Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஜெயலலிதாவுடன் கை கோர்க்கும் வைகோ: இலங்கை பிரச்சனையில் இந்திய
#15
தமிழக அரசுக்கு உதவ பிரதமருக்கு வைகோ கோரிக்கை: அதிமுக கூட்டணிக்கு தயாராகிறார்

மழை, வெள்ள நிவாரணப் பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு கோரிய ரூ. 13,000 கோடியை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

இதுதொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அவர் ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், தேசிய துயர் துடைப்பு நிதிக்கான விதிமுறைகளை மாற்றி அமைக்க வேண்டும். தற்போது விதிமுறைகள் மிகவும் பழையவை, தற்காலத்திற்கு சற்றும் பொருந்தாத வகையில் உள்ளன.

கடந்த ஆண்டு இறுதியில் தமிழகம், கடுமையான மழை மற்றும் வெள்ளத்தின் சீற்றதிதற்கு இலக்கானது. நானும், எங்களது இயக்கத்தினரும் டெல்லியில் தங்களை நேரில் சந்தித்து மழை, வெள்ள துயர் துடைப்புப் பணிகளுக்கு தமிழக அரசு கோரிய நிதியை ஒதுக்குமாறு கோரினோம். தாங்களும் உடனடியாக ரூ. 1,000 கோடியை பரிவுடன் ஒதுக்கினீர்கள்.

நாங்கள் ஏற்கனவே கோரியபடி, தமிழக அரசு கோரியுள்ள ரூ. 13,000 கோடியை ஒதுக்கீடு செய்யுமாறு நான் மீண்டும் வலியுறுத்துகிறேன். இந்த இயற்கை சீற்றத்தால் தமிழக விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வளர்ந்த பயிர்கள் பயனற்றுப் போய் விட்டன. விவசாய நிலங்கள் பெருமளவில் சேதமடைந்துள்ளன.

அவர்களுக்கு போதுமான நிதியுதவி செய்யாவிட்டால், அவர்கள் சந்தித்துள்ள துன்பங்களிலிருந்தும், துயரங்களிலிருந்தும் மீளவே முடியாது.

எனவே, நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ. 8000மும், கரும்பு, வாழை போன்ற பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ. 10,000மும், தென்னை போன்ற நீண்ட காலப் பயிர்களுக்கு ரூ. 12,000மும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இயற்கை பேரிடர் நிவாரண நிதி பெறுவதற்கான விதிமுறைகளை மாற்றி அமைத்து தமிழக அரசு கோரியுள்ள ரூ. 13,000 கோடியை உடனடியாக வழங்க வேண்டும் என்று வைகோ தனது கடிதத்தில் கூறியுள்ளார்.

மழை, வெள்ள நிவாரண நிதி விஷயத்தில் திமுக கூட்டணியின் நிலைப்பாட்டை மீறி தமிழக அதிமுக அரசுக்கு உதவ வேண்டும் என்று பிரதமரை வைகோ வலியுறுத்தியிருப்பது அரசியல்ரீதியில் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.

அதிமுக கூட்டணிக்கு அடிபோடவே வைகோ இந்தக் கோரிக்கையை வைப்பதாகத் தெரிகிறது.

''எங்கள் லட்சியம் அரசியல் அதிகாரம்:

முன்னதாக விழுப்புரத்தில் மதிமுக தொண்டர்களுக்கான பயிற்சிப் பாசறைக் கூட்டம் நடந்தது. இதில் வைகோ பேசியதாவது:

அரசியல் பரபரப்பு அதிகம் மிகுந்திருக்கிற காலகட்டத்தில் இந்தக் கூட்டம் நடைபெறுகிறது. பாசறை என்றால் சிப்பாய்களை தயார்படுத்துவது என்று பொருள். நீங்களும் சிப்பாய்கள்தான்.

நாம் போர்க்களத்தில் இருக்கிறோம். போர்க்களத்தில் இருப்பவர்களுக்கு சமரசம் கிடையாது. சமரசம் செய்து கொள்ளவும் கூடாது. அப்படிச்செய்தால் அவன் சிப்பாயே அல்ல.

தமிழக மக்கள் அனைவரின் பார்வையும் நம் மீதே திரும்பியுள்ளது. கடந்த 12 ஆண்டுகளாக நாம் எத்தனையோ துயரங்களை, தோல்விகளை சந்தித்துள்ளோம். தாய் மொழிக்காக, இனத்திற்காக பாடுபட நினைக்கும் தொண்டர்கள் என்னுடன் வரலாம்.

எனது தோளில் உள்ள கருப்புத் துண்டை எடுத்து விட்டால் அதிக சீட் பெறலாம் என்று எனது நண்பர் ஒருவர் கூறினார். இந்தக் கருப்பு பெரியார் கொடுத்தது. இதை எடுத்தால்தான் சீட் கிடைக்கும் என்றால் அந்த சீட்டும் வேண்டாம், அப்படிப்பட்ட வெற்றியும் வேண்டாம்.

