01-24-2006, 01:59 PM
ஈழத் தமிழ்மக்களுக்கு ஆதரவு தரும் வை.கோ , இராமதாஸ் போன்றவர்களுக்கு அவர்களின் கட்சி ரீதியாக தனிப்பட்ட செல்வாக்கு என்பது கிடையாது. அவர்களால் தி.மு.க அல்லது அ.தி.மு.க போன்ற செல்வாக்கான கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடும் போது மட்டுமே சில ஆசனங்களை கைப்பற்ற முடிந்திருக்கின்றது. ஆனால் தனித்துப் போட்டியிட்ட போது டெபாசிட்டை கூட மீட்க முடியாத நிலையே இன்றும் தொடர்கின்றது. வை.கோ தி.மு.க கூட்டணியிலிருப்பதால் தான் இவ்வளவு சுதந்திரமாக அவரால் செயற் பட முடிகின்றது. ஆனால் அ.தி.மு.கவுடன் கூட்டணி அமைத்தால் வாய்மூடி மௌனியாகவே இருக்க வேண்டும். மீறினால் கஞ்சா வழக்குகள் போட்டாவது ஜெயலலிதா உள்ளே தள்ளிவிடுவார்.
<i><b> </b>
</i>
</i>

