Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நவீன புலிகளாக இன்று உருவெடுத்துள்ளோம்
#2
<b><span style='font-size:25pt;line-height:100%'>மக்கள் ஆயுதப்பயிற்சி பெறுவது- தேசக் கடமை: கா.வே.பாலகுமாரன்</b></span>

தமிழீழ மக்கள் ஆயுதப் பயிற்சி பெறுவது என்பது ஒரு தேசக் கடமை, அரசியல் கடமை என்று விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் கா.வே.பாலகுமாரன் தெரிவித்துள்ளார்.


கிளிநொச்சி மாவட்ட மற்றும் தாயகத்தின் ஏனை பகுதிகளில் பொதுமக்களுக்கான தற்காப்பு பயிற்சிகள் கிளிநொச்சி பொது விளையாட்டு மைதானத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்வில் பயிற்சியை தொடங்கி வைத்து விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் கா.வே.பாலகுமாரன் ஆற்றிய சிறப்புரை:

<b>மிகத் தெளிவாக அடுத்து நாம் என்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பாக தலைவர் அவர்கள் கூறியிருக்கிறார்கள். அன்று கடற்கரைச்சேனையில் நடைபெற்ற எழுச்சி மாநாட்டில் கடைசியாக கூறினார்கள்... ஒரு முடிவுக்கு வந்துவிட வேண்டியதுதான்.. யோசிக்க என்ன இருக்கிறது? சாவுக்குள் எமது வாழ்வை நாங்கள் நுழைத்துவிட வேண்டும் என்று.</b>

வீழ்ந்தால் எமது சாவு வீரச்சாவாக இருக்க வேண்டும். களச்சாவாக இருக்க வேண்டும் என்று பொதுமக்கள் அறைகூவல் விடுத்தனர். இன்று நாம் இங்கே கூடியிருப்பதன் பிரதான நோக்கம் எங்களுடைய சாவை நாங்கள் தடுக்க வேண்டும். எங்களுடைய சாவை நாங்கள் தடுக்காமல் யார் தடுப்பது?

எங்களுடைய தேசத்தை, எங்களுடைய உயிரை, எங்களுடைய வாழ்வை, எங்களுடைய வளத்தை நாங்கள் தான் தடுக்க வேண்டும். உங்களுக்காகவே ஒரு காலகட்டத்திலே ஆயுதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

மக்கள் படை என்ற கட்டுமாணத்தினுடைய அடிப்படை நாடாக விளங்கும் வியட்நாமிலே அதனுடைய முன்னாள் தலைவர் சியாம் அவர்கள் கூறுவார்கள். விடுதலைப் போராட்டத்திற்கு அடிப்படை ஆயுதப் போராட்டம். அதற்கு அடிப்படை போராளிகள். அவர்களுக்கு அடிப்படை மக்கள். அன்று அவர்கள் அங்கே நிரந்தரப் படை, குடிப்படை, பிரதேசப்படை, தற்காப்புப்படை என்று பலவிதமான படைகளை மக்களுக்கு ஊடாக உருவாக்கிக் காட்டினார்கள்.

<b>ஒரு கட்டத்தில் பொதுமக்களுக்கு போர்க்கலை கற்பிக்கப்பட வேண்டும் என்று கூறினார்கள். போர் தொடர்பான அறிவும் ஆயுதங்களை கையாளும் ஆற்றலும் இறுதியில் பொதுமக்களிடம் தஞ்சம் புக வேண்டும் என்று சியாம் கூறினார். அதனால் தான் ஆனானப்பட்ட பத்து லட்சம் படையைக் கொண்ட அமெரிக்காவை தூசியென தூக்கியெறிந்தார்கள்.</b>

இன்று நாங்கள், உலகம் என்று கூறும் போது நீங்கள் யோசிக்கலாம் யார் இங்கே இருக்கிறார்கள் என்பது உங்களுக்கு தெரியாது. இங்கே நாம் நடக்கிற ஒவ்வொரு நிமிடமும் உலகத்தின் கண்களுக்கு சென்று கொண்டே இருக்கின்றது. செய்மதிக்கு ஊடாகக் கூட எங்களுடைய இந்த நடமாட்டங்கள் யாவும் உலகத்தினுடைய தலைமைச் செயலகங்களுக்கு போய்க் கொண்டிருக்கின்றன.

