Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
The Origins of Aryan People - History of Iran
#4
இலங்கையில் மகாவம்சத்தில் சிங்கத்தில் இருந்து மனிதன் வந்த கதையாக எப்படி திரிபுகள் நிகழ்ந்ததோ அதேபோல் அனைத்து வரலாற்று ஆவணங்களிலும் காலத்துக்கும் தேவைக்கும் ஏற்ப வரலாற்றுத் திரிபுகள் செருகல்கள் இடம்பெற்றிருக்கின்றன. எதுவும் 100% சரியானவை என்றில்லை.

இன்று உயிரியல் ஆகட்டும் தொல்பியல்துறையாகட்டும் உயிர்ச்சுவட்டு ஆய்வுகள் மூலம் பல அதிசயக்கத்தக்க உண்மைகளை வெளியிட்டு வருகின்றன. விலங்குப்பாகுபாட்டியலில் கூட சமீபத்திய மரபணு தொழில்நுட்ப ஆய்வுகள் பல புதிய மாற்றங்களைப் புகுத்தியுள்ளன. பழைய பாகுபாட்டு நிலைகளை மாற்றியமைத்துள்ளன. அவை நியாயமானவையாகக் கூட இருக்கின்றன..!

அந்த வகையில் சமீபத்தில் வெளியிடப்பட்டு இங்கு தரப்பட்ட ஆய்வறிக்கை இந்த விடயத்தில் ஒரு முதற்கட்ட ஆய்வுமுடிவுதான். அது குறித்து இறுதி முடிவெடுக்க குறித்த ஆய்வுகள் மீளப் பல தடவை செய்யப்பட வேண்டும். இன்று உலக அளவில் அவர்களால் செய்யப்பட்டது போன்ற பல ஆய்வுகள் செய்யப்பட்டு பல முடிவுகள் பழைய ஆய்வு முடிவுகளை மறுதலிக்கவல்லனவாகவும் நிறுவத்தக்கனவாகவும் வந்துள்ளன. அதற்கான சில உதாரணங்கள் முன்னைய விவாத இடத்தில் தரப்பட்டுள்ளது. இப்போ இந்த ஆய்வு முடிவும் கூட ஆரியர் படையெடுப்பை உறுதிப்படுத்தி இருந்தால் இங்கு குறித்த ஆய்வுக்கட்டுரை வந்திருக்கவே வாய்ப்பில்லை..!

அந்த வகையில் ஆரிய திராவிட வேற்றுமை உணர்வோடு குறித்த ஆய்வை நோக்காது...அவர்கள் அப்படி நோக்கிச் செய்திருந்தாலும், இல்லைச் செருகல் புகுத்திச் செய்திருந்தாலும் கூட.. அதில் பொதிந்திருக்க கூடிய சாத்தியமான உண்மைகளைக் கண்டறிய வேண்டும். அதற்கு மீளாய்வுகள் அவசியம். அதை விடுத்து நாம் அவை நமக்குப் பெருத்தமில்லாதவற்றைச் சொல்கின்றன என்று அவற்றை அடியோடு புறக்கணிக்க முடியாது. பழைய கருதுகோள்களை மாற்றத்தக்க அல்லது மீளச் சரிபார்க்கத்தக்க நவீன வழி வகைகள் இன்று இருக்கக் கூடியதாக அவற்றைச் செய்யாமல் வரலாற்றில் பழைய கருதுகோள்களை, கோட்பாடுகளை நமது தேவைக்காக இன்று கட்டிக்காத்துவிட்டு நாளை அது பிறிதொரு வழியில் தவறு என்று சுட்டிக்காட்டப்படும் போது அது நமக்குள்ளேயே பல முரண்பாடுகளுக்கு இட்டுசெல்லலாம்.

எனவேதான் குறித்த கட்டுரை தொடர்பில் நாம் கவனம் செலுத்தினோம். அந்த ஆய்வின் நம்பகத்தன்மையை அதிகரிக்க வேண்டின் அதை இந்தியாவிலோ அல்லது பிறிதொரு நடுநிலை நாட்டிலோ மீளச்செய்து முடிவுகளை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ள வேண்டும். அதைவிடுத்து அது ஒரு விஞ்ஞானப் புனை கதை என்று எடுத்த எடுப்பில் மறுதலிக்க முடியாது. காரணம் அவர்கள் கையாண்ட வழிமுறையில் வேறு ஆய்வுகள் பலவும் வேறிடங்களில் செய்யப்பட்டுள்ளன. அதற்கான ஆதாரங்களும் அங்குதரப்பட்டுள்ளது.

எனவே எமது சுயநலம் மட்டும் கருதாது பிராந்திய மானுடவியல் பண்பின் உண்மைத்தன்மை அறிய வேண்டின் சில கசப்பான உண்மைகளைக் கூட தரிசிக்க தயாராக இருக்க வேண்டும். இவற்றை நமது விருப்பத்துக்கு மாற்றி அமைப்பதால் அவையே உண்மை என்றாகிவிடாது..! காரணம் அவை விஞ்ஞான ரீதியான ஆராய்ச்சி முடிவுகளால் திருத்தமாகப் பெறப்படக் கூடியவையாக இருப்பதே..!

குறித்த ஆய்வுக்கட்டுரை சார்ந்த விடயங்களுக்கும்..அங்கு தொடரப்படும் விவாதங்களுக்கும்...இந்த இணைப்பைப் பாருங்கள்..

http://www.sepiamutiny.com/sepia/archives/002849.html

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
[No subject] - by Mathuran - 01-22-2006, 07:42 PM
[No subject] - by kurukaalapoovan - 01-22-2006, 08:02 PM
[No subject] - by kuruvikal - 01-22-2006, 10:45 PM
[No subject] - by Aaruran - 01-23-2006, 01:25 AM
[No subject] - by kuruvikal - 01-23-2006, 02:10 AM
[No subject] - by matharasi - 01-24-2006, 12:18 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)