிடம் தமது ஆதங்கத்தை விடுதலைப்புலிகள் தெரிவிக்கவுள்ளனர்

<i><b>தகவல் மூலம்- ஈழநாதம் - மட்டக்களப்பு பதிப்பு</b></i>
"
"
Reply


Messages In This Thread
[No subject] - by மேகநாதன் - 01-25-2006, 05:11 AM
[No subject] - by மேகநாதன் - 01-25-2006, 05:30 AM
[No subject] - by மேகநாதன் - 01-25-2006, 05:35 AM
[No subject] - by மேகநாதன் - 01-25-2006, 05:41 AM
[No subject] - by மேகநாதன் - 01-25-2006, 07:14 AM
[No subject] - by மேகநாதன் - 01-25-2006, 08:08 AM
[No subject] - by Mathan - 01-25-2006, 09:28 AM
[No subject] - by sinnakuddy - 01-25-2006, 10:02 AM
[No subject] - by adsharan - 01-25-2006, 10:20 AM
[No subject] - by மேகநாதன் - 01-25-2006, 10:25 AM
[No subject] - by மேகநாதன் - 01-25-2006, 10:33 AM
[No subject] - by sri - 01-25-2006, 12:59 PM
[No subject] - by adsharan - 01-25-2006, 01:53 PM
[No subject] - by மேகநாதன் - 01-26-2006, 03:00 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)