Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மட்டக்களப்பில் குண்டுத் தாக்குதல்
#6
<b>மட்டக்களப்பில் கிளைமோர்த் தாக்குதல் - 3 படையினர் பலி - நால்வர் படுகாயம் </b>


இன்று காலை 7.45 மணியளவில் மட்டக்களப்பு மாவட்டம் ஊறணியில் இடம்பெற்ற கிளைமோர் குண்டுத் தாக்குதலில் மூன்று சிறிலங்கா இராணுவத்தினர் கொல்லப்பட்டதுடன், ராசிக் கும்பலின் உறுப்பினர் ஒருவர் உட்பட நான்கு படையினர் படுகாயமடைந்துள்ளனர்.
ஊறணி இராணுவ முகாமிற்கு முன்பாக, மட்டக்களப்பு - வாழைச்சேனை வீதியில், வீதிக் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த படையினர் மற்றும் ராசிக் கும்பலைச் சேர்ந்த தேசவிரோதிகளை இலக்கு வைத்தே இக் கிளைமோர் தாக்குதல் நடைபெற்றுள்ளது.

வீதியோர மரமொன்றில் பொருத்தி வைக்கப்பட்டிருந்த கிளைமோர் குண்டே, தொலைஇயக்கி(ரிமோட்) மூலம் வெடிக்க வைக்கப்பட்டுள்ளதாக தமது ஆரம்ப கட்ட விசாரணைகள் மூலம் தெரிய வந்திருப்பதாக ஸ்ரீலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவத்தையடுத்து மட்டக்களப்பு - வாழைச்சேனை பிரதான வீதி ஊடான போக்குவரத்துக்கள் பாதுகாப்புப் படையினரால் தடைசெய்யப்பட்டிருப்பதுடன், மேலதிக படையினர் அங்கு குவிக்கப்பட்டு பாரிய தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன

<i><b>தகவல் மூலம்- சங்கதி</b></i>
"
"
Reply


Messages In This Thread
[No subject] - by மேகநாதன் - 01-19-2006, 01:57 PM
[No subject] - by மேகநாதன் - 01-19-2006, 02:35 PM
[No subject] - by வினித் - 01-19-2006, 02:52 PM
[No subject] - by மேகநாதன் - 01-23-2006, 05:04 AM
[No subject] - by மேகநாதன் - 01-23-2006, 05:31 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)