01-25-2006, 05:11 AM
<span style='color:green'><b>இலங்கைத் தீவின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் 'கிளிநொச்சி சந்திப்பு' </b>
[புதன்கிழமை, 25 சனவரி 2006, 07:24 ஈழம்] [ச.விமலராஜா]
இலங்கைத் தீவின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கக் கூடிய சந்திப்பு இன்று புதன்கிழமை கிளிநொச்சியில் நடைபெற உள்ளது.
சிறிலங்கா அரசாங்கம் மட்டுமின்றி சர்வதேச சமூகத்தினது கண்களும் இன்றைய கிளிநொச்சி சந்திப்பின் முடிவுகளுக்காகக் காத்திருக்கின்றன.
யுத்த நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு 4 ஆண்டுகளாகிவிட்ட பின்பும் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் எதுவித சரத்துகளையும் நிறைவேற்றாமல் பேச்சுவார்த்தைகளுக்கு வந்த சமதரப்பாகிய விடுதலைப் புலிகள் இயக்கத்தை சர்வதேச அரசியல் சதிவலைக்குள் சிக்க வைக்கும் முயற்சிகளுக்கே சிறிலங்கா அரசாங்கங்கள் இதுவரை முன்னுரிமை கொடுத்துவந்தன.
இதன் உச்சகட்டமான சிறிலங்கா அரசாங்கத்தை கடும் போக்காளர்கள் இரு மாதங்களுக்கு முன்னதாகக் கைப்பற்றினர்.
இதையடுத்து இராணுவத்துக்கும் கடும் போக்காளர்களே நியமிக்கப்பட்டனர். நூற்றுக்கணக்கான தமிழர்களை கைது செய்து கொன்று புதைகுழியில் புதைத்த வரலாற்றுக் கொடூரமான \"செம்மணி\" சம்பவத்தின் காரணகர்த்தா சரத் பொன்சேகாவை சிறிலங்காவின் இராணுவத் தளபதியாக சிறிலங்கா அரச தலைவராகப் பொறுப்பேற்ற மகிந்த ராஜபக்ச நியமித்தார்.
சரத் பொன்சேகாவும் தனது பங்குக்கு இராணுவத்தின் கடும் போக்காளர்களைத் தேடிப் பிடித்து சிறிலங்கா இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள தமிழர் தாயகப் பகுதிகளின் பொறுப்புக்கு நியமித்தார்.
இதனால் மீண்டும் யுத்தச் சூழல் உருவாக்கப்பட்டுவிட்டது. அப்பாவி பொதுமக்கள் காணாமல் போவதும் கொலை செய்யப்படுவதும் வழமையாக நடந்தேறத் தொடங்கின.
4 ஆண்டுகால சமாதான காலத்தில் 20 ஆண்டுகால போரினாலும் ஆழிப்பேரலையாலும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு கிடைக்கவேண்டிய எதுவித புனரமைப்பும் கிடைக்காத நிலையில் விரக்தியின் உச்சத்தில் நின்று கொண்டு தங்களது தேசியத் தலைமையை "பொறுத்தது போதும்! பொங்கியெழு" என்று மக்கள் கட்டளையிட்டுக் கொண்டிருந்த சூழலில் கடும் போக்காளர்களின் செயற்பாடுகளும் தீவிரமடைந்தன.
இதற்கு எதிர்வினையாக எந்த ஆயுதங்களால் தாங்கள் சமாதான காலத்திலும் தாக்கப்பட்டும் கொல்லப்பட்டும் வீதிகளில் வீசியெறிப்பட்டார்களோ அதே ஆயுதங்களை ஏந்தி இலங்கை வரலாற்றின் புதிய திருப்பமாக மக்கள் யுத்தம் நடந்து கொண்டிருக்கின்றது.
சிறிலங்கா அரசாங்கத்துக்கும் தமிழ் மக்களுக்குமான நேரடி யுத்தம் இப்போது இலங்கையில் நடந்து கொண்டிருக்கிறது.
ஆகையால் இந்த மக்களின் தேசியத் தலைமையானது சர்வதேசச் சூழலுக்கு அமைய கால அவகாசம் கொடுத்து,பேச்சு மேசைக்கு அழைத்தது.
உரிய தீர்வுத் திட்டங்களை முன்வையுங்கள் என்று அழைப்பு விடுத்தது.
ஆனால் பேச்சுக்கான இடத்தையே பிரச்சனைக்குரிய விடயமாயக சிறிலங்காவின் பேரினவாதக் கடும்போக்கு அரசாங்கம் முன்வைக்கிற போது யுத்தம் தவிர்க்கப்பட முடியாதது எந்த நேரத்திலும் யுத்தம் வெடிக்கும் என்ற நிலையே ஏற்பட்டது.
இத்தகையச் சூழலில் இன்றைய கிளிநொச்சி சந்திப்பு நடைபெறுகிறது.
சிறிலங்கா அரசாங்கம் இதுவரை தெரிவித்திருந்த நிலைப்பாடுகளைத்தான் இப்போதும் இலங்கைக்கு வந்திருக்கக் கூடிய நோர்வே அமைச்சரும் சிறப்புத் தூதருமான எரிக் சொல்ஹெய்மிடம் தெரிவித்துள்ளது.
சிறிலங்கா அரசாங்கத்தின் நிலைப்பாடுகளில் நெகிழ்வுத் தன்மை இருப்பதான தோற்றத்தை உருவாக்கிக் கொண்டு தொடர்ந்து கடும் போக்கைக் கடைப்பிடித்து வரும் நிலையில் விடுதலைப் போராட்டத்தை மீளத் தொடங்குவதற்காக விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அறிவித்த கால அவகாச ஆண்டாகிய 2006 ஆம் ஆண்டும் தொடங்கியுள்ளது.
இந்த நிலையில் நடைபெறுகிற கிளிநொச்சி சந்திப்பை நோக்கி சர்வதேச சமூகத்தின் கண்கண் அகல விரிந்து இருக்கின்றன.
விடுதலைப் புலிகளின் உத்தியோகப்பூர்வமான, தெளிவான நிலைப்பாடு இன்று எரிக் சொல்ஹெய்மிடம் விளக்கப்பட உள்ளது.
சமாதானப் பேச்சுகள் முறிவடைந்து ஆழிப்பேரலை தாக்குதல் நடந்த காலத்தில் மீளமைப்புப் பணிகள் தொடர்பாக 2005 ஆம் ஆண்டு சனவரி 22 ஆம் நாள் நோர்வே வெளிவிவகார அமைச்சராக இருந்த ஜான் பீற்றர்சன் தலைமையிலான குழு, கிளிநொச்சியில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன்,அரசியல் ஆலோசகர் பாலசிங்கம் உள்ளிட்டோரைச் சந்தித்தது.
அதன் பின்னர் நிலைமைகள் இறுக்கமடைந்து யுத்த முனையில் நிற்கின்ற நிலையில் இன்றைய சந்திப்பு நடைபெறுகிறது.
இன்றைய கிளிநொச்சி சந்திப்பில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம், அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் ஆகியோருடன் நோர்வே அமைச்சரும் சிறப்புத் தூதுவருமான எரிக் சொல்ஹெய்ம் மற்றும் சிறிலங்காவுக்கான நோர்வே தூதுவர் ஹான்ஸ் பிறட்ஸ்கர் ஆகியோர் சந்திக்க உள்ளனர்.
இச்சந்திப்புகளின் முடிவுகள் ஊடகவியலாளர்களிடம் விளக்கப்பட உள்ளது</span>
<i><b>தகவல் மூலம்- புதினம்.கொம்</b></i>

"
"
"