01-21-2006, 04:39 AM
Luckyluke Wrote:நன்றி ஆதிபன்,
நன்றி மலர்ந்த சிலரின் மத்தியில் உம்மை சந்திக்க மகிழ்ச்சியாக இருக்கிறது.....இலங்கை தமிழர் மட்டுமல்ல.... ஆப்பிரிக்காவைச் சார்ந்தவர்களும் கூட தமிழகத்தில் எங்களுக்கு சரிக்கு சமமாக நடத்தப்படுகிறார்கள்.... அதில் எஙளுக்கு மகிழ்ச்சியே.....ஏனென்றால் நாங்கள் இருப்பது வந்தாரை வாழ வைக்கும் தமிழகம்.....
[size=15]LuckyLook,
சும்மா அளக்காதேயும், அகதியாக வந்த ஈழத்தமிழர்களை எப்படி இந்தியா நடத்தியதென்பது உலகறிந்த விடயம், அவர்கள் எல்லோரையும் புலிகளாகக் கருதி, குழந்தைகளைக் கூட அகதி முகாம் என்ற பெயரில் பழைய சிறைகளில் அடைத்துப் போட்டு, வெளியேறாமல் காவலும் போட்டது தான் சனநாயக இந்தியா. வசதியுள்ள, அகதிமுகாமை விட்டு வெளியில் வாழ்ந்த இலங்கைத் தமிழர்களிடம் நாலைந்து மடங்கு வாடகை வாங்கித் தவித்த முயலை அடித்தவர்கள் பெரும்பாலான எங்களின் இந்தியச் சகோதரர்கள். ஓரு சில எங்களில் அக்கறையுள்ள இந்தியச் சகோதரர்களை ஈழத் தமிழர்கள் யாரும் மறக்கவில்லை.
MGR உதவி செய்தார், கருணாநிதி செய்தார் என்று தொடங்காதேயும், அதைப் பற்றி வேறு தளத்தில் ஆராய்ந்துள்ளோம், இந்தியா ஒன்றும் நல்லெண்ணத்தில் ஈழத்தமிழருக்கு உதவி செய்யவில்லை. எங்களின் விடுதலைப் போரை, எங்களிண் அவலத்தை இந்தியா, தன்னுடைய சுயநலத்துக்குப் பாவித்துக் கொண்டது, எந்தக் குழந்தைக்கும் தெரியும், இந்தக் கதை.
சீனா ஈழத்தமிழருக்கு அண்மை நாடாக இருந்தால் அங்கும் அகதியாகப் போவார்கள், அகதியாக உயிருக்குப் பயந்து ஓடும் போது, எந்த நாடென்று கருதுவதில்லை. உயிரைக் காப்பது தான் அந்தத் தருணத்தில் முக்கியமானது. ஈழத்தமிழர்கள் தமிழ்நாட்டுக்கு வருவதற்குக் காரணம் மிகவும் அண்மையயில் உள்ளது மட்டுமல்ல, தமிழர்கள் உள்ளார்கள், ஆதரவு தருவார்கள் என்றும் தான், ஆனால் ராமேஸ்வரத்திலும், மண்டபத்திலும், அவர்கள் படும் பாடும், வட இந்திய கடல்படையினர் அவர்களைத் துன்புறுத்துவதையும், ஈனப்படுத்துவதையும் தமிழ்நாட்டுப் பார்ப்பனப் பத்திரிகைகள் எழுதுவதில்லை.
