Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஓரு போராளியின் ஆக்கம்
#2
பேச்சை இடையில் நிறத்தியவன் பொறப்பாளரின் முகத்தைப்பார்த்து ஏதோ புரிந்தவனாக ஏன்ஏன் தம்பி கூட்டிக்கொண்டு போகப்போறியளோ கொண்டுபோய் என்ன செய்யப்போறியள் பொறுப்பாளர் நிமிர்ந்து அண்ணை கோவிக்காதேங்கோ இது உங்கட பிழையில்லைஇ எங்கட பிழைஇ எங்கட தலைவர் தனிய எங்கட சனத்தை அழிக்கவாற எதிரியோட மட்டும் சண்டைபோடவில்லை. அப்பா. அம்மா இல்லாத அனாதைகளாகத் தமிழீழத் தேசத்தில் யாரும் இருக்கக்கூடாதுஎன்று செஞ்சோலைஇ அறிவச்சோலைஇ புனிதபுூமிஇ பாரதி இல்லம்இ குருகுலம்இ காந்தி இல்லம் இப்படி எத்தனை இடமெல்லாம் உருவாக்கி எங்கட மக்களுக்காகத்தானே ஒருதாயாகி அன்போடு அரவணைத்துப் பார்க்கிறார். அதில ஒரு இடம் இவனுக்கம் உண்டு. நான் இனி இவனை இங்கே விட்டிட்டுப்போக மாட்டன். தயவுசெய்து என்னுடன் அனுப்புங்கோ என்று முகத்தைத் திருப்பி சிவராசா அண்ணனைக் கேட்கவும் சிவராசா அண்ணன் மகனைப்பார்த்து போகப்போறியே என்று கேட்கவும் பொறுப்பாளரை இறுக அணைத்தபடி தம்பி ஓம் நான் மாமாவோடை போகப்போறன் என்றான் தம்பி சிவகுமார். மட்டற்ற மகிழ்வோடு அவர்களிடம் இருந்து விடைபெற்றவன் இருவரையும் மோட்டார் சைக்கிளில் ஏற்றிவந்து சிவராசா அண்ணனை வீட்டில் விட்டிட்டு தம்பி அப்பாவிடம் சொல்லிப்போட்டு வா என்றான். தகப்பன் குனிந்து முகத்தைக் கொடுக்க இரண்டு கன்னங்களிலும் தனது பிஞ்சுமுகம் புதைத்து முத்தமிட்டுச் சிறகுவிரித்த பறவையாக ஒரு புதுத்தெம்புடன் ஓடிவந்து பொறுப்பாளருடன் புறப்பட்டான். முகாம்வரும்வரை தம்பி நீபடிக்க வேணுமடா நல்லாப்படிச்சு பெரிய மனிதனாக வரவேணுமடா தலைவர் மாமா இரக்கிறார். நீ ஒருத்தருக்கும் பயப்படக்கூடாது என்று அறிவுரை கூறியபடி முகாமுக்குவந்து நின்று சக போராளிகளிடம் இவருக்குரிய அனைத்து ஏற்பாடுகளையும் ஒழுங்கு செய்யும்படி பணித்துவிட்டு மிகவேகமாக விரைந்து சென்று தமிழர் புனர்வாழ்வுக்கழகம் நடத்தும் காந்தி இல்லத்தில் அவனை இணைப்பதற்கான அனுமதியை அதன் நிறைவேற்றப் பணிப்பாளர் திரு. கே. பி. றெஜியிடம் அவனது வரலாற்றைகூறி அனுமதி பெற்றுவந்து சிவகுமாரை அழைத்து தம்பி நீங்கள் காந்தி இல்லம் சிறுவர் இல்லத்தில் நின்று படிக்கப் போறியள். மாமா அடிக்கடி அங்கே வருவேன்.

பிள்ளை கவனமாக நின்று படிக்க வேணும். சரியோஇ ஓம் மாமா நான் படிக்க வேணும் சிரித்தபடி தலையை ஆட்டி ஆட்டிப் பதிலளித்தான். இன்று அவன் ஆண்டு ஏழு படிக்கும் மாணவனாக காந்தி இல்லத்தில் ஒருவனாகப் படிக்கின்றான். திடீரென ஒருநாள் பொறுப்பாளரிடம் ஒருவன் வந்து நின்றான். அண்ணே வணக்கம்இ நான் தமிழ்ச்செல்வனிடம் இருந்து வருகிறேன் ஓம் தெரியும் என்ன விசயம் இல்லயண்ணே எங்கடை தலைவர் எல்லைப்படையில் வீரச்சாவடைந்த தெய்வானை அம்மாவின் மகன் இப்ப என்ன செய்கிறார் என்று விளக்கமாக அறிக்கை கேட்டிருக்கிறார். அதுதான் வீட்டைபோன நாங்கள் நீங்கள் கூட்டிவந்ததாக இழுத்தபடி முடித்தான். ஓமோம் கூட்டிவந்திருக்கிறேன். அவன் இப்ப. கதையைச்சொல்லி அவனை அனுப்பியதும் திகைத்து நின்றான். பொறுப்பாளர் தலைவருக்கு இருக்கின்ற இத்தனை வேலைச்சுமைகளுக்குள்ளேயும் அந்த அம்மாவின் வீரச்சாவு அவளுடைய மகன் இப்ப என்ன செய்கிறான் என்று அவர் கேட்டுள்ளாரே உண்மையிலே மக்கள் மிகவும் கொடுத்துவைத்தவர்கள் இப்படி ஒரு தலைமையைப் பெறுவதற்கு கோடானகோடி புண்ணியம் செய்திருக்க வேண்டும். இவருடைய காலத்தில் தமிழினம் நிச்சயமாக விடுதலை பெற்றே தீரும். தமிழ்பேசும் அனைத்து மக்களுக்கும் தாயாகித் தமிழினத்தை அழிக்கவரும் பகைவனுக்கு தீயாகிஇ எம்தலைவன் உள்ளவரை அஞ்சற்க என்றபடி எழுந்து சென்றான் பொறுப்பாளன்.

நிதர்சனம்
Reply


Messages In This Thread
[No subject] - by நர்மதா - 01-24-2006, 12:27 PM
[No subject] - by RaMa - 01-28-2006, 07:46 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)