01-22-2006, 03:25 PM
வைகோவை தடம் தெரியாமல் அழிக்க வேண்டும் என்பதே கருணாநிதியின் குள்ளநரித்தனத் திட்டங்களில் ஒன்று. உண்மையான தம்பி பாசம் என்று ஒன்று கருணாநிதியிடம் இருந்திருக்குமானால், எதற்கு வைகோ தொடர்பான செய்திகளை தனது குடும்ப ஊடகமான சண் தொலைக்காட்சியில் இருட்டடிப்புச் செய்ய வேண்டும்?
உண்மை இதுதான், கருணாநிதி தனது வலைக்குள் வைகோவை விழுத்தி வைகோவின் ம.தி.மு.கவை ஒழிக்கவே திட்டமிடுகிறார்.
கட்சிக்காக அடிமட்டத்திலிருந்து உழைத்த எவருக்கும் கருணாநிதி பதவி கொடுத்ததாக வரலாறு இல்லை. எப்போதும் தனது குடும்ப அரசியலைத்தான் கருணாநிதி நடத்தி வருகிறார்.
உதாரணத்திற்கு முரசொலிமாறன் மறைந்தவுடன் திடீரென தயாநிதி மாறனை அரசியலுக்குள் கொண்டுவந்து மத்திய அமைச்சர் பதவியும் பெற்றுக் கொடுத்தார்.
அன்றிலிருந்து கட்சிக்காக உழைத்த தீப்பொறி ஆறுமுகம், ராதரவி, எஸ்.எஸ்.சந்திரனுக்கு கருணாநிதி செய்தவை யாவரும் அறிந்த ஒன்று. இப்படி எமக்கு தெரியாத பலர் கருணாநிதியின் குடும்ப அரசியலை வெறுத்து ஒதுங்கியிருப்பார்களோ யார் கண்டது.
கருணாநிதி அன்றிலிருந்து குடும்ப அரசியல்தான் நடத்தி வருகிறார். கருணாநிதிதான் எம்.ஜி.ஆரையும் உருவாக்கினார். ஜெயலலிதாவையும் உருவாக்கினார். அதேபோன்று வைகோவையும் இன்று உருவாக்கினார், உருவாக்கிக் கொண்டிருக்கிறார்.
எனது கருத்தின் படி ஜெயலலிதா உண்மையில் மிகவும் நேர்மையானவர். அதாவது அவர் ஒரு விடயத்தை எதிர்ப்பது என்று முடிவு எடுத்துவிட்டால் அதனை இறுதிவரை எதிர்த்து நிற்பவர். ஆதரவு வழங்குவது என்று முடிவு எடுத்துவிட்டால் இறுதி வரை ஆதரித்து நிற்பவர். ஆனால் கருணாநிதி அப்படிப்பட்டவரல்ல. கழுவுகிற மீனில் நழுவுகிற ஆசாமி.
அவர் ஒரு விடயத்திற்கு ஆதரவு கொடுக்கிறாரா இல்லையா என்பது அவருக்கே தெரியாது என்பதுடன், தான் எந்த நிலையில் இருப்பதாக அவருக்கே தெரியாது.
வைகோவை சரியாக கையாளாது விட்டால் எதிர்வரும் சட்டசபைத் தேர்தலில் கருணாநிதி மீண்டும் மண்கவ்வப் போவது என்பது உறுதி. கருணாநிதியால் தான் திமுகவுக்கே அழிவு காலம். ஆனால் கருணாநிதி இதனைப் பற்றி கவலைப்படப் போவதில்லை. ஏனெனில் கருணாநிதி அரசியலுக்கு வந்து பணத்தை சுரண்டி எடுத்துவிட்டால். தமிழ்நாட்டு அரசியலில் ஊழலை அறிமுகப்படுத்தியதே கருணநரிதிதான்.
இங்கே நான் ஜெயலலிதா நல்லவரென்று கூற வரவில்லை. கருணாநிதியை விட எவ்வளவோ மேல் ஜெயலலிதா. அண்மையில் கருணாநிதி விடுத்த ஈழத்தமிழர் ஆதரவு தொடர்பான அறிக்கையைக்கூட பாருங்கள். மத்திய அரசு ஈழத்தமிழர்கள் விடயத்தில் எடுக்கிற முடிவைத்தான் தமது கட்சி ஆதரிக்கும் எனில், நாளை ஈழத் தமிழர்களை அழிக்க இந்தியா உதவினால், இவர் ஆதரிப்பார் என்றுதானே அர்த்தம்?
வைகோ தூய்மையான அரசியல்வாதி என்று பெயரெடுத்தவர். அன்றும் இன்றும் என்றும் ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுப்பவர். அவர் எந்த கூட்டணிக்குச் சென்றாலும் தனது கொள்கையில் இம்மியளவும் குறையாது ஆதரவு வழங்குபவர்.
என்னைப் பொறுத்த வரை வைகோ, தமிழ்நாட்டு அரசியலில் அவரது கட்சியையும், அவரையும் நிலை நிறுத்த வேண்டுமானால் சந்தர்ப்பத்திற்கு அல்லது அன்றைய சூழ்நிலைக்கேற்ப எந்தக் கட்சிகளுடனும் கூட்டுச் சேர்வதில் தப்பேதும் இருப்பதாக தென்படவில்லை என்பதுடன், ஈழத் தமிழர்கள் தொடர்பான ஆதரவு நிலையில் சிறிது பாதிப்பு ஏற்பட்டாலும் கூட, தற்போது ஈழத் தமிழர்கள் தொடர்பான விழிப்புணர்வு நிலை தமிழகத் தமிழர்களிடம் பாரியளவில் ஏற்பட்டிருக்கிறது. ஆகவே வைகோவின் முடிவினால் எமக்கு பெரிதாக பாதிப்பு எதுவுமம் ஏற்படாது என்றே நம்புகிறேன்.

S.Nirmalan