01-24-2006, 04:33 PM
[size=18]<b>விடுதலைப் புலிகளின் தலைவருடன் எரிக் சொல்ஹெய்ம் நாளை சந்திப்பு </b>
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை இலங்கைக்கு வருகை தந்துள்ள நோர்வே அபிவிருத்தி அமைச்சரும் சிறப்புத் தூதுவருமான எரிக் சொல்ஹெய்ம் நாளை புதன்கிழமை சந்தித்துப் பேச உள்ளார்.
கிளிநொச்சியில் இச்சந்திப்பு நடைபெற உள்ளது.
இச்சந்திப்பில் சிறிலங்காவுக்கான நோர்வே தூதுவர் ஹான்ஸ் பிறட்ஸ்கர், விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம், விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் ஆகியோரும் பங்கேற்கின்றனர்.
சிறிலங்கா அரச தலைவராக மகிந்த பதவியேற்ற பின்பு சர்வதேச சமூகத்துடன் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் நடத்துகிற முதலாவது சந்திப்பு இதுவாகும்.
அதேபோன்று மகிந்த ராஜபக்ச அரச தலைவராக பதவியேற்ற பின்னர் கிளிநொச்சிக்கு எரிக் சொல்ஹெய்ம் மேற்கொள்கிற முதலாவது பயணம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் மக்கள் மீதான சிறிலங்கா இராணுவப் படுகொலைகள் அதிகரித்து யுத்த காலச் சூழலைப் போல் இடப்பெயர்வு அவலங்களை தமிழ் மக்கள் எதிர்கொண்டிருக்கும் நிலையில் நடைபெற உள்ள இச்சந்திப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்று கிளிநொச்சி செய்திகள் தெரிவிக்கின்றன
<i><b> தகவல் மூலம்- புதினம்.கொம்</b></i>

"
"
"