இன்று என்றும் இல்லாத அளவுக்கு உலகத்தினுடைய பார்வை எங்கள் மீது இருக்கிறது. கிளிநொச்சி மண்ணிலே நீங்கள் கூடிநின்று கை உயர்த்திக் கூறிய அந்தக்குரல் உலகத்தின் கடைசி குடிமகனின் செவிவரைக்கும் எட்டும்.

நீங்கள் இங்கே சும்மா கூடி நிற்கவில்லை. ஒரு தேசத்தினுடைய குரலாக கூடுவதற்கு கிளிநொச்சி மண்ணுக்கு ஒரு வாய்ப்பு வாய்த்திருக்கிறது. ஒரு பெரிய அற்புதமான காலம் கனிந்திருக்கிறது. நாங்கள் 97-களில் பயிற்சியை ஆரம்பித்த போது, கிளிநொச்சி மண் எமது கட்டுப்பாட்டில் இல்லை.

இன்று இந்த ஏ௯ பிரதான வீதிக்கு ஊடாக நாங்கள் பயிற்சி எடுத்து ஓடும் போது இந்த உலகம் பார்க்கப் போகின்றது. தன்னுடைய கடைசி வாய்ப்பை இழந்துவிட்டோம் என்பது உலகத்திற்கு தெரியப் போகின்றது.

<b>இன்று நாங்கள் இந்த இடத்தில் கூடி எங்களுடைய சாவை தடுப்பதற்காக நாங்கள் தற்காப்புப்பயிற்சி எடுக்கிறோம். எங்களை கொல்ல எந்த ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டனவோ, அதே ஆயுதங்களை நாம் கைகளில் ஏந்தி எங்களை காக்கப்போகின்றோம்.</b>

எந்த சாதாரண சிங்கள பொதுமகன் பயிற்சி எடுத்து இராணுவமாக மாறி எங்களைக் கொன்றானோ, அதே இராணுவத்தை நாங்கள் எதிர்கொள்ளப் போக்றோம். இன்று நாங்கள் விடுதலைப் போரிலே எழுச்சியும், முதிர்ச்சியும் பெற்று எங்களுடைய சிக்கலை நாங்களே கையாள தயாராகிவிட்டோம். அதுதான் இன்றைய கிளிநொச்சி பயிற்சி ஊடாக உலகத்திற்கு நாங்கள் கூறவுள்ள செய்தியாக இருக்கின்றது.

<b>நீங்கள் தெளிவாக அறிந்து கொள்ளுங்கள். இன்று உள்ள நிலமை என்னவெனில், மிகத் தெளிவாக நாங்கள் கூறுகிறோம். கடைசி வாய்ப்பைக் கூட நாங்கள் இப்போது வழங்கத் தயாராக இருக்கிறோம். ஆனால் இந்த வாய்ப்பு என்பது எங்களுடைய பலத்தின் அடிப்படையில், எங்களை தயார்படுத்தலின் அடிப்படையில் நாங்கள் செய்ய வேண்டியதாக உள்ளது.

போரைத் தடுக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், சாவைத் தடுக்க நீங்கள் விரும்பினால் போர் செய்வதற்கு ஆயத்தமாக வேண்டும். போர் செய்ய ஆயத்தமானால்தான் போரைக்கூட தடுத்திட முடியும். போர் வந்தாலும் தடுத்திட முடியும். இந்த முடிவை இந்த தேசம் எடுத்துவிட்டது என்பதற்காக ஏற்கனவே இந்த பயிற்சிகள் ஆரம்பிக்கப்பட்டாலும் கூட, கிளிநொச்சியில் மண்ணில் நாங்கள் மிக முக்கியமாக சர்வதேசத்தின் கவனத்தின் ஈர்ப்பாக, நீங்களே கூடி உங்களுடைய கரங்களை ஒன்றிணைத்து பயிற்சியளித்து நாங்கள் ஒரு முடிவை நோக்கி நகர்வதற்காக நாங்கள் ஆயத்தமாகிக் கொண்டிருக்கின்றோம்.

