01-21-2006, 06:03 AM
MEERA Wrote:இங்கிலாந்திற்கு முதலில் வந்த தமிழர்கள் அனைவரும் வேலை செய்வதர்கோ அல்லது படிப்பிற்காகவோ வந்த காரணத்தினால் அவர்கள் ஆங்கில மொழியினையே பயனபடுத்தினர்.இதனால் பின்னர் அரசியல் காரணங்களுக்காக வந்தவர்களும் ஒருவாறு கஸ்டபபட்டு ஆங்கிலத்தை முன்னர் அறியப்பட்ட மொழியாக இருந்ததால் பயன்படுத்தினர்.
ஆனால் ஐரோப்பாவிற்கு வந்தவர்களுக்கு அந்நாட்டின் மொழி முன்னர் ஒரு போதும் அறிந்திருக்காததால் தமிழில் கூடுதல் கவனம் எடுக்கத தொடங்கினர்.
ஏன் நாம் பாடசாலைகளில் படிக்கும் போது Good morning teacher or Sir என்று சொன்னமே தவிர வணக்கம் அம்மணி என்றோ அல்லது வணக்கம் ஐயா என்றோ சொல்லவில்லையே....
மீரா அவர்கள் யாருடைய கருத்துக்கு பதில் கருத்து சொன்னார் என்பதை சுட்டி காட்டாதபோதும்..
அவர் கருத்தை வைத்து இதை சொல்லலாம் என்று நினைக்கிறேன்!
<b>ஆனால் ஐரோப்பாவிற்கு வந்தவர்களுக்கு அந்நாட்டின் மொழி முன்னர் ஒரு போதும் அறிந்திருக்காததால் தமிழில் கூடுதல் கவனம் எடுக்கத தொடங்கினர்.</b>
இதனால்தான் ஐரோப்பாவில் வாழும் எம்மவர் தமிழில் கூடுதல் கவனம் செலுத்த தொடங்கினர் என்றால்... ஐரோப்பியநாடுகளில் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுப்பதால் ஏதும் எமக்கு சாதகமாய் அந்நாட்டு அரசு-மக்களிடம் இருந்து கிடைக்க போகிறதா?
அதை விட புலம் பெயர்ந்தவர்கள் அந்தந்த நாட்டு மொழியை அறிந்திருக்கவிட்டால் - அத்தேச பாஷையை முதலில் அறியதான் முயற்சி செய்வார்கள்.. -ஏற்கனவே எமக்கு தெரிந்த மொழியில் கவனம் செலுத்துவதை விட என்று எண்ணுகிறேன்!
அதனடிப்படையில் பார்த்தால் - ஐரோப்பாவில் தானே தமிழ் - குத்து மதிப்பா பேசுற நிலமை வந்திருக்கும் ! :roll:
-காரணங்கள் வேறானவை--
ஆங்கிலத்தில் பேசினால்-அது சரியாய் தெரியாவிட்டலும்- கெளரவம் என்று நினைக்கின்ற எம்முள் உள்ள சில பெற்றோரின் - ஒருவகையான கண்மூடிதனமான ஊக்கிவிப்புகளால் நீங்கள் முதலில் சொன்னவை ஆகி இருக்கலாம் என்று நினைக்கிறேன்!
மாணவர்கள்-காலை வணக்கம் -ஆசிரியர் ஆசிரியைக்கு ஆங்கிலத்தில் இப்போதும் சொல்கிறார்களா-தாயகத்தில்- என்பது பற்றி தெரியவில்லை!! 8)
-!
!
!

