01-24-2006, 04:19 PM
<b>சுடரொளி நிருபர் படுகொலை தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்க இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் வலியுறுத்தல் </b>
சுடரொளி பத்திரிகையின் திருமலை மாவட்ட நிருபர் சுப்பிரமணியம் சுகிர்தராஜன் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதை இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் வன்மையாகக் கண்டித்துள்ளது.
சிறிலங்கா ஊடகத்துறை அமைச்சர் அனுரா பிரியதர்சன யாப்பாவுக்கு இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் அனுப்பிவைத்துள்ள மனு:
கொழும்பிலிருந்து வெளியாகும் சுடரொளி பத்திரிகையின் திருமலை மாவட்ட நிருபர் சுப்பிரமணியம் சுகிர்தராஜன் இன்று காலை திருமலையில் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்தை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
இவ்விடயத்தை உடனடி நடவடிக்கைக்காக உங்களுடைய கவனத்துக்குக் கொண்டு வருகின்றோம். தமிழ் ஊடகவியலாளர்களின் பாதுகாப்புக்கும், அவர்கள் சுதந்திரமான முறையில் செயற்படுவதற்குமான உத்தரவாதத்தை தமிழ்ப் பத்திரிகை ஆசிரியர்களுடனான சிறப்பு சந்திப்பின் போது தாங்கள் வழங்கி இரண்டு வார காலப் பகுதியிலேயே இந்த அவலமான சம்பவம் இராணுவக் கட்டுப்பாட்டுக்குட்பட்ட ஒரு பகுதியில் நடைபெற்றுள்ளது என்பதை தங்களுக்குச் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
கடந்த சில மாத காலமாக தமிழ் ஊடகவியலாளர்களை இலக்கு வைத்து ஆயுதப் படையினர் தாக்குதல்களையும், கெடுபிடிகளையும் தீவிரப்படுத்தியிருக்கும் நிலையில், சுடரொளி பத்திரிகையின் நிருபர் சுட்டுக்கொல்லப்பட்டிருப்பது தமிழ் ஊடகத்துறையினருக்குப் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கின்றது.
ஊடகத்துறை மூலமாக சுகிர்தராஜன் மேற்கொண்டு வரும் பணிகளைத் தடுத்து நிறுத்தும் நோக்கத்துடனேயே அவர் கொலை செய்யப்பட்டிருக்கின்றார் என்பது தெளிவாகத் தெரிகின்றது. தமிழ் ஊடகவியலாளர்கள் சுதந்திரமான முறையில் தமது பணியை மேற்கொள்வதற்கு விடுக்கப்பட்டுள்ள ஒரு மிகப்பெரிய சவாலாகவும் அச்சுறுத்தலாகவுமே நாம் இதனை கருதுகின்றோம்.
இது தொடர்பாக உடனடி நடவடிக்கையை வேண்டிநிற்கிறோம்.
இதற்கு முன்னர் தமிழ் ஊடகவியலாளர்கள் பலர் சுட்டுக்கொல்லப்பட்ட போது விசாரணைகள் உரிய முறையில் நடத்தப்படவும் இல்லை. குற்றவாளிகள் நீதி மன்றத்தின் முன்பாக நிறுத்தப்படவும் இல்லை. குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடுகின்றார்கள். சிறிலங்கா அரசின் இத்தகைய அணுகுமுறை காரணமாகவே ஊடகவியலாளர்கள் தொடர்ந்தும் பலியாக்கப்படுகின்றார்கள்.
சுகிர்தராஜனின் படுகொலை விடயத்திலும் இதே போன்ற அணுகுமுறையைக் கையாளமல் துரித கதியில் விசாரணைகளை நடத்தி குற்றவாளிகளை நீதியின் முன்பாக நிறுத்துவதை ஊடகத்துறை அமைச்சர் என்ற முறையில் தாங்கள் உறுதி செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றோம்.
இது தொடர்பான வாக்குறுதிகளுக்கு அப்பால் செயலளவில் உடன் நடவடிக்கைகளை மேற்கொள்ளாத வரையில் தமிழ் ஊடகவியலாளர்கள் அச்சத்துடன் தமது பணிகளை மேற்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளார்கள் என்பதையும் சுட்டிக்காட்டவிரும்புகின்றோம்.
தமிழ் ஊடகவியலாளர்கள் சுதந்திரமாகப் பணியாற்றுவதையும், ஊடகச் சுதந்திரத்தையும் உறுதிப்படுத்தும் வகையில் அமைச்சர் என்ற முறையில் எவ்வாறான நடவடிக்கையை தாங்கள் மேற்கொள்ளவுள்ளீர்கள் என்பதையும் அறிந்துகொள்ள விரும்புகின்றோம் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
<i><b>தகவல் மூலம்-புதினம்.கொம்</b></i>

"
"
"