Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மட்டக்களப்பில் தமிழ் தேசிய எழுச்சிப் பேரணி
#8
<b>தமிழீழத்தை அமைக்கும் காலம் நெருங்கிவிட்டது!

தமிழீழத்தை அமைக்கும் காலம் நெருங்கிவிட்டது. எனவே தேசியத் தலைவர் அவர்களுடன் கைகோர்த்து நின்று நாம் அனைவரும் எமது உரிமையை வென்றெடுக்க வேண்டும். இவ்வாறு மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ஜெயானந்தமூர்த்தி தெரிவித்தார். நேற்று அம்பிளாந்துறையில் இடம்பெற்ற தமிழ்த் தேசிய எழுச்சி; பிரகடன நிகழ்வில் கலந்து கொண்டு உரைநிகழ்த்தும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்:-

போர் நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டு நான்கு வருடங்களாகின்றன.

இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட பின்னர் நயவஞ்சகத்தனமான முறையில் ஆறு சுற்றுப் பேச்சுக்களை நடத்திய ரணில் விக்கிரமசிங்க எந்த ஒரு முன்னேற்றத்தையும் அல்லது பயனையும் ஏற்படுத்தவில்லை. இவ்வாறான பேச்சுக்களைக் காட்டியே கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வாக்குகளைப் பெறுவதற்கு ரணில் தி;ட்டமிட்டார். எனினும் தமிழ் மக்கள் இதனை புரிந்து கொண்டு தேர்தலைப் புறக்கணித்தனர்.

இந்தத் தேர்தல் புறக்கணிப்பு மூலமே மகிந்த ஜனாதிபதியானார். ஒரு வகையில் அது தமிழ் மக்கள் கொடுத்த பிச்சை என்றுதான் கூற வேண்டும். இதேவேளை ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக 27 கட்சிகளுடன் மகிந்த ஒப்பந்தம் செய்திருந்தார். இதில் தமிழ் மக்களின் எந்த நலனும் உள்ளடக்கப்படவில்லை.

அதேவேளை கடந்த கால சிறிலங்காவின் ஜனாதிபதிகளுடன் ஒப்பிடும் போது மண்டைக்குள் எதுவும் இல்லாத ஜனாதிபதி என்றால் அது மகிந்த ராஜபக்சதான். ஏன் என்றால் நாங்கள் அண்மையில் ஜனாதிபதியைச் சந்தித்த போது ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை மற்றும் திருமலையில் ஐந்து மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டதையும் நாம் கண்டித்தோம். இந்தப் படுகொலையில் சிறிலங்கா இராணுவம் சம்பந்தப்பட்டதை சுட்டிக் காட்டினோம்.

ஆனால் தாம் இந்தியா சென்றிருந்த காலத்தில் இந்தச் சம்பவம் நடந்ததாகக் கூறினார். உங்கள் சகோதரரை படைத்துறை அமைச்சின் செயலாளராக நியமித்திருக்கின்றீர்களே அவருக்குத் தெரியாதா? எனக் கேட்டபோது அவரையும் கூட்டிச் சென்றதாகக் கூறினார். இவ்வாறு முப்படைகளின் தளபதியாக இருந்தவர் தனக்கு ஒன்றும் தெரியாது என்று கூறும் போது வேடிக்கையாகவிருக்கின்றது,

இதேவேளை சிறிலங்காவின் நாடாளுமன்றுக்குள்ளும் எங்கள் போராட்டம் தீவிரமடைந்திருக்கின்றது. நாடாளுமன்றை இயங்கச் செய்யாத ஒரு சூழல உருவாக்கியிருந்தோம். எங்களுடன் மலையகக் கட்சிகளும் கொழும்புத் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் மேலக முன்னணியும் இணைந்து இருக்கின்றது.

இந்தப் போராட்டத்தால் அடுத்தது என்ன?, என்ன நடக்கப் போகின்றது என்ற பீதியில் கொழும்பு கலங்கி நிற்கின்றது. ஜனாதிபதி நித்திரையில்லாமல் யோசித்துக் கொண்டிருக்கின்றார். சபாநாயகர் பின் கதவால் தான் வந்து அமர்வில் அமர்ந்து கொண்டார்.

இந்தச் சூழலிலேயே தமிழீழ விடுதலைப்புலிகளோடு சிறிலங்கா அரசு பேச்சுக்கு வராது புறக்கணித்தால் அவர்கள் பாரிய விளைவுகளை எதிர்நோக்க வேண்டிவரும்.

தற்காப்புப் பயிற்சி பெற்றவர்களாக, எல்லைப் படையாக, சண்டைப் படையணியாக தமிழினம் பலம் பெற்ற நிற்கின்றது. எமது தாயக தேசத்தில் எறிகணை, விமானக் குண்டு வீச்சுக்களை நடாத்த எதிரி நினைத்தால் பாரிய சேதங்களை அவர்கள் அனுபவிக்க வேண்டிவரும். நாம் எமது பலத்தை சிறிலங்கா அரசு மீது பயன்படுத்துவோம்.

எனவே இன்று தமிழீழத்தை அமைக்கின்ற காலம் நெருங்கி விட்டது. தேசியத் தலைவர் அவர்களுடன் கைகோர்த்து நின்று எமது உரிமையை வென்றெடுப்போம். அதற்காக அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென்றார்.


<i>[b]தகவல் மூலம்- ஈழநாதம் - மட்டக்களப்பு பதிப்பு</b></i>
"
"
Reply


Messages In This Thread
[No subject] - by மேகநாதன் - 01-12-2006, 09:15 AM
[No subject] - by மேகநாதன் - 01-20-2006, 07:12 PM
[No subject] - by மேகநாதன் - 01-20-2006, 07:15 PM
[No subject] - by yarlmohan - 01-20-2006, 07:16 PM
[No subject] - by மேகநாதன் - 01-20-2006, 07:23 PM
[No subject] - by iruvizhi - 01-20-2006, 08:56 PM
[No subject] - by மேகநாதன் - 01-21-2006, 06:50 AM
[No subject] - by மேகநாதன் - 01-21-2006, 06:54 AM
[No subject] - by மேகநாதன் - 01-21-2006, 06:58 AM
[No subject] - by மேகநாதன் - 01-21-2006, 06:58 AM
[No subject] - by Mathuran - 01-21-2006, 11:57 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)