Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தேசியத் தலைவர்- எரிக் சொல்ஹேம் சந்திப்பு
#4
<span style='color:green'><b>தேசியத் தலைவரிடம் மகிந்த ராஜபக்சவின் விசேட செய்தியை எடுத்துச் செல்கிறார் எரிக் சொல்ஹெய்ம் </b>

நோர்வே நாட்டின் இலங்கைக்கான சமாதான அமைச்சரும் சிறப்புத் தூதுவருமான எரிக் சொல்ஹெய்ம் இன்று கிளிநொச்சியில் சென்று தமிழீழ தேசியத் தலைவரைச் சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார்.

இந்த சந்திப்பு முற்பகலில் நடைபெறவுள்ளது.இதற்காக எரிக் சொல்ஹெய்ம் தலைமையிலான குழுவினர் இன்று முறபகல் கிளிநொச்சிக்கு புறப்பட்டு செல்லவுள்ளனர்.

இலங்கையில் தற்சமயம் ஏற்பட்டுள்ள போர் நிறுத்த உடன்பாட்டு மீதான அச்சம் தொடர்பிலேயே இன்றைய பேச்சுவார்த்தையின் போது அதிக கவனம் செலுத்தப்படவுள்ளது.

இந்த சந்திப்பின் போது எரிக்சொல்ஹெய்ம் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கையளித்த விசேட செய்தியை வேலுப்பிள்ளை பிரபாகரனிடம் கையளிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து கொழும்பு திரும்பும் எரிக்சொல்ஹெய்ம் மீண்டும் ஜனாதிபதியை சந்தித்து தமிழீழ விடுதலைப் புலிகளின் நிலைப்பாட்டை தெளிவுப்படுத்தவுள்ளார்.

நோர்வே அமைச்சருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கும் இடையில் நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது போர் நிறுத்த உடன்பாட்டின் அமுலாக்கம் மற்றும் சமாதான முனைப்புகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.</span>


<i><b>தகவல் மூலம்-பதிவு.கொம்</b></i>
"
"
Reply


Messages In This Thread
[No subject] - by மேகநாதன் - 01-25-2006, 05:11 AM
[No subject] - by மேகநாதன் - 01-25-2006, 05:30 AM
[No subject] - by மேகநாதன் - 01-25-2006, 05:35 AM
[No subject] - by மேகநாதன் - 01-25-2006, 05:41 AM
[No subject] - by மேகநாதன் - 01-25-2006, 07:14 AM
[No subject] - by மேகநாதன் - 01-25-2006, 08:08 AM
[No subject] - by Mathan - 01-25-2006, 09:28 AM
[No subject] - by sinnakuddy - 01-25-2006, 10:02 AM
[No subject] - by adsharan - 01-25-2006, 10:20 AM
[No subject] - by மேகநாதன் - 01-25-2006, 10:25 AM
[No subject] - by மேகநாதன் - 01-25-2006, 10:33 AM
[No subject] - by sri - 01-25-2006, 12:59 PM
[No subject] - by adsharan - 01-25-2006, 01:53 PM
[No subject] - by மேகநாதன் - 01-26-2006, 03:00 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)