01-25-2006, 05:25 AM
<b>கொழும்பில் 5 இடங்களில் குண்டு வெடிப்புகள்: பின்னணி என்ன? </b>
சிறிலங்கா தலைநகர் கொழும்பிலும் கொழும்பிற்கு வெளியேயும் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 8.10 மணி முதல் 9 மணிவரை 5 இடங்களில் குண்டு வெடிப்புகள் நடந்துள்ளன.
இதனால் அந்த பிரதேச மக்கள் மத்தியில் பதற்ற நிலை காணப்படுகின்றது.
பொரளையில் நாடாளுமன்றத்திற்கு செல்லும் வீதியில் (காசில் வீதிச் சந்தி) உள்ள குப்பைத் தொட்டியிலும் கல்கிசை மற்றும் நுகேகொடையில் கட்டிய ஹண்டிய தொடரூந்து பாதையில் 8.25 மணியளவிலும் கிரிபத்கொடையில் பேரூந்து தரிப்பிடத்திலும் ஹெந்தளையில் உரக் களஞ்சியத்திற்கு பின்புறமாகவும் இந்த குண்டுகள் வெடித்துள்ளன.
நுகேகொடை தொடரூந்து நிலையத்தை அவிசாவளை தொடரூந்து கடப்பதற்கு சற்று முன்பாக இந்தக் குண்டு வெடித்தது. இதில் தொடரூந்து பாதையினது கட்டைகள் சேதமடைந்தன. இதையடுத்து அந்தத் தொடரூந்து உடனடியாக நிறுத்தப்பட்டது.
இந்தக் குண்டுவெடிப்பால் நுகேகொட பகுதி இருளில் மூழ்கியது. அந்தப் பாதையினூடாகச் செல்லும் அனைத்து தொடரூந்து சேவைகளும் இரத்துச் செய்யப்பட்டன.
இதையடுத்து அனைத்து தொடரூந்து நிலையங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா தொடரூந்து சேவை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மூன்றாவது குண்டு கல்கிசை தொடரூந்து நிலையம் அருகே உணவகம் அருகில் 8.30 மணியளவில் வெடித்தது.
இதையடுத்து 30 ஆவது நிமிடத்தில் வத்தளையில் மக்கிளாரன்ஸ் வீதியில் 9 மணியளவில் குண்டு வெடித்தது. இந்தக் குண்டிவெடிப்பில் அந்த வீதியில் சிறிய அளவிலான சேதம் ஏற்பட்டது. எவருக்கும் காயமேற்படவில்லை.
அதன் பின்னர் கிரிபத்கொட நகரின் மத்திய பேரூந்து தரிப்பிடத்தில் குண்டு வெடித்தது.
இச்சம்பவங்கள் தொடர்பாக ஊடகவியலாளர்களிடம் பேசிய சிறிலங்கா காவல்துறை மா அதிபர் சந்திரா பெர்னாண்டோ, எவருக்கும் காயம் ஏற்படவில்லை. கொழும்பின் பாதுகாப்பு அதிகப்படுத்தப்பட்டுள்ளது. விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தொடர்ந்து இரவு முழுமைக்கும் சுற்றி வளைப்பு மற்றும் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.
சிறிலங்கா காவல்துறையினருக்கு உதவியாக இராணுவத்தினரும் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றும் சந்திரா பெர்னாண்டோ கூறினார்.
மேலும் இவை அதிசக்தி வாய்ந்த குண்டுகள் அல்ல என்றும் சிறிலங்கா காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்
<b>இந்தக் குண்டுவெடிப்புகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் எதுவித தொடர்பும் இல்லை என்றும் அண்மைய தேடுதல்கள் நடவடிக்கைகளைத் தடுக்கும் வகையில் சிறிலங்கா பாதாள உலகக் குழுவினரே இந்தக் குண்டுவெடிப்புகளை நடத்தியிருக்கக் கூடும் என்றும் சிறிலங்கா காவல்துறையின் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தத் தொடர் குண்டுவெடிப்புகளையடுத்து நகரில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றுக் கொண்டிருந்த நிகழ்வுகள் அனைத்தும் இரத்துச் செய்யப்பட்டு பொதுமக்கள் வீடுகளுக்கு விரைந்தனர்.
<i>[b]தகவல் மூலம்- புதினம்.கொம்</b></i>

"
"
"