Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நமக்கு வேண்டியது சமத்துவமா? சுதந்திரமா?
#1
<b>நமக்கு வேண்டியது சமத்துவமா? சுதந்திரமா?

இன்று நடந்து கொண்டிருப்பதில் எது நியாயம் எது அநியாயம் என்று முடிவெடுக்க முடியாது போனாலும் முன்வைக்கப்பட வேண்டியது அவசியமாகிறது. என் கண்ணோட்டத்தில் சுதந்திரம் நியாயம் அடிமைத்தனம் அநியாயம்

ஒரு குழுவினரோ அல்லது வர்கத்தினரோ இன்னொரு குழு அல்லது வர்க்கத்தின் மீது அடிமைத்தனத்தைத் திணிப்பது அநீதியான செயல். அவர்கள் பக்கம் சில நல்லவர்களும் இருக்கலாம் ஆனால் எல்லா நல்லவர்களுக்குமே தெளிவும் தீர்க்கதரிசனமும் இருக்குமென்று சொல்லிவிட முடியாது. பல சமயம் அவர்கள் குழம்பிப் போனவர்களாக இருக்கிறார்கள். என்ன செய்கிறோமென்று தெரியாமலேயே அவர்கள் அநியாயத்துக்குத் துணை போகின்றார்கள்.

சுதந்திரம் உச்சபட்சமான, மிக மிக முக்கியமான, கட்டாயமாக முடிவெடுக்கப்படவேண்டிய பிரச்சனையாக இன்று நிற்கிறது. சுதந்திரம் வளர்ந்து பூத்துக் குலுங்கும் ஒரு சமுதாயம், ஒரு தேசம் நமக்கு வேண்டும.; மனித சுதந்திரத்தைப் பறித்து அவனைப் படுகுழியில் பக்குவமாய் தள்ளுகின்ற சமுதாயம் நமக்கு வேண்டாம.; இதைத் தெளிவாகப் புரிந்து கொள்ள அனைவரும் முயற்சிக்க வேண்டும்.

அடிமைத் தனத்தை மற்றவர்கள் மீது சுமத்;துபவர்கள் ஒருபோதும் ''அடிமைத்தனம்"" என்ற சொல்லைப் பயன்படுத்துவதில்லை. அது நாறும் சொல். அது விலக்கப்பட வேண்டிய, வெறுக்கத்தக்க சொல்.; அடிமைப் படுகின்றவர்கள் உணர்ந்து கொள்ளாமலேயே அடிமைப்படுவதற்கு அவர்கள் ஒரு சொல்லைக் கண்டு பிடிப்பார்கள் ''சமத்துவம்"" என்பது தான் அந்தச்சொல.;;முழக்கம்.

இந்தச்சொல் தந்திரமானது. வஞ்சகமானது. இவர்கள் சுதந்திரப்பாதையிலிருந்து, மெல்லத் தந்திரமாக, நம்மை சமத்துவப் பாதைக்கு விலக்கி அழைத்துச் செல்கிறார்கள். மனிதர்களுக்கிடையில் சமத்துவத்தை நிலைநாட்டத் தாங்கள் நிற்பதாக அவர்கள் சொல்கிறார்கள்.

''சமத்துவம் தான் அடிப்படையானது, சமத்துவமில்லாமல் சுதந்திரம் சாத்தியமில்லை"" என்று அவர்கள் சொல்கிறார்கள். பலருக்கு இந்த வாதம் சரியென்று தான் படுகிறது. அதை அவர்கள் நம்பத் தொடங்குகின்றார்கள் . இதன் காரணமாக அவர்கள் சமத்துவத்திற்காக சுதந்திரத்தை இழக்கவும் தயாராகி விடுகிறார்கள்

சமத்துவம் நிலவினாற்தான் சுதந்திரம் கிடைக்கும்,வரப்போகும் சமத்துவத்திற்காக சுதந்திரத்தைத் தியாகம் செய்யலாம் என்ற வாதம் வினோதம் ஆனாது உண்மை நிலை என்னவென்றால் ஒரு முறை சுதந்திரத்தை இழந்துவிட்டால் அதை திரும்பப் பெறுவது முடியாத காரியம்.

யாருக்காவது தலை பெரிதாக இருக்கலாம் காலோ கையோ நீளமாக இருக்கலாம். அதை மற்றவர்கள் அளவுக்கு வெட்டிச் சமப்படுத்த வேண்டும். இந்த வேதனையான அறுவையைச் செய்யவேண்டுமானயல் உன் சுதந்திரத்தைப் பறித்துக் கொள்ள வேண்டி நேர்கின்றது. இது தர்க்க பூர்வமாகத்தான் தெரிகிறது.

