Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சன் டிவிக்கு ஆபத்து?
#1
சன் டிவியை முடக்க ஜெ. புதிய சட்டம்: பர்னாலாவிடம் கருணாநிதி புகார்

சன் டிவி குழுமத்தைச் சேர்ந்த சுமங்கலி கேபிள் விஷன் நிறுவனம் மற்றும் ஹாத்வே கேபிள் நிறுவனத்தை கையகப்படுத்த தமிழக அரசு அதிரடியாக ஒரு சட்டம் கொண்டு வந்துள்ளது.

தமிழகத்தைப் பொருத்தவரை எஸ்.சி.வி எனப்படும் சுமங்கலி கேபிள் விஷன் (சன் டிவி குழுமத்தைச் சேர்ந்தது) நிறுவனம்தான் பன்முக கேபிள் இணைப்புகளைக் கொடுத்து வருகிறது. தமிழகத்தில் 80 சதவீத வீடுகளுக்கு சுமங்கலி கேபிள் விஷன் மூலமாகத் தான் சேட்டிலைட் டிவி இணைப்பு தரப்பட்டுள்ளது.

இந் நிலையில் சட்ட அமைச்சர் ஜெயக்குமார் இன்று சட்டசபையில் ஒரு சட்ட மசோதாவை தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

பன்முக கேபிள் இணைப்புகள் நடத்துவோர் மற்றும் ஆப்டிகல் கேபிள் மூலம் கேபிள் இணைப்புகளைக் கொடுப்பார் குறித்தும், அது தொடர்பான நிறுவனங்கள் மீதும் எண்ணற்ற புகார்கள் அரசுக்கு வந்த வண்ணம் உள்ளன.

கேபிள் இணைப்புகளை கொடுப்பதில் பொது மக்களை அச்சுறுத்தும் வகையிலும், பொதுமக்களை மிரட்டும் வகையிலும் இவர்கள் செயல்படுவதாக பொதுமக்கள் புகார்கள் கொடுத்து வருகின்றனர்.

தங்களுக்குப் பிடிக்காத தொலைக்காட்சிகள் சரியாக தெரியாத வகையில் இவர்கள் இணைப்பு கொடுப்பதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.

எனவே அந்த கேபிள் டிவி இணைப்பின் நிர்வாகத்தை கையகப்படுத்தவும், அதன் உரிமையை மாற்றவும், அதன் நிர்வாகத்தை அரசே மேற்கொள்ளவும் வகை செய்யும் விதத்தில் இந்த சட்ட மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது.

(சன் டிவியின்) சுமங்கலி கேபிள் விஷன், ஹாத்வே ஆகிய நிறுவனங்களுக்கும் இந்த சட்ட மசேதா பொருந்தும். இருப்பினும், சிறிய அளவில் கேபிள் இணைப்பு நடத்தும் தெருவோர கேபிள் நிறுவனங்கள் இந்த சட்டத்திலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

அவை பிழைப்புக்காக இந்தத் தொழிலை மேற்கொண்டு வருவதால் அவர்களை இந்த சட்டத்திலிருந்து விலக்கி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம் சென்னை, மதுரை, திருச்சி, கோவையில் உள்ள சுமங்கலி கேபிள் விஷன் அலுவலங்களும், சொத்துக்களும், சென்னையில் உள்ள ஹாத்வே அலுவகமும் அரசால் கையகப்படுத்தப்படும். இந்த நிறுவனங்களின் கருவிகள், ஆப்டிகல் பைபர் நெட்வோர்க் உள்ளிட்டவற்றை அரசு எடுத்துக் கொள்ளும்.

நிறுவனத்தின் பெயர் உரிமையும் அரசின் கட்டுப்பாட்டில் வரும். இதை எதிர்த்து வழக்கு தொடரவோ, சொத்துக்களை ஒப்படைக்க மாட்டோம் என்று மறுக்கவோ முடியாது. மீறினால் சிறைத் தண்டனை விதிக்கப்படும்.

கையகப்படுத்தப்படும் இந்த நிறுவனங்களுக்கு ஒரு தொகை நஷ்ட ஈடாக வழங்கப்படும். இதன் பின்னர் இந்த நிறுவனங்களை ஒரு பொறுப்பாளரை நியமித்து அரசே நடத்தும்.

அரசின் கட்டுப்பாட்டில் வரும் இந்த நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் வேலையை ராஜினாமா செய்துவிடலாம். இவர்களில் சிறந்த ஊழியர்களுக்கு மட்டுமே மீண்டும் பணி வழங்கப்படும். வயது, தகுதி, நேர்மை ஆகியவற்றை கணக்கில் கொண்டு மட்டுமே மீண்டும் அவர்களுக்கு பணி தரப்படும்.

