01-24-2006, 05:40 AM
Luckyluke Wrote:வைகோ ஒரு செல்லாக்காசு.... அவருக்கு தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக 5 லட்சம் வாக்குகள் இருந்தாலே பெரிய விஷயம்.... அவர் திமுக கூட்டணியின் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி வெற்றி பெறப்போவது திமுக கூட்டணி தான்..... காங்கிரஸ் தனியாக நின்றாலோ அல்லது அதிமுகவுடன் இணைந்தாலோ தான் திமுக மண்ணைக் கவ்வும்.....
அதைப் பற்றி எமக்குக் கவலையில்லை. கள்ளஓட்டைப் போட்டு, அல்லது மற்றவர்களின் மதிப்பை வைத்து வெற்றி பெறும் சாதாரண அரசியல்வாதியாகக் கூட இருக்கலாம்.
ஆனால் ஈழத்தமிழருக்காக குரல் கொடுக்கும் உண்மையானவர் அவர் என்பது மட்டும் தான் சொல்லமுடியும். மற்றவர்கள் போல் மதில்மேல் புூனையாகவோ, குள்ளநரித்தனம் மிக்கவராகவோ அவர் இருக்கிவில்லை. அந்த உணர்விற்கு நன்றிக்கடன் பட்டிருக்கின்றோம்.
அது எமக்குப் போதும்.
[size=14] ' '

