01-23-2006, 10:12 PM
[size=24]சித்தப்பா
[size=18]அன்பின் உருவானவரே!
பாசத்தின் உறைவிடமானவரே!
தந்தைக்கு நிகர் அற்றவரே!
தாய் போன்று எமை வளர்த்தவரே!
தந்தையின் உடன் பிறப்பே!-
தந்தை போன்றே எமை காத்தவரே!
அறியா வயதில்
அப்பா முகம் பார்க்க ஏங்கியதில்லை – என்
அப்பாவாக நீங்கள் இருந்தீங்கள் - ஆனால்
தந்தையுடன் வாழ்ந்தாலும்
தங்கள் முகம் பார்க்க ஏங்கதா நாள்லிலை
அன்னை மடி தேடியதில்லை
அன்னை உருவில் உங்கள் அன்பு
ஆசைப்பட்டதை வாங்கியும் தந்தீங்கள் - என்
சின்னச் சின்ன ஆசைகளை நிறைவேற்றியும் வைத்தீங்கள்
தப்புக்களை தட்டியும் கேட்டீங்கள்
வாழ்க்கையெனும் பாதையில் வீறு கொண்டு நடக்கவும் செய்தீர்கள்
தோல்விகளைக் கண்டு துவண்டிடும் போதெல்லாம் - அவை
தோல்வியல்ல வெற்றியின் அறிகுறி என்று உற்சாகப் படுத்தினீங்கள்
அன்னை சொல்ல கேட்டிருக்கிறேன் - எனக்காக
நீங்கள் கண் விழித்திருந்த இரவுகள் பற்றி
அயலார் சொல்லக் கேட்டிருக்கேன் - எனக்காக
நீங்கள் அர்ப்பணித்த உங்கள் வாழ்க்கைதனை
உண்மையிலே நீங்கள் உயர்ந்தவர்தான்
நீங்கள் மட்டுமா? உங்கள் தியாகங்களும் தான்
சித்தப்பா
[size=18]அன்பின் உருவானவரே!
பாசத்தின் உறைவிடமானவரே!
தந்தைக்கு நிகர் அற்றவரே!
தாய் போன்று எமை வளர்த்தவரே!
தந்தையின் உடன் பிறப்பே!-
தந்தை போன்றே எமை காத்தவரே!
அறியா வயதில்
அப்பா முகம் பார்க்க ஏங்கியதில்லை – என்
அப்பாவாக நீங்கள் இருந்தீங்கள் - ஆனால்
தந்தையுடன் வாழ்ந்தாலும்
தங்கள் முகம் பார்க்க ஏங்கதா நாள்லிலை
அன்னை மடி தேடியதில்லை
அன்னை உருவில் உங்கள் அன்பு
ஆசைப்பட்டதை வாங்கியும் தந்தீங்கள் - என்
சின்னச் சின்ன ஆசைகளை நிறைவேற்றியும் வைத்தீங்கள்
தப்புக்களை தட்டியும் கேட்டீங்கள்
வாழ்க்கையெனும் பாதையில் வீறு கொண்டு நடக்கவும் செய்தீர்கள்
தோல்விகளைக் கண்டு துவண்டிடும் போதெல்லாம் - அவை
தோல்வியல்ல வெற்றியின் அறிகுறி என்று உற்சாகப் படுத்தினீங்கள்
அன்னை சொல்ல கேட்டிருக்கிறேன் - எனக்காக
நீங்கள் கண் விழித்திருந்த இரவுகள் பற்றி
அயலார் சொல்லக் கேட்டிருக்கேன் - எனக்காக
நீங்கள் அர்ப்பணித்த உங்கள் வாழ்க்கைதனை
உண்மையிலே நீங்கள் உயர்ந்தவர்தான்
நீங்கள் மட்டுமா? உங்கள் தியாகங்களும் தான்
சித்தப்பா
>>>>******<<<<