பணியை விட்டு விலகும் ஊழியர்களுக்கு இழப்பீட்டுத் தொகை பின்னர் வழங்கப்படும். எவ்வளவு இழப்பீடு வழங்குவது என்பது பின்னர் நிர்ணயிக்கப்படும். இழப்பீடு கோருவோர் 30 நாட்களுக்குள் கமிஷ்னர் ஆப் அப்பாயின்மெண்ட்ஸை அணுகி மனு செய்யலாம்.

இவ்வாறு அந்த சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்த சட்ட மசோதா, முழுக்க முழுக்க சன் டிவியை குறி வைத்தே கொண்டு வரப்பட்டுள்ளதாகக் கருதப்படுகிறது.

பர்னாலாவிடம் கருணாநிதி புகார்:

தமிழக அரசின் இந்த அதிரடி சட்ட மசோதா சன் டிவி வட்டாரத்திலும், கருணாநிதி குடும்பத்தினர் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுமங்கலி கேபிள் விஷன் நிறுவனத்தை கையகப்படுத்துவதன் மூலம் சன் டிவியை முடக்குவதற்கு அதிமுக அரசு முயலுவதாக அவர்கள் கருதுகிறார்கள்.

இதையடுத்து தமிழக ஆளுர் சுர்ஜித் சிங் பர்னாலாவை, திமுக தலைவர் கருணாநிதி இன்று சந்தித்தார். அவருடன் சன் டிவி குழுமத் தலைவர் கலாநிதி மாறனின் தம்பியும், மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சருமான தயாநிதி மாறனும் உடன் சென்றார்.

அப்போது கேபிள் டிவி நிறுவனங்களை தமிழக அரசு கையகப்படுத்துவதற்கான புதிய சட்டத்திற்கு கருணாநிதி கடும் எதிர்ப்புத் தெரிவித்தார்.

கேபிள் டிவி தொடர்பான அதிகாரம் மத்திய அரசின் கையில் உள்ளது என்றும், இதில் மாநில அரசு தலையிட உரிமையில்லை என்றும் கூறிய கருணாநிதி, முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்துள்ள மசோதா சட்ட விரோதமானது. இதற்கு ஆளுனர் ஒப்புதல் அளிக்கக் கூடாது என்று வலியுறுத்தினார்.

இதை தொடர்ந்து இன்று பிற்பகலில் பேராசிரியர் அன்பழகன் தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் கவர்னரை சந்தித்து ந்தித்து சட்ட மசோதாவிற்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று வலியுறுத்தினர்.

சன் டிவி ஆரம்பிப்பதற்கு முன்பாகவே சுமங்கலி கேபிள் விஷன் நிறுவனம் செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. பூமாலை என்ற பெயரில் வீடியோ நிகழ்ச்சிகளை தயாரித்து வந்தது. பின்னர் அது சன் டிவியாக உருமாறியது. அதன் பின்னர் எஸ்.சி.வி. என்ற பெயரில் முன்பு திரைப்படப் பாடல்களை ஒளிபரப்பி வந்தது. சமீபத்தில் அந்த அலைவரிசை, சன் மியூசிக் என மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஹாத்வே:

தமிழகத்தில் சிறிய அளவிலும் கேரளத்தில் பெரிய அளவிலும் தனது கேபிள் நெட்வோர்க்கை வைத்திருக்கும் நிறுவனம் ஹாத்வே. இது மும்பையைச் சேர்ந்த ரஹேஜா நிறுவனத்துக்குச் சொந்தமானது.

இவர்களுக்கு அதிமுகவுடன் நல்ல நெருக்கம் உள்ளதாகக் கூறப்படுகிறது. சுமங்கலி நெட்வோர்க்கை மட்டும் முடக்கினால் அப்பட்டமான அரசியலாக வெளியில் தெரியும் என்பதால் ஹாத்வேயையும் சேர்த்து கையகப்படுத்த அதிமுக திட்டமிட்டதாகத் தெரிகிறது

தட்ஸ் தமிழ்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply


Messages In This Thread
சன் டிவிக்கு ஆபத்து? - by Mathan - 01-21-2006, 03:44 PM
[No subject] - by Mathan - 01-21-2006, 03:45 PM
[No subject] - by Mathan - 01-22-2006, 09:02 AM
[No subject] - by விது - 01-22-2006, 09:53 AM
[No subject] - by Nitharsan - 01-22-2006, 10:04 AM
[No subject] - by ஈழமகன் - 01-22-2006, 10:58 AM
[No subject] - by MUGATHTHAR - 01-22-2006, 11:02 AM
[No subject] - by Nitharsan - 01-22-2006, 11:05 AM
[No subject] - by Vasampu - 01-22-2006, 01:22 PM
[No subject] - by தூயவன் - 01-22-2006, 03:08 PM
[No subject] - by Mathan - 01-23-2006, 06:57 AM
[No subject] - by Luckyluke - 01-23-2006, 07:34 AM
[No subject] - by Mathan - 01-25-2006, 09:44 AM
[No subject] - by Luckyluke - 01-25-2006, 12:53 PM
[No subject] - by Mathan - 01-28-2006, 07:04 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)