Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
வட, தென் தமிழீழத்தில் ஒரே காலத்தில் யுத்தம் தொடங்கப்படும்
#2
அமைதிப் பேச்சுக்களில் தீர்வு ஏற்படாவிட்டால் மீண்டும் யுத்தம்: சி.எழிலன் எச்சரிக்கை!

அமைதிப் பேச்சுக்களில் எதுவித தீர்வும் ஏற்படாவிட்டால் யுத்தம் மீண்டும் தொடங்கும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சி.எழிலன் எச்சரித்துள்ளார்.


திருகோணமலை சம்பூரில் உள்ள விடுதலைப் புலிகளின் அரசியல்துறை செயலகத்தில் ரொய்ட்டர்ஸ் செய்தி ஸ்தாபனத்துக்கு சி.எழிலன் அளித்த நேர்காணல்:

அமைதிப் பேச்சுக்களில் எதுவித தீர்வும் ஏற்படாவிட்டால் யுத்தம் மீண்டும் தொடங்கும். தீர்வுகள் ஏதுமில்லாமல் நீண்ட காலத்துக்கு இந்தச் சூழ்நிலையோடு நாங்கள் காத்திருக்க முடியாது.

சிறிலங்கா இராணுவத்தினரின் வன்முறைகளினால் ஆத்திரமடைந்த மூன்றாவது சக்தியான மக்கள்தான் சிறிலங்கா அரச படைகள் மீது தாக்குதல்களை நடத்துகின்றனர்.

சிறிலங்கா அரசுதான் முதன் முதலில் விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து விலத்தப்பட்ட கருணா குழுவைப் பயன்படுத்தி அதாவது அந்த மூன்றாவது சக்தியைப் பயன்படுத்தி பொதுமக்கள் மீது தாக்குதல்களை மேற்கொண்டது.

தற்போது இங்கு அமைதி இல்லை. எந்த நேரத்திலும் யுத்தத்தைத் தொடங்குவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.

சிறிலங்கா இராணுவத்தினால் தங்களைப் பாதுகாக்க முடியாத நிலையில் தமிழ் மக்கள் இயல்பாகவே எங்களை ஆதரிக்கின்றனர். ஆழிப்பேரலையின் போது நாம் அவர்களோடு இணைந்து செயற்படுவோம் என்று எண்ணினோம். ஆனால் அவர்கள் அதை நிறுத்திவிட்டார்கள். ஆழிப்பேரலை கூட அவர்களிடத்தில் எதுவித மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை என்றார் எழிலன்.

யுத்தம் தொடங்கினால் விடுதலைப் புலிகளின் முதல் இலக்கு யாழ்ப்பாணமாகத்தான் இருக்கும் என்பது தொடர்பாகவும் திருகோணமலையில் தற்கொடைப் படையினர் மீது கடற்படை மீது தாக்குதல்கள் நடத்தப்படக் கூடும் என்பது குறித்தும் கேட்டபோது அவை தொடர்பில் சி.எழிலன் எதுவும் தெரிவிக்கவில்லை. "பொறுத்திருந்து பாருங்கள்" என்று கூறினார்.

புதினம்
Reply


Messages In This Thread
[No subject] - by நர்மதா - 01-21-2006, 01:11 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)