இன்று கௌரவமான இடம் (கூட்டணியில் கூடுதல் இடங்கள்) என்பது குறித்த விவாதம் நடந்து வருகிறது. நான் எனது தம்பிமார்களை பஞ்சாயத்து உறுப்பினர் பதவியிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர் என்ற நிலை வரை கொண்டு போய் வைப்பேன்.

நாம் கட்சி ஆரம்பித்து 13 ஆண்டுகள் ஆகின்றன. பஞ்ச பாண்டவர்களுக்கும் 13 ஆண்டுகள்தான் சிறைவாசம். வரப் போகிற தேர்தல் நமக்கு மறுமலர்ச்சி கொடுக்கும் தேர்தலாக இருக்கும். எனது தம்பிமார்களின் நலனை உணர்ந்து, புரிந்து அதற்கேற்ப செயல்படுவேன். 2001ம் ஆண்டு நாம் தேர்தலில் போட்டியிட்டபோது கடுமையான தோல்வியை சந்தித்தோம்.

அப்போது எந்தக் கூட்டணியுடன் (திமுக) பேச்சு நடத்தினோமோ அந்தக் கூட்டணியில் இருந்தவர்கள் (பாமக, கம்யூனிஸ்ட் கட்சிகள்), நாம் தனித்துப் போட்டியிடப் போவதை அறிந்து அதிமுகவுடன் போய் சேர்ந்து கொண்டார்கள்.

நாம் தியாகம் செய்யத் தயங்காதவர்கள். தியாகத்தால்தான் லட்சியத்தை அடைய முடியும். ஒரு மதிமுக தொண்டன் 100 பேருக்கு சமம், ஆயிரம் பேருக்கு சமம். நமது லட்சியம், அரசியல் அதிகாரத்தை அடைவது. அதில் என்ன தவறு இருக்க முடியும்? அதை அடையாமல் நாம் ஓயவும் மாட்டோம் என்றார் வைகோ.

திமுக தவிர பாமக மற்றும் கம்யூனிஸ்டுகளையும் மறைமுகமாகத் தாக்கியுள்ளார் வைகோ. இதனால் திமுக கூட்டணியில் அவர் தொடர்வது மேலும் சந்தேகமாகி வருகிறது.

திமுகவிடம் வைகோ 60 சீட்கள் கேட்பதாகக் கூறப்படுகிறது. பாமகவுக்கு இணையான சீட் (40 இடங்கள்) வேண்டும் என்று கோரியுள்ளதாகக் கூறுகின்றனர். இதில் ஒரு சீட் குறைந்தாலும் அதிமுகவுடன் கூட்டணி அமைக்கத் தயங்க மாட்டேன் என்பதை திமுகவிடம் அவர் தெரிவித்துவிட்டதாகத் தெரிகிறது.

