01-24-2006, 01:23 AM
இதை இணைக்கும்போது சூடான பரிமாறல்கள் இருக்குமென்று நினைத்தேன். ஆனால் அப்படியாக ஒன்றும் நடக்கவில்லை.
சென்ற ஆண்டு இறுதியில் ஐபிசி வானொலியில் சிறப்பு விருந்தினராக மொழியிலாளராகத் தன்னை அறிமுகம் செய்து கொண்ட கல்வியாளர் ஒருவர் தோசை பற்றி கூறியது என்னை அதிர்வுறச் செய்திருந்தது. தேவை கருதி அக்கருத்தை இதில் இணைக்கிறேன்.
வேர்ச் சொற்கள் பற்றி விபரித்த இவர் தன்னை பன்மொழி ஆற்றலாளராக வெளிப்படுத்தியிருந்தார்.
உதாரணமாக பிஸ்கற் என்பதை பிரெஞ்சு மொழியில் பிஸ், குவி எனப்பிரித்து பிஸ்- இரண்டு குவி-சூடாக்கல் அதாவது இருபக்கமும் சூடாக்குவது எனப் பொருள் என்றார்.
இதன்பின் தோசை எப்படி வந்தது தெரியுமா?என்று கேட்டுவிட்டு விளக்கினார்.
தோ- இரண்டு, சூடான சட்டியில் மாவை இடும் போது என்ன ஓசை வரும் 'சை' ஆக இருபக்கமும் சுடும் ஈரலிப்பான மாவிலானது தோசை என விளக்கினார்.
அன்று இதைக்கேட்டு யாருக்குச் சொல்லி அழுவதென அசந்துபோன பலரில் நானும் ஒருவன். இதற்கான மறுதலிப்புகளை இதுவரை நான் பார்க்கவில்லை. இனியாவது?