Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
யாழ்ப்பாணத்தில் சிங்களத்தினதும் ஒட்டுக்குழுக்களினதும் அடாவடி
#5
<b>யாழ். குடாநாட்டில் இரு மாத காலத்திற்குள் அறுபத்தொரு இளைஞர்களைக் காணவில்லை </b>

கடந்த ஆண்டின் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதத்தின் நடுப்பகுதியான கடந்த செவ்வாய் வரை யாழ். குடாநாட்டில் 61 இளைஞர்கள் காணாமல் போயுள்ளதாக சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். அலுவலகத்தில் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த ஆண்டின் முதல் இரு வாரப் பகுதியில் மட்டும் 26 இளைஞர்கள் காணாமல் போயுள்ளனர். அதில் 14 பேர் சிறிலங்கா இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலையீட்டினால் ஒருவர் மட்டுமே விடுவிக்கப்பட்டுள்ளார்.

கடந்த டிசம்பர் மாதத்தில் குடாநாட்டில் 35 பேர் காணாமல் போயுள்ளனர். இவர்களில் சிறிலங்கா இராணுவத்தால் கைது செய்யப்பட்ட 19 பேரில் 12 பேர் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முயற்சியால் விடுவிக்கப்பட்டோ அல்லது சிறிலங்கா பொலிசாரிடம் கையளிக்கப்பட்டோ உள்ளனர்.

எனினும் ஒட்டுமொத்தமாக கடந்த ஆறுவார காலத்தினுள் 52 பேர் காணாமல் போயுள்ளனர்.

கடந்த டிசம்பர் 20 ஆம் நாள் தென்மராட்சியின் நுணாவில் பகுதியில் படையினரால் கைது செய்யப்பட்ட இளைஞர் சுமார் 25 நாட்களுக்குப் பின்னர் சாவகச்சேரியில் சிறிலங்கா பொலிசாரிடம் கையளிக்கப்பட்டுள்ளார். முருகதாஸ் தீபரூபன் என்ற அந்த இளைஞர் தற்போது காங்கேசன்துறை சிறிலங்கா பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

அதேபோல் மல்லாகத்தில் கைது செய்யப்பட்ட மற்றொரு இளைஞரான இரத்தினம் ஆனந்தராஜா (33) என்பவர் மல்லாகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதனிடையே யாழ். நகரில் நடந்த மரண ஊர்வலம் ஒன்றில் தொடர்ச்சியாக சீனா வெடியை வெடித்துச் சென்றவர்களை சிறிலங்கா இராணுவத்தினர் மிகக் கடுமையாகத் தாக்கியுள்ளனர்.

யாழ். கோணாவளைப் பகுதியில் கடந்த செவ்வாயன்று நண்பகல் மரண ஊர்வலம் ஒன்றில் வெடி வெடித்துச் சென்றுள்ளனர். யாழ். மின்சார நிலைய வீதியில் அமைந்துள்ள இராணுவக் காவலரண் மீது கடந்த செவ்வாய்கிழமை நண்பகல் கைக்குண்டுத் தாக்குதல் நடந்ததால் பீதியடைந்த படையினர் மரண ஊர்வலத்தில் வெடி கொளுத்திச் சென்றவர்களைத் தாக்கியுள்ளனர்.

இராணுவத்தினரின் இத்தகைய தாக்குதலை சற்றும் எதிர்பாராத மரண ஊர்வலத்தில் கலந்து கொண்டோர் தலைதெறிக்க ஓட்டம் பிடித்தனர். இதனால் சிறிது நேரம் மரண ஊர்வலம் தடைப்பட்டது. பின்னர் ஒரு சிலரோடு மரண ஊர்வலம் மயானத்தைச் சென்றடைந்தது.

மேலும் யாழ். குடாநாட்டின் தீவுகளில் ஒன்றான அனலைத்தீவுப் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் ஈ.பி.டி.பியினரால் கடந்த செவ்வாய்கிழமை கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.

அனலைத் தீவைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான விநாயகமூர்த்தி விநாயகராசா (40) என்பவர் கடத்தப்பட்டவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

விநாயகமூர்த்தியின் வீட்டிற்கு சிறிலங்கா கடற்படையினருடன் சென்ற ஈ.பி.டி.பியினர் அவரை விசாரணைக்காக அழைத்துச் சென்றதாக கூறப்படுகின்றது. இது தொடர்பாக ஊர்காவல்துறை சிறிலங்கா நிலையத்தில் விநாயகமூர்த்தியின் குடும்பத்தினர் முறைப்பாடு செய்ய சென்ற போதும் அம்முறைப்பாட்டை பொலிசார் ஏற்க மறுத்து விட்டனர்.

<i><b>தகவல் மூலம்- ஈழநாதம் - மட்டக்களப்பு பதிப்பு</b></i>
"
"
Reply


Messages In This Thread
[No subject] - by மேகநாதன் - 01-21-2006, 07:11 PM
[No subject] - by மேகநாதன் - 01-21-2006, 07:14 PM
[No subject] - by மேகநாதன் - 01-21-2006, 07:52 PM
[No subject] - by மேகநாதன் - 01-22-2006, 06:32 AM
[No subject] - by மேகநாதன் - 01-22-2006, 06:34 AM
[No subject] - by மேகநாதன் - 01-22-2006, 03:34 PM
[No subject] - by மேகநாதன் - 01-22-2006, 03:35 PM
[No subject] - by மேகநாதன் - 01-22-2006, 03:37 PM
[No subject] - by மேகநாதன் - 01-22-2006, 05:12 PM
[No subject] - by மேகநாதன் - 01-24-2006, 03:29 AM
[No subject] - by மேகநாதன் - 01-24-2006, 03:30 AM
[No subject] - by மேகநாதன் - 01-24-2006, 04:24 PM
[No subject] - by மேகநாதன் - 01-24-2006, 04:27 PM
[No subject] - by மேகநாதன் - 01-25-2006, 09:17 AM
[No subject] - by மேகநாதன் - 01-26-2006, 08:02 PM
[No subject] - by மேகநாதன் - 01-26-2006, 08:05 PM
[No subject] - by மேகநாதன் - 01-28-2006, 02:48 PM
[No subject] - by மேகநாதன் - 01-30-2006, 07:18 AM
[No subject] - by மேகநாதன் - 01-30-2006, 07:53 AM
[No subject] - by மேகநாதன் - 01-31-2006, 02:16 PM
[No subject] - by மேகநாதன் - 02-02-2006, 02:32 AM
[No subject] - by மேகநாதன் - 02-04-2006, 03:38 AM
[No subject] - by மேகநாதன் - 02-07-2006, 04:29 AM
[No subject] - by மேகநாதன் - 02-07-2006, 11:58 AM
[No subject] - by மேகநாதன் - 02-11-2006, 06:08 AM
[No subject] - by மேகநாதன் - 02-11-2006, 07:48 AM
[No subject] - by Sukumaran - 02-11-2006, 02:42 PM
[No subject] - by மேகநாதன் - 02-14-2006, 03:24 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)