01-21-2006, 03:53 AM
Mathan Wrote:பிறப்பு விகிதம் மிககுறைவாக இருப்பதும் அதனால் சனத்தொகை குறைவதும் பொதுவாக வளர்ச்சி அடைந்த நாடுகளில் இருக்கும் ஒரு பொதுவான பிரச்சனை தான். இந்த நாடுகளில் இருக்கும் சிறப்பான சுகாதார வைத்திய வசதிகளால் வயதானோரும் நீண்ட காலம் உயிர் வாழ்கின்றார்கள். ஆக நாளடைவதில் இளையோர் முதியோர் சமநிலை குழம்பி பிறரில் தங்கியிருக்க கூடிய முதியோர் எண்ணிக்கை அதிகரிப்பதுடன் உழைக்கும் வர்க்கத்தின் இளையோரின் எண்ணிக்கை குறையும். இது மிக அபாயகரமானது நாட்டில் பொருளாதார நிலையில் மாற்றத்தை ஏற்படுத்த கூடியது. இதனை தடுக்கவே வளர்ந்த நாடுகள் பலவற்றில் குழந்தை பெற்று கொள்வோருக்கு பல சலுகைகளை அளிக்கின்றார்கள்.
ஜேர்மனியில் 3 குழந்தை அல்லது அதற்கு மேல் இருந்தால் பல சலுகைகள் உண்டு என்று அறிந்தேன். இதைபற்றி ஜேர்மனியில் இருப்பவர்கள் தான் சொல்லணும்.
நீங்கள் சொல்வது சரி!
ஆனால் ஜேர்மனியில் இந்த சலுகைகள் இருக்கோ தெரியவில்லை!
ஆனாலும் இந்த சலுகைகள் பெரியளவிலான எந்த மாற்றங்களையும் அபிவிருத்தியடைந்த நாடுகளில் கொண்டு வராது என்று எண்ணுகிறேன்!-ஏனெனில் சாதாரண பிரஜைகளும் மிக உயர்ந்த வாழ்க்கை தரத்தை அனுபவிக்கிறார்கள்!-ஆகவே சலுகைகளூக்காக சிரமங்களை அவர்கள் விரும்ப மாட்டார்கள்-
குழந்தை பெற்றுக்கொள்வது சாதாரண வாழ்வில் பல சிரமங்களை கொண்டுவரும் ஒரு விடயமாகவே அவர்கள் பார்க்கிறார்கள் என்பது-அங்கு வாழும் எம்மவர் எல்லாருமே அறிவார்கள்!
ஆனால் இந்தநெருக்கடி கையைமீறி போனால் மேற்குலகம் -ஏனைய வளர்ச்சி அடையாத நாடுகளிலிருந்து மலிவுவிலையில் ஆற்றல் உள்ளவர்களை கொள்வனவு செய்து நெருக்கடியை சமநிலைப்படுத்தும்-
ஆனால் அவை இன்னொரு அமெரிக்கா-சவூதி போல ஆட்சியாளர்களை தவிர மிகுதி நிர்வாகங்கள் வெளிநாட்டவரால் நிரம்பி வழியும் நிலையை கொண்டு வரலாம்-
இந்த சமநிலை குழம்பக்கூடிய நாடுகளில் சீனா முதல் இடத்திலும் -சிங்கப்பூர் இரண்டாவது இடத்திலும் இருக்கிறதாக நினைக்கிறேன்! அதனால் தானோ என்னமோ ப்ளீஸ் குழந்தை பெற்றுக்கொள்ளுங்கள் என்று அத்தேச அரசாங்கம் காலில் விழாத குறையாய் மக்களை கெஞ்சுகிறது!
சீனாவின் நிலையோ மிகவும் அபாயகரமானது- எந்த மக்கள் தொகையை கட்டுப்படுத்தி நாட்டின் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டார்களோ-அதே கட்டுப்பாடு சீனாவுக்கு நெருக்கடியாய் அமைய போகிறது என்று அறிந்தேன்!
பாரிய நிலப்பரப்பும் சனத்தொகையும் கொண்ட சீனாவில் தலைமுறை இடைவெளி ஒன்று மக்கள் தொகை கட்டுப்பாட்டால் ஏற்பட்டு விட்டது என்று நினைக்கிறேன்!
ஏறத்தாழ நூற்றி இருபது கோடியை பிரஜைகளாக கொண்ட சீனா-இன்னும் 10 வருடங்களில் அதன் நிர்வாகங்களை கவனிக்க ஆளின்றி தடுமாறவேண்டி வரலாம்!
மற்றைய நாடுகளைபோல் நிர்வாக திறமையுள்ளவர்களை சீனா பெரியளவில் இறக்குமதி செய்யவிரும்பாது என்றும் நினைக்கின்றேன்!-சீனா-சந்தேக கண்ணுடனேயே -அமைதியாகவிருந்து -உலகநாடுகள் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு தன் வேலையை கவனிக்கிறது என்பது என் எண்ணம்!
-!
!
!

