01-22-2006, 05:02 PM
<b>ஈழத்தமிழரை பாதுகாக்க உடனடி நடவடிக்கை எடுங்கள்
சர்வ கட்சி மாநாட்டை கூட்டுமாறு ஜெயலலிதாவிடம் நெடுமாறன் வேண்டுகோள்</b>
இலங்கையில் இராணுவ அட்டூழியங்களுக்கு பலியாகிக் கொண்டிருக்கும் ஈழத் தமிழர்களை பாதுகாக்கவும் சிங்கள கடற்படையின் கொடூர தாக்குதல்களுக்கு இரையாகும் தமிழக மீனவர்களை பாதுகாக்கவும் சர்வ கட்சி மாநாடொன்றை உடனடியாக நடத்தி இந்திய அரசிற்கு அழுத்தம் கொடுக்குமாறு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் தமிழ் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ.நெடுமாறன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள வேண்டுகோளில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
பாதுகாப்பு உடன்பாடு என்னும் வஞ்சக வலை விரித்து இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கை அதில் சிக்க வைக்கும் நோக்கோடு டில்லி வந்த இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தனது திட்டம் நிறைவேறாது தோல்வியுடன் திரும்ப வேண்டியேற்பட்டது.
இவ்வாறான நிலையில், தமிழ்நாடு முதலமைச்சரான தங்களை சந்தித்து பேசுவதன் மூலம் தமிழ்நாடு தனக்கு ஆதரவாகவுள்ளதென உலக நாடுகளின் கண்களில் மண் தூவும் நோக்கத்துடன் தமிழ் நாட்டுக்கு விஜயம் செய்வதற்கு இலங்கை ஜனாதிபதி போட்ட திட்டமும் தவிடு பொடியானது. தமிழக மக்களின் கொதிப்புணர்வைப் புரிந்து கொண்டு மகிந்த ராஜபக்ஷவை சந்திக்க மறுத்த முதலமைச்சர் ஜெயலலிதாவை நாம் பாராட்டுகின்றோம்.
அயல் நாட்டு ஜனாதிபதியொருவரை மாநில முதல்வரொருவர் சந்திக்க மறுப்பது இதுவே முதல் தடவையாகும். துணிவுடன் செயற்பட்ட தமிழ் நாட்டு முதலமைச்சர் அனைவராலும் பாராட்டப்பட வேண்டியவர்.
இதேவேளை, சிங்கள கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து வேட்டையாடப்படுவதற்கு கண்டனம் தெரிவித்தும் கச்சதீவை திரும்ப பெற வேண்டுமென்பதை வலியுறுத்தியும் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு ஜெயலலிதா கடிதம் எழுதி தனது அக்கறையை வெளிப்படுத்தியுள்ளார்.
எனவே, தமிழ் நாடு முதலமைச்சர் இவற்றுடன் மட்டும் நின்று விடாமல் சிங்கள இராணுவ வெறியாட்டத்திற்கு இரையாகிக் கதறும் ஈழத்தமிழர்களின் துயர் துடைக்கும் பணியிலும் அவர் ஈடுபட வேண்டும்.
மறைந்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். தனது ஆட்சிக் காலத்தில் ஈழத் தமிழர் உரிமைப் போராட்டத்திற்கு பல வழிகளிலும் உதவினார். ஈழத் தமிழர்களுக்கு காவலராக விளங்கினார். அவர் வழியில் செயற்பட தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா முன்வர வேண்டும். சர்வகட்சிக் கூட்டமொன்றினை உடனடியாக கூட்டி, சிங்கள இராணுவ அட்டூழியங்களுக்கு இரையாகும் ஈழத் தமிழர் பிரச்சினை, சிங்கள கடற்படைக்கு இரையாகும் தமிழக மீனவர் பிரச்சினை குறித்து விவாதித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இந்திய அரசை வலியுறுத்த வேண்டும்.
ஆறு கோடி தமிழ் மக்களின் முதலமைச்சர் என்ற வகையில் இந்த வரலாற்றுக் கடமை ஜெயலலிதாவுக்கு உண்டு என்பதை நாம் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
நன்றி: தினக்குரல்