Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
யுத்த முன்னெடுப்பில் சிங்களம்
#2
<b>எப்போது யுத்தம் வெடிக்கும்?: உச்சபட்ச 'மன உளைச்சலில்' சிறிலங்கா இராணுவம்</b>

இலங்கையில் எப்போது மீண்டும் யுத்தம் வெடிக்கும் என்பது குறித்து சிறிலங்கா இராணுவத்தினர் கடும் மன உளைச்சலில் இருப்பதாக கூறப்படுகிறது.


விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தமது மாவீரர் நாள் உரையில் 2006 ஆம் ஆண்டில் தமிழீழ விடுதலைப் போராட்டம் தொடங்கும் என்று அறிவித்தது முதல் ஊடகங்கள் பலவும் தாங்களே ஒரு காலக்கெடுவை நிர்ணயித்துக் கொண்டு கட்டுரைகளை எழுதின.

சில ஆய்வாளர்கள் கள நிலைமைகள், கடந்த கால யுத்த காலங்கள், புலிகளின் வியூகங்கள் என்பவற்றின் அடிப்படையிலும் ஆரூடங்களைக் கணித்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த தைப்பொங்கல் பண்டிகைகளின் முடிவில் விடுதலைப் புலிகள் யுத்தத்ததை தொடங்கிவிடுவார்கள் என்ற அச்சத்தில் சிறிலங்கா இராணுவத்தினர் முழு வீச்சில் யுத்தத்தை எதிர்நோக்கத் தயார்ப்படுத்தப்பட்டிருந்த தகவல்கள் வெளியாகி உள்ளன.

கடந்த திங்கட்கிழமை இரவு வடக்கு - கிழக்குப் பிரதேசங்களில் உள்ள சிறிலங்கா இராணுவத்தினர் யுத்தத்தை எதிர்கொள்ளும் வகையிலான முழுத் தயாரிப்புகளோடு உசார்படுத்தப்பட்டிருந்தனர்.

யுத்த நிறுத்த ஒப்பந்தம் அமுலுக்கு வந்த கடந்த 4 ஆண்டுகளில் முதல் முறையாக இத்தகைய உசார் நிலை ஏற்படுத்தப்பட்டிருந்தது. யுத்த களத் தயாரிப்புகளில் கடைசிநிலை சிப்பாய் முதல் உயர்நிலை அதிகாரிகள் வரை தீவிரமாக ஈடுபட்டிருந்தனர்.

யுத்த கள உடைகளை அனைவரும் அணிந்து கொண்டனர். தாக்குதல் நடத்தப்பட்டால் எதிர்த்தாக்குதலை மேற்கொள்வதற்காக தளபாடங்களும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தன.

அறிவிப்பு அறைகளும் செயற்பாட்டு அறைகளும் முழு வீச்சில் தயார்படுத்தப்பட்டிருந்தன. சிறிலங்கா விமானப் படை விமானங்கள், புலிகளின் பிரதேசங்களில் பறப்பதற்குத் தடை விதிக்கப்பட்டு இருந்தன. யுத்த தாங்கிகளும் ஆர்ட்டிலறிகளும் தயார்ப்படுத்தப்பட்டன.

யாழ். குடா நாட்டின் பலாலி தலைமையகம் இரவு நேர ஊரடங்கு உத்தரவை உடனே செயற்படுத்தியது. வடக்கின் மிகப் பிரதான இராணுவ தளம் என்பதால் முழு உசார் நிலையில் பலாலி விமான தளம் கண்காணிக்கப்பட்டிருந்தது. இத்தகைய இரவு நேர ஊரடங்கு உத்தரவுகள் யுத்த நிறுத்த ஒப்பந்தத்துக்கு முந்தைய காலங்களில் நாளாந்த நடைமுறையில் இருந்து வந்தது.

அரச படையணிகளுக்கான சங்கேத சொற்கள் பரிமாறப்பட்டன. இந்த சங்கேத சொற்கள் மாறி உச்சரிக்கப்படுகின்ற போது தாக்குதல் நடந்துவிட்டதாக கருத வேண்டும் என்று கட்டளை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

கடந்த சில வாரங்களாக சிறிலங்கா புலனாய்வுத் துறையினர், எந்த நேரத்திலும் புலிகள் கெரில்லாத் தாக்குதலை மேற்கொள்வார்கள் என்ற தகவல்களை அளித்து வருகிறார்கள்.

ஆனால் எதுவித தாக்குதல்களும் அப்படி நடைபெறவில்லை. அப்படியானால் இத்தகைய முன் எச்சரிக்கைகள் ஏன்? அரச படையினருக்கு விடுதலைப் புலிகள் ஏற்படுத்தியிருக்கும் மன உளைச்சல் நடவடிக்கையா என்று படைத்தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது?

அதேபோல் கொழும்பில் ஆயுதப் பேரூந்து ஊடுருவிட்டதாகவும் வதந்தி கிளப்பிவிடப்பட்டது. வர்த்தக மையங்களைத் தாக்கப் போவதாகவும் கல்வி நிறுவனங்களைத் தாக்கப் போவதாகவும் 5 ஆயிரம் புலிகள் ஊருடுவி கொழும்பை ஆக்கிரமித்துவிட்டதாகவுமான வதந்திகள் நாளாந்தம் எழுப்பப்பட்டு வருகின்றன.

இதனால் கொழும்பின் தனியார் நிறுவனங்கள் பல ஊழியர்களை பல மாத விடுமுறையில் வீட்டுக்கு அனுப்பி வருகிறது.

அவசரகாலச் சட்டம் அமுலில் இருந்தும் இத்தகைய வதந்திகளைப் பரப்புவோர் மீது ஏன் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று சிறிலங்கா இராணுவத்தினர் கேள்வி எழுப்பினாலும் சிறிலங்காவின் உயர்நிலை அதிகாரிகளே இத்தகைய வதந்திகளை உருவாக்கி வருகின்றனர் என்ற உண்மையால் சிறிலங்கா அரச படையினர் உச்சபட்ச யுத்த மன உளைச்சலுக்குள்ளாகி இருக்கின்றனர் என்கின்றனர் கொழும்பு ஊடகவியலாளர்கள்.


<i><b>தகவல் மூலம்-புதினம்.கொம்</b></i>
"
"
Reply


Messages In This Thread
[No subject] - by மேகநாதன் - 01-22-2006, 07:30 AM
[No subject] - by மேகநாதன் - 01-22-2006, 03:26 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)