இந்தியா ஒன்றும் மனிதாபிமானத்தில் மட்டும் ஈழத்து அகதிகளை அனுமதிக்கவில்லை, இந்தியா ஐக்கிய நாடுகள் சபையின், சர்வதேச நாடுகள் அகதிகள் ஓப்பந்த்ததில் கையொப்பமிட்டுள்ள நாடு மட்டுமல்ல, ஐக்கிய நாடுகள் தாபனத்தின் பாதுகாப்புச் சபையில் நிரந்தர அங்கத்துவம் கேட்கும் நாடு, அதை விட இந்து சமுத்திரத்தின் பண்ணையார் போல் நடந்து கொள்ள விரும்பும் நாடு, அப்படி மரியாதை எதிர் பார்த்தால் அதற்கேற்ப நடந்து கொள்ளவும் வேண்டும் அப்பொழுது தான் மரியாதை கிடைக்கும். அதனால் மற்ற நாடுகளைப் போல் தன்னைத் தேடி வரும் அகதிகளை மனிதாபத்துடன் நடத்தி உரிய வசதிகளைச் செய்து கொடுப்பது இந்தியாவின் கடமை மட்டுமல்ல, உலகநாடுகளில் இந்தியாவின் நற்பெயரும் அதில் தங்கியுள்ளது, ஆனால் படித்த இந்தியர்கள் கூட அகதிகள் வருவதைத் தாங்கள் பிச்சை போடுவதில் வல்லவர்கள், ஈழத்தமிழர்கள் அகதிகளாகப் பிச்சையெடுக்க வருகிறார்கள் என்றெல்லாம் பீற்றிக் கொள்கிறார்கள்.
உண்மையில், ராஜீவ் காந்தியின் மரணத்துக்குப் பின்பு, இந்தியா, ஈழத்தமிழரை நடத்திய, விதத்தையும், துன்புறுத்தல்களையும், மனிதவுரிமை மீறுதல்களையும் Amnesty International கூட கடுமையாக விமர்சித்திருந்தது, மிகவும் வறிய ஆபிரிக்க நாடுகள் கூட பல மில்லியன் அயல்நாட்டு அகதிகளை உள்வாங்கிப் பராமரிக்கிறார்கள், ஆனால் இந்தியாவின், பொருளாதார சக்தியை வாய் கிழியப் பேசிக் கொண்டு, பன்னிரண்டு ஈழத்தமிழகதிகள் புதிதாக வந்ததை ஒரு செய்தியாகப் போட்டுப் பீற்றிக் கொள்ளும் இந்தியர்களைப் பார்த்தால் சிரிப்புத் தான் வருகிறது.
ஒவ்வொரு நாளும் சென்னை விமானநிலையத்தில் வந்திறங்கும் புலம் பெயர்ந்த இலங்கைத் தமிழர்கள் இந்தியாவுக்குள் கொண்டு வந்து கொட்டும், அந்நியச் செலாவணியைப் பற்றி அவர்கள் பேச மாட்டார்கள், அதை விட இலங்கைத் தமிழர்கள் அங்கு தங்கியிருக்கும் போது, லட்சக்கணக்கான ரூபாய்களைச் செலவு செய்து, எத்தனையோ கைத்தொழில்களையும்,சிறு தொழிலாளர்களை ஊக்குவிப்பதும், வளர்ச்சிக்கு உதவுவது மட்டுமல்ல, அவர்களின் சினிமா உலகுக்கும், அதை நம்பியுள்ள தொழிலாளர்களுக்கும் ஈழத்தமிழர்களின்,வெளிநாட்டு அகதி டொலர் உதவுவதைப் பற்றிப் பேச மாட்டார்கள். அதை விட புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்கள் இந்தியப் பொருட்களின் சந்தையாகவும் விளங்குகிறது, பல இந்தியர்கள் எங்களை ஆதரிப்பதும், எங்களின் டொலருக்காகவும், தங்களுடைய நூல்களையும், கூத்துக்களையும் விற்பதற்காகத் தானென்பதும் எங்களுக்குத் தெரியும்,
ஈழத்தமிழரால் இந்தியா அடையும் வர்த்தக லாபத்தையும், அந்நியச் செலாவணியையும் பற்றிப் பேசமாட்டார்கள், நூறு வறிய ஈழ அகதிகளுக்கு வரிசையில் நிற்க வைத்து கத்தரிக்காய் இல்லாத, கத்தரிக்காய் சாம்பாரும், சோறும் போட்டதை மட்டும் வாய் கிழியப் பேசி நன்றிக்கடன் கேட்பவர்கள் தான் சில இந்தியச் சகோதரர்கள். :evil:

