Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சூனியக்காரக் கிழவிகள் தந்திரம் பலிக்குமா...?!
#4
ஜனவரி 20, 2003

ரணில் அரசை கவிழ்க்க ஜே.வி.பி சந்திரிகா கூட்டணி


பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே அரசைக் கவிழ்க்க, சிங்கள இனவாதக் கட்சியான ஜனதா விமுக்தி பெரமுனாவுடன் இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்காவின் மக்கள் விடுதலைக் கட்சி கூட்டணி அமைத்துள்ளது.

ரணில் அரசைக் கவிழ்த்துவிட்டு இரு கட்சிகளும் இணைந்து தேர்தலை சந்திப்பது, அல்லது ரணில் திடீர் தேர்தல் அறிவித்தால் கூட்டாக இணைந்து தேர்தலை சந்திப்பது என்று இரு தரப்பினரும் முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது.

இந்தப் புதிய கூட்டணிக்கு தேசப்பற்று தேசியக் கூட்டணி என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. பலத்த பாதுகாப்புக்கு இடையே கொழும்பு பண்டாரநாயகா சர்வதேச மாநாட்டு அரங்கில் இன்று இந்த இரு கட்சிகளின் கூட்டுக் கூட்டம் நடந்தது. இந்த நிகழ்ச்சி தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பப்பட்டது.

இக் கூட்டத்தில் இரு கட்சிகளும் இணைந்து செயல்படுவது என்று முடிவெடுக்கப்பட்டது. ஆனால், இந்தக் கூட்டணியின் செயல்பாடு எந்த மாதிரியாக இருக்கும் என இரு தரப்பினரும் வாய் திறக்க மறுத்துவிட்டனர்.

ஆனால், இரு கட்சிகளும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ரணில் தலைமையிலான அரசு இலங்கை மக்களிடையே ஏற்படுத்தியுள்ள சிக்கல்களைத் தீர்க்க அந்த அரசு உடனடியாக தோற்கடிக்கப்படுவது மிக அவசியமாகிறது.

நார்வே தலைமையிலான அமைதி முயற்சியால் விடுதலைப் புலிகளுக்குத் தான் லாபம் ஏற்பட்டுள்ளது. இந்த அமைதி முயற்சியால் இலங்கையின் இறையாண்மைக்கும் ஒற்றுமைக்கும் கடும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

இடைக்கால நிர்வாகம் தொடர்பான புலிகளின் திட்டத்தையும் ஏற்க முடியாது என்று கூறப்பட்டுள்ளது.

2001ம் ஆண்டிலும் இதே போல ஜே.வி.பியுடன் சந்திரிகா கூட்டணி சேர்ந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், அந்தக் கூட்டணி 5 வாரத்திலேயே முறிந்து போனது. அதைத் தொடர்ந்து நடந்த தேர்தலில் ரணில் கட்சி பெறும் வெற்றி பெற்றது.

Thatstamil.com
-------------
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
[No subject] - by Paranee - 01-19-2004, 01:19 PM
[No subject] - by Paranee - 01-19-2004, 01:21 PM
[No subject] - by kuruvikal - 01-20-2004, 10:57 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)