Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மலையகத்தில் விரியும் சிங்களத்தின் கொடூரக் கரங்கள்
#1
<span style='color:red'><b>மலையகத்தில் பாரிய சுற்றிவளைப்புத்தேடுதல்! - நூற்றிற்கும் அதிகமான இளைஞர்கள் கைது </b>


மலையகப்பகுதிகளில் குறிப்பாக ஹற்றன் மற்றும் நுவரெலியாவில் நேற்று ஸ்ரீலங்கா படையினரால் பாரிய அளவில் தேடுதல் நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டு பலர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


நுவரெலியா பகுதிகளில் நேற்று சனிக்கிழமையும், இன்று ஞாயிற்றுக்கிழமையும் சிறப்புத் தேடுதல் நடவடிக்கையினை மேற்கொண்டு நூற்றுக்கும் அதிகமான இளைஞர்கள் விசாரணைகளுக்காக கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அடையாள அட்டை வைத்திராதவர்கள் மற்றும், சந்தேகத்திற்குரியவர்களையே தாம் கைது செய்துள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 60 பேர் வரையில் விடுவிக்கப்பட்டுவிட்டார்கள் எனவும், 40 பேர் வரையிலானவர்களை மேலதிக விசாரணைகளின் பின்னர் விடுதலை செய்யவுள்ளதாகவும் காவற்துறையினர் அறிவித்துள்ளனர்.</span>

<i><b>தகவல் மூலம்- சங்கதி</b></i>
"
"
Reply


Messages In This Thread
மலையகத்தில் விரியும் சிங்களத்தின் கொடூரக் கரங்கள் - by மேகநாதன் - 01-23-2006, 05:26 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)