ஆனால் எல்லோரையும் சமப்படுத்துகின்றவன் தான் மட்டும வெளியே, இவர்களுக்குச் சமமாக இல்லாமல் தனித்து நின்று விடுகின்றான் அவனுக்கு கைவிலங்கோ கால்விலங்கோ இல்லை இப்போது அவன் கையில் ஆயுதம் வேறு இருக்கிறது.

இப்போது கற்பனை செய்து பாருங்கள் அனேகமானோர் கைவிலங்கும் கால்விலங்கும் பூட்டப்பட்டு அடித்து முடிமாக்கப்பட்டு இருக்க சிலர் மட்டும் சுதந்திரமாக, சகல சக்தியும் பெற்று சொன்னவுடன் பிரயோகம் செய்ய சகல நவீன கருவிகளும் தயார் நிலையில் இருந்தால் அந்த சமுதாயம் எப்படிஇருக்கும் ? அந்த சூழலில் நீங்களும் என்னதான் செய்து விட முடியும்.

இன்னொன்றையும் நீங்கள் கவனிக்க வேண்டும் சுதந்திரம் என்பது இயல்பானதொரு சிறப்பம்சம் ஒவ்வொருவருக்கும் அதை அடைய உரிமையுண்டு. ஆனால் சமத்துவம் அப்படி இயல்பானதுமல்ல. சாத்தியமுமல்ல சமத்துவம் என்ற கருத்தே உளவியலுக்கு எதிரானது . எல்லா மனிதர்களும் சமமாக முடியாhது அவர்கள் சமாமகவும் இருக்கவில்லை அடிப்படையில் அவர்கள் சுதந்திரம் மிகத் தேவையான ஒன்று தான் தானாக இருக்கவும் தான் எப்படி ஆக வேண்டுமோ அப்படியே ஆகவும் ஒவ்வொருவருக்கும் சுதந்திரம்வேண்டும். தான் தானாக இருக்கும் வாய்ப்பைப் பெற ஒவ்வொருவருக்கும் பரிபூரண சுகந்திரம் வேண்டும்.

சுதந்திரம் இருந்தால் சமத்துவத்துவமின்மை மறைந்துவிடும் சுதந்திரத்துடன் சமத்துவம் வரும் என்று கூறவில்லை ஆனால் சமத்துவமின்மை குறைந்துவிடும் சமத்துவம் மக்கள் மீது திணிக்கப்பட்டால் சுதந்திரம் மெல்ல மங்கி மறைந்து விட நேரிடும் திணிக்கப்படுகின்ற எதுவும்மே அடிமைத்தனத்திற்கு சமமானது.

அடிப்படையில் இது நாம் மதிப்பிடுகளைத் தேர்ந்தேடுப்பதில் உள்ளது.என பார்வையில் தனி மணிதம் மிக உயர்ந்த மதிப்புடையவன் . ஆகவே தனிமனித சுதந்திரம் சிகரமானது. சுகந்திரமான தனி மனிதர்கள்தான் சமுதாயமாகின்றார்கள் தனி மனித சுதந்திரம் மறுக்கப்படும் பட்சத்தில் அங்கே வெறுப்பும் காய்மமும் உருவாகும் . தனி மனித சுதந்திரம் கிடைக்கும் வரை அது தொடர்ந்த கொண்டே போகும் சுதந்திரம், தனிமனதன், ஆன்மா, சமயம் ஆகியவை தாம் வாழ்வின் மதிப்பீடுகள். இந்த மதிப்பீடுகளை உணர்ந்து கொள்வோமாகில் ஒன்றுபட்;;;ட தேசம் வெகு தொலைவிலில்லை.



ஒஷோவின் சிந்தனைகளில் இருந்து.............கெளஷிகன்</b>
Reply


Messages In This Thread
நமக்கு வேண்டியது சமத் - by கெளஷிகன் - 01-19-2004, 09:42 AM
[No subject] - by vasisutha - 01-19-2004, 06:43 PM
[No subject] - by Mathivathanan - 01-19-2004, 10:35 PM
[No subject] - by kuruvikal - 01-20-2004, 10:43 AM
[No subject] - by Paranee - 01-20-2004, 01:02 PM
[No subject] - by Mathivathanan - 01-20-2004, 01:19 PM
[No subject] - by shanthy - 01-20-2004, 01:27 PM
[No subject] - by Mathivathanan - 01-20-2004, 01:28 PM
[No subject] - by kuruvikal - 01-20-2004, 01:43 PM
[No subject] - by Mathivathanan - 01-20-2004, 02:04 PM
[No subject] - by pepsi - 01-27-2004, 09:59 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)