01-20-2006, 07:23 PM
<span style='color:darkred'><b>இராணுவப் படுகொலைகளைக் கண்டித்து மட்டக்களப்பில் பிரம்மாண்ட எழுச்சி நிகழ்வு </b>
தமிழர் தாயகத்தில் சிறிலங்கா படைகளின் தமிழ் மக்கள் மீதான படுகொலையைக் கண்டித்து மாபெரும் கண்டன எழுச்சிப் பேரணியும் பொதுக்கூட்டமும் மட்டக்களப்பில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மட்டக்களப்பு அம்பிலாந்துறை பொது விளையாட்டு மைதானத்தில் இந்த எழுச்சி நிகழ்வு நடைபெற்றது.
முன்னதாக அம்பிலாந்துறை சந்தியிலிருந்து சிறிலங்கா படையினரின் தமிழ் மக்கள் மீதான படுகொலைகளை நிறுத்தக்கோரி முழக்கங்கள் எழுப்பியும் கண்டன பதாகைகளை ஏந்தியும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பேரணியாக அம்பிலாந்துறை பொது விளையாட்டு மைதானத்தை வந்தடைந்தனர்.
தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் நிகழ்வுக்குத் தலைமை வகித்தார்.
பொதுச்சுடரினை கரும்புலி மேஐர் செந்தேவனின் தாயார் பாக்கியம் ஏற்றிவைத்தார்.
தமிழீழத் தேசியக் கொடியை இரண்டு மாவீரர்களின் தந்தையான தர்மலிங்கம் ஏற்றிவைத்தார்.
மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ்.ஜெயானந்தமூர்த்தி, கனகசபை பத்மநாதன், தங்கேஸ்வரி ஆகியோர் கண்டன உரைகளை நிகழ்த்தினர்.
சிறிலங்கா படையினரின் வன்செயல்களை கண்டிக்கும் மனு நிகழ்ச்சியில் வாசிக்கப்பட்டது.
இந்த மனு மட்டக்களப்பு மாவட்ட கண்காணிப்புக்குழு அதிகாரி இன்யோன், நோர்வே தூதரகம், அமெரிக்கத் தூதரகம் ஆகியவற்றுக்கு அனுப்புவதற்காக உரிய அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டன.
இன்றைய எழுச்சி நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் தயாமோகன், மகளிர் அரசியல்துறைப் பொறுப்பாளர் குவேனி, விடுதலைப் புலிகளின் தளபதிகள் நாகேஸ், பிரபா, வெல்லாவெளிக் கோட்ட தளபதி யோகரார், மட்டக்களப்பு மாவட்ட துணை அரசியல்துறைப் பொறுப்பாளர் சீராளன் மற்றும் தளபதிகள், போராளிகள் உள்ளிட்ட பத்தாயிரத்திற்கும் அதிகமான மக்கள் உணர்வெழுச்சியுடன் கலந்துகொண்டனர்</span>
<i><b>தகவல் மூலம்-புதினம்.கொம்</b></i>

"
"
"