01-21-2006, 07:08 PM
<b>யாழிலிருந்து இன்று 250 குடும்பங்கள் இடம்பெயர்ந்தன </b>
[சனிக்கிழமை, 21 சனவரி 2006, 20:08 ஈழம்] [வி.நவராஜன்]
யாழ். குடா நாட்டிலிருந்து 250-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இன்று இடம்பெயர்ந்து வன்னிப் பகுதிக்குள் வந்துள்ளன என்று தமிழர் புனர்வாழ்வுக் கழகம் தெரிவித்துள்ளது.
தமிழர் புனர்வாழ்வுக் கழகம் இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:
யாழிலிருந்து இன்று காலை 8.00 மணியிலருந்து மாலை 5.00 மணிவரையிலுமாக 250-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இடம்பெயர்ந்து வன்னிப் பெருநிலப்பரப்புப் பகுதிக்குள் வந்துள்ளன.
இக்குடும்பங்களைச் சார்ந்தவர்கள் அனைவரும் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் முகமாலையிலுள்ள பிரதான பேரழிவு முகாமைத்துவப் பிரிவுப் பணியகத்தில் பதிவு செய்யப்பட்ட பின்னர் அவர்களது விருப்பத்திற்கு அமைவான இடங்களுக்கு தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் இடம்பெயர்ந்தோருக்கான விசேட போக்குவரத்துச் சேவைக்கூடாக அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
அந்தந்த இடங்களில் அமைந்துள்ள நலன்பேணும் நிலையங்களிலும் உறவினர்கள் உள்ளவர்கள் உறவினர் வீடுகளிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கான நிவாரண உதவிகளை தமிழர் புனர்வாழ்வுக் கழகமே தொடர்ந்தும் வழங்கிவருகின்றது.
சமைத்த உணவு உட்பட உலர் உணவுப் பொருட்கள மற்றும் ஏனைய வகையிலான நிவாரண உதவிகளையும் தமிழர் புனர்வாழ்வுக் கழகமே வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே கிழக்கு மாகாணத்தைப் பொறுத்த வரையில் மூதூர் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்தும் மற்றும் ஏனைய இடங்களிலிருந்தும் இடம்பெயர்ந்து பாதுகாப்பான இடங்களிலுள்ள நலன்பேணும் நிலையங்களில் பராமரிக்கப்பட்டு வரும் குடுப்பங்களுக்கான நிவாரண உதவிகளைத் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் தொடர்ந்தும் வழங்கி வருகின்றது.
யாழ். குடாநாட்டிலிருந்து நேற்று பிற்பகல் 3.00 மணியளவில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக இடம்பெயர்ந்து கிளிநொச்சி நகர்ப் பகுதியை அண்மித்த உறவினர் வீடுகளிலும், நலன்பேணும் நிலையங்களிலும் தங்கிவாழ்கின்ற குடும்பங்களுள் 35 குடும்பங்களுக்கு தற்காலிக வீடுகள் அமைப்பதற்கான வீட்டு உபகரணங்களை தமிழர் புனர்வாழ்வுக் கழகம் உள்ளுர் அரச சார்பற்ற நிறுவனமான கிளிநொச்சி அபிவிருத்தி புனர்வாழ்வுக் கழக நிறுவன வளாகத்தில் வைத்து வழங்கியது.
இதனிடையே கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா ஆகிய மாவட்டங்களில் அமையப்பெற்றுள்ள நலன்பேணும் நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள குடும்பங்களில் பலவற்றுக்கும் தற்காலிக வீடுகள் அமைப்பதற்கான விட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
<i><b>புதினம்.கொம்</b></i>

"
"
"