Thats Tamil
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply


Messages In This Thread
[No subject] - by Danklas - 01-22-2006, 12:25 PM
[No subject] - by Mathuran - 01-22-2006, 12:52 PM
[No subject] - by Vasampu - 01-22-2006, 12:55 PM
[No subject] - by cannon - 01-22-2006, 01:30 PM
[No subject] - by kurukaalapoovan - 01-22-2006, 02:28 PM
[No subject] - by kuruvikal - 01-22-2006, 02:43 PM
[No subject] - by தூயவன் - 01-22-2006, 03:13 PM
[No subject] - by ¾õÀ¢Ô¨¼Â¡ý - 01-22-2006, 03:25 PM
[No subject] - by nirmalan - 01-22-2006, 03:25 PM
[No subject] - by cannon - 01-22-2006, 03:26 PM
[No subject] - by ¾õÀ¢Ô¨¼Â¡ý - 01-22-2006, 03:31 PM
[No subject] - by தூயவன் - 01-22-2006, 03:37 PM
[No subject] - by Mathuran - 01-22-2006, 05:02 PM
[No subject] - by Mathan - 01-23-2006, 06:51 AM
[No subject] - by Luckyluke - 01-23-2006, 07:39 AM
[No subject] - by Mathan - 01-23-2006, 07:42 AM
[No subject] - by Luckyluke - 01-23-2006, 08:04 AM
[No subject] - by வர்ணன் - 01-23-2006, 08:06 AM
[No subject] - by MEERA - 01-23-2006, 08:49 PM
[No subject] - by தூயவன் - 01-24-2006, 05:40 AM
[No subject] - by தூயவன் - 01-24-2006, 05:41 AM
[No subject] - by வர்ணன் - 01-24-2006, 06:15 AM
[No subject] - by தூயவன் - 01-24-2006, 06:19 AM
[No subject] - by கந்தப்பு - 01-24-2006, 07:05 AM
[No subject] - by வர்ணன் - 01-24-2006, 07:08 AM
[No subject] - by Luckyluke - 01-24-2006, 08:16 AM
[No subject] - by வர்ணன் - 01-24-2006, 08:25 AM
[No subject] - by Luckyluke - 01-24-2006, 10:36 AM
[No subject] - by Vasampu - 01-24-2006, 01:59 PM
[No subject] - by Luckyluke - 01-24-2006, 03:08 PM
[No subject] - by Danklas - 01-24-2006, 03:24 PM
[No subject] - by MEERA - 01-24-2006, 08:38 PM
[No subject] - by kurukaalapoovan - 01-24-2006, 10:26 PM
[No subject] - by அகிலன் - 01-25-2006, 01:03 AM
[No subject] - by தூயவன் - 01-25-2006, 04:35 AM
[No subject] - by தூயவன் - 01-25-2006, 04:42 AM
[No subject] - by வர்ணன் - 01-25-2006, 04:56 AM
[No subject] - by தூயவன் - 01-25-2006, 04:58 AM
[No subject] - by வர்ணன் - 01-25-2006, 05:12 AM
[No subject] - by Luckyluke - 01-25-2006, 08:46 AM
[No subject] - by தூயவன் - 01-25-2006, 01:57 PM
[No subject] - by வினித் - 01-25-2006, 03:33 PM
[No subject] - by Thala - 01-28-2006, 12:51 AM
[No subject] - by அருவி - 01-28-2006, 02:41 AM
[No subject] - by ஜெயதேவன் - 02-01-2006, 01:19 PM
[No subject] - by sinnappu - 02-01-2006, 11:59 PM
[No subject] - by அகிலன் - 02-02-2006, 12:43 AM
[No subject] - by தூயவன் - 02-02-2006, 04:49 AM
[No subject] - by Birundan - 02-06-2006, 12:18 PM
[No subject] - by Nellaiyan - 02-09-2006, 03:07 PM
[No subject] - by Mathan - 02-09-2006, 07:38 PM
[No subject] - by Mathan - 02-13-2006, 08:40 AM
[No subject] - by ¾õÀ¢Ô¨¼Â¡ý - 02-18-2006, 08:45 PM
[No subject] - by Thala - 02-18-2006, 09:03 PM
[No subject] - by ¾õÀ¢Ô¨¼Â¡ý - 02-18-2006, 09:23 PM
[No subject] - by Sukumaran - 02-19-2006, 06:34 PM
[No subject] - by Sukumaran - 02-19-2006, 06:35 PM
[No subject] - by Sukumaran - 02-19-2006, 06:37 PM
[No subject] - by Sukumaran - 02-19-2006, 06:41 PM
[No subject] - by கறுப்பன் - 02-20-2006, 06:08 PM
[No subject] - by வடிவேலு - 02-20-2006, 06:44 PM
[No subject] - by Mathan - 02-20-2006, 07:12 PM
[No subject] - by AJeevan - 02-20-2006, 11:04 PM
[No subject] - by Luckyluke - 02-21-2006, 01:13 PM
[No subject] - by அகிலன் - 02-21-2006, 03:53 PM
[No subject] - by Mathan - 02-21-2006, 05:16 PM
[No subject] - by Mathan - 02-21-2006, 05:25 PM
[No subject] - by Mathuran - 03-04-2006, 08:21 AM
[No subject] - by ¾õÀ¢Ô¨¼Â¡ý - 03-04-2006, 10:13 AM
[No subject] - by வினித் - 03-04-2006, 10:18 AM
[No subject] - by Thala - 03-04-2006, 01:27 PM
[No subject] - by sinnakuddy - 03-04-2006, 06:47 PM
[No subject] - by AJeevan - 03-04-2006, 09:40 PM
[No subject] - by விது - 03-04-2006, 10:12 PM
[No subject] - by AJeevan - 03-04-2006, 10:40 PM
[No subject] - by eelapirean - 03-05-2006, 12:18 AM
[No subject] - by adithadi - 03-05-2006, 02:56 AM
[No subject] - by AJeevan - 03-05-2006, 04:21 PM
[No subject] - by tamilini - 03-05-2006, 06:41 PM
[No subject] - by மின்னல் - 03-05-2006, 08:18 PM
[No subject] - by AJeevan - 03-05-2006, 10:30 PM
[No subject] - by கறுப்பி - 03-06-2006, 07:45 AM
[No subject] - by AJeevan - 03-07-2006, 09:06 PM
[No subject] - by sinnakuddy - 03-07-2006, 10:19 PM
[No subject] - by ஜெயதேவன் - 03-07-2006, 11:39 PM
[No subject] - by மின்னல் - 03-08-2006, 06:35 AM
[No subject] - by கறுப்பி - 03-10-2006, 04:05 PM
[No subject] - by விது - 03-10-2006, 08:51 PM
[No subject] - by putthan - 03-11-2006, 02:47 PM
[No subject] - by Aravinthan - 03-15-2006, 03:17 AM

Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)