மிகப்பெரிய பலத்தோடு நாங்கள் இன்று எழுந்து நிற்கிறோம். அந்த பலத்தினை ஒன்றுபடுத்தி முகிழ்த்தெடுத்து திரட்டிக்கொடுப்தற்கான சகல ஆயத்தங்களையும் நாங்களே செய்ய வேண்டும். எங்களுக்காக நாங்களே எங்களுடைய போராட்டப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.</b>

இந்த இடத்தில் நாங்கள் இன்று கூடி நிற்பதற்கு ஊடாக எங்களுடைய குரலை ஒருமித்து ஒலிப்பதற்கு ஊடாக நாங்கள் ஒரு முடிவை உலகத்திற்கு கூறிக்கொள்கிறோம். அந்த முடிவின் செயற்பாட்டின் அடிப்படையில் எங்களுடைய பெருந்தலைவர் எடுக்கக்கூடிய அந்த முடிவினுடைய செயற்பாட்டின் வேகத்தில், எங்களுடைய விடுதலையை வெல்லும் போது இந்த மண்ணிலே நாங்கள் கூடி நின்று மீண்டும் கைகளை உயர்த்தி எங்களுடைய சுதந்திரப் பிரகடனத்தை வாசிப்போம் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

இந்த ஆனானப்பட்ட மகிந்தரைக்கூட வல்லமை வாய்ந்த நாடுகளில் கூட நாங்கள் இன்று தலைபணிய வைத்து ஒரே ஒரு விடயம்தான் நாம் கேட்கிறோம். இன்று இங்கே வந்தவர்களுக்கு கூறினோம். உலகத்தினுடைய பேரவலமான ஆழிப்பேரலையின் போதும் கூட, சிறிதும் மனமிரங்காத இந்த சிங்களம் இனி எப்போது இரங்கும் என்பதற்கான வாய்ப்பை எவராலும் தரமுடியுமா என்று கேட்டால் எவனும் வாய் பொத்தி நிற்கிற உருவத்தை நங்கள் பார்க்கிறோம்.

இந்த அற்புதமான வாய்ப்பு எங்களுக்கு வாய்த்திருப்பதற்கு ஊடாக, அடிமைத் தளையை அறுக்கக்கூடிய ஒரேயொரு சந்தர்ப்பத்தை இந்த தேசத்தில் வாழ்கின்ற உங்களுக்கு இந்தக்காலம் தந்திருக்கின்றமையால், மனமுவந்து இந்த தற்காப்புப் பயிற்சியைப் பெற்று, பயிற்சி எடுத்து போராடச் செல்வோம். ஒரு சாதாரண கல் பயிற்சி பெறுவதற்கு ஊடாக சிற்பியின் உளிபடுவதற்கு ஊடாக அந்த வலியை, உணர்வதற்கு ஊடாக தாங்குவதற்கு ஊடாக தெய்வச்சிலையாக மாறுகிறது.

பொதுமக்களும் பயிற்சி எடுக்கும் போது, புனிதமான புலிப்படையாக மாறி,தேசத்தினுடைய ஆன்மாவாக மாறி தேசத்தினுடைய எதிர்காலத்தை நீங்களே தீர்மானிக்கக்கூடிய அந்த மாபெரும் பொறுப்பு உங்களுக்காக வருகிறது.

தொடக்கமாக நீங்கள் இங்கே திகழ்கிறீர்கள். ஆகவே வாரந்தோறும் இந்த இடத்தில் கூடி வீதியில் சென்று இந்த செய்தியை காற்றில் உலகெல்லாம் பரப்பி, பரப்புரைப் போரிலே இந்த உலகத்தினுடைய கவனத்தை ஈர்த்து செய்தியை உலகத்திற்கு கூறி, இந்த இராணுவப் பயிற்சி ஊடாக உலகத்திற்கு ஒரு அரசியல் செய்தியை கூறி, நாங்கள் எங்களுடைய இறுதிப் போருக்கான சகல ஆயத்தங்களையும் செய்வதற்காக இங்கே கூடி நிற்கிறோம்.

எல்லாச் சிரமங்களையும் பாராது நீங்கள் மனமுவந்து முன்வந்து இதனை ஒரு அரசியல் கடமையாக தேசக் கடமையாக புனித பணியாக மேற்கொண்டு வெல்ல வேண்டும் என்பதற்காக உழைக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்கின்றேன் என்றார் கா.வே. பாலகுமாரன்.

<i><b>தகவல் மூலம்-புதினம்.கொம்</b></i>
"
"
Reply


Messages In This Thread
[No subject] - by மேகநாதன் - 01-20-2006, 07:28 PM
[No subject] - by தூயவன் - 01-21-2006, 04:26 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)