Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பயப்பிடமா நல்லா கடலை போடலாம்ப்பா
#5
<!--QuoteBegin-SUNDHAL+-->QUOTE(SUNDHAL)<!--QuoteEBegin-->செல்போன்கள்பயன் படுத்துகிறவர்கள் எண் ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரு கிறது. சாதாரண நடுத்தர மக்க ளுக்கும் செல்போன் அத் தியாவசிய தேவையாகி விட்டது.

செல்போன்களை அதிகம் பயன்படுத்துகிறவர்களுக்கு இருதய நோய், மூளை புற்றுநோய் போன்ற கோளா றுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று சில தரப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இது பற்றி இங்கிலாந்து நாட்டு விஞ்ஞானிகள் புதிய ஆய்வு நடத்தினார்கள். 2000-ம் ஆண்டு முதல் 2004- ம் ஆண்டு வரை தொடர்ந்து செல்போன் பயன்படுத்திய 18 வயதினர் முதல் 69 வயதினர் வரை உள்ளவர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

இது தவிர நல்ல ஆரோக்கிய நிலையில் உள்ள வர்களிடமும் தனியாக ஆய்வு மேற்கொண்டனர்.

இதில் மூளை புற்றுநோய்க்கும் செல்போனுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று டாக்டர்கள் முடிவுக்கு வந்துள்ளனர். மூளை புற்று நோய் ஏற்பட்டவர்களுக்கு அந்த நோய் செல்போன் மூலம் வரவில்லை என்றும் உறுதி செய்யப்பட்டது.

ஆனால் இதற்கு முன் நடத்தப்பட்ட ஒரு ஆய்வு கிராமபுறங்களில் செல்போன் பயன்படுத்துகிறவர்களுக்கு புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்று தெரிவித்துள்ளது. கிராமப் புறங்களில் எல்க்ட்ரோ மெக்னடிக் சிக்னல்களை அதிக சக்திவாய்ந்ததாக அமைத்திருப்பது தான் இதற்கு காரணம் என்று கூறப்பட்டது.
Thanks:Malaimalar...<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

செல்போன் பாவிப்பதால் புற்று நோய் வரும் என்பது உண்மையாக இருக்கலாம். என்னென்றால் நாம் கொஞ்சம் கூட நேரம் பாவித்தாலே காதுப்பகுதியில் ஒரு சூடு வருவதை உணரக்கூடியதாக இருக்கின்றது. அவசியத்தின் பேரில் கொஞ்ச நேரம் கூட பாவிக்கும்போது தலையிடியும் கொஞ்சம் கொஞ்சம் அதிகரிப்பது தெரிகின்றது. இது எனது சொந்த அனுபவம்.
தகவலுக்கு நன்றி குருவிகள்

Reply


Messages In This Thread
[No subject] - by kuruvikal - 01-20-2006, 04:56 PM
[No subject] - by shanmuhi - 01-20-2006, 05:07 PM
[No subject] - by SUNDHAL - 01-21-2006, 12:31 AM
Re: பயப்பிடமா நல்லா கடலை போடலாம்ப்பா - by RaMa - 01-21-2006, 06:44 AM
[No subject] - by அருவி - 01-22-2006, 06:01 AM
[No subject] - by MUGATHTHAR - 01-22-2006, 07:11 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)