Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மட்டக்களப்பில் தமிழ் தேசிய எழுச்சிப் பேரணி
#3
<b>முன்னமே இது தொடர்பான செய்தி,
"மட்டக்களப்பில் தமிழ் தேசிய எழுச்சிப் பேரணி"
என்ற தலைப்பில் சேர்க்கப்பட்டிருப்ப்தை உணர்ந்து,தொடர்புபட்ட செய்திகளைத் தொகுத்து
ஒரே தலைப்பின் கீழ் வழங்குவது சிறப்பு
</b><b>என்பதால் ,,,
பின்வரும் செய்திகளை இங்கு இணைக்கிறேன்</b>

<span style='color:green'><b>மட்டக்களப்பில் தமிழ்த் தேசிய எழுச்சி மாநாடு </b>

இன்று மட்டக்களப்பில் மட்டக்களப்பு மாவட்ட வெகுசன ஒன்றியத்தின் கண்டனப் பேரணி நடைபெற்றுள்ளது. அதன்போது ~~<b>எங்கள் எதிர்கால வாழ்க்கைக்கும் நிலையான இருப்புக்கும் நாங்களே முடிவெடுப்போம்||</b> என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட பிரகடனம் வருமாறு:-

சிறிங்கா அரசு எம்மீது வலிந்து போர்தொடுக்க கங்கணம் கட்டி நிற்கின்றது. சர்வதேசத்தின் மத்தியில் எமது இனத்துக்கு களங்கள் ஏற்படும் வகையில பரப்புரைகளை முன்னெடுத்துச் செல்கிறது. தற்போதைய அரசும் இனவெறிக் கூட்டமும் எமது உயிரினும் மேலான விடுதலையைப் பயங்கரவாதமாக்க முனைந்து செயற்படுகின்றது.

நாளுக்கு நாள் எமது உடன் பிறப்புக்கள் துப்பாக்கிக் குண்டுகளுக்கு பலியாகிக் கொண்டிருக்கிறார்கள். மென்போக்குக் கொண்ட தமிழ் புத்திஜீவிகள், ஊடகவியலாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், பாடசாலை மாணவர்கள், சாதாரண தொழிலாளிகள் தமிழினம் என்ற ஒரே காரணத்திற்காகக் கோழைத்தனமாகக் கொடூரமாகக் சுட்டுக் கொல்லப்படுகின்றனர்.

இன்றைய சமாதான சூழலை நன்கு பயன்படுத்தி சர்வதேசமெங்கும் தமிழினத்திற்கு எதிரான நாகரீகமற்ற கபடத்தனமான கருத்துக்களை முன்னெடுத்துச் செல்வதுடன் எம்மினத்தைச் சீண்டிப்பார்க்கவும் முனைகிறது சிறிலங்கா அரசு.

சமாதான பேச்சுவார்த்தைக்கு அனுசரணை மட்டும் நோர்வே நாடு வழங்கினால் போதும்@ அதன் தலைநகரில் பேச்சுக்கள் நடைபெறக் கூடாது எனவும், சர்வதேச நாடுகளெல்லாம் எம்மினத்தின் உண்மைத் தன்மையை விளங்கிக் கொள்ளக் கூடாது எனவும் பொய்ப் பிரசாரம் செய்கிறது சிறிலங்கா அரசு

எமது தமிழ்ப் பெண்கள், மாணவிகள் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு நடு வீதிகளிலும், பாழ் கிணறுகளிலும் தூக்கி வீசப்படுகின்றார்கள். இன்றைய சமாதானச் சூழலில் புங்குடுதீவில் சகோதரி தர்சினிக்கு நடந்த அவலமும், மன்னாரில் பச்சிளம் குழந்தைகளுடன் பெற்றோரையும் சேர்த்து எரிக்கப்பட்ட கொடுமையையும் எண்ணிப் பார்க்கின்ற போது எம் நெஞ்சங்கள் வெடிக்கின்றது

நீண்ட காலமாக தமிழ் மாணவர்களுக்குக் கல்வி, தொழில் வாய்ப்புக்களில் பாராபட்சம் காட்டி வருவதே சிங்கள இனவாத அரசுகளின் இன வெறிப் போக்குகளாகும். இப்படியான பாராபட்சத்துக்கு சவாலுடன் முகம் கொடுத்து கல்வியில் வெற்றிகாணும் தமிழ் மாணவர் சமூகத்தை சிங்கள இன வெறியர்கள் பொறுக்க முடியாமல் நயவஞ்சமாகக் கொலை செய்து வருகின்றனர்.

கடந்த 2002 - பெப்ரவரி - 23ம் திகதி கைச்சாத்திட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தின் பின்னர் இன்று வரை நிராயுதபாணிகளாக இராணுவக் கட்டுப்பாட்டுப் எமது தாயகப் பிரதேசத்திற்குள் அரசியல் பணியாற்றச் சென்ற 200ற்கும் மேற்பட்ட போராளிகளும் 500க்கும் அதிகமான அப்பாவித் தமிழர்களும் சிங்கள இனவெறியர்களால் கொடூரமாகச் சுஉலுக்கி நிற்கின்றது. இந்நிலையில் தமிழர் தம் தாயகமெங்கும் நிழல் யுத்தமொன்றை சிங்கள பேரினவாத அரசு திட்டமிட்டு நடாத்தி வருகின்றது. சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவங்கள் நெஞ்சங்களை உலுக்கி நிற்கின்றது. இந்நிலையில் தமிழர் தம் தாயகமெங்கும் நிழல் யுத்தமொன்றை சிங்கள பேரினவாத அரசு திட்டமிட்டு நடாத்தி வருகின்றது.


வீரம் விளை நிலத்தின் வித்துக்களே!
எம் இனிய உறவுகளே!!
நாம் பொறுமை காத்தது போதும் பொங்கியெழுவோம்!!!|| சர்வதேச சமூகமே சிறிலங்கா பேரினவாத அரசின் கபட நடவடிக்கைகளை நன்கு விளங்கியும் நீ! மௌனம் சாதிப்பது ஏன்? நோர்வே தலைநகர் ஓஸ்லோவில் பேச்சுவார்த்தை உடன் நடைபெற அழுத்தம் கொடு! எமது விடுதலைப் போராட்டத்தின் உண்மைத் தன்மையை அங்கீகரி.

இல்லையேல் காலம் காலமாக அழிந்து போய் அழிவின் விளிம்பில் நிற்கும் எம் இனம் தனது எதிர்கால வாழ்விற்கும் நிலையான இருப்புக்கும் தேசியத் தலைவரின் வழிப்படுத்தலில் பொங்கியெழுவதைத் தவிர்க்க முடியாது.

எமது தமிழீழத் தேசியத் தலைவரின் மேலான கவனத்திற்கு

இன்றைய கண்டன எழுச்சிப் பேரணி மூலம் மட்டக்களப்பு மாவட்ட வெகுசன ஒன்றியம் தங்களுக்குத் தயவாக விடுக்கும் அவசர வேண்டுகோள்!

மீண்டும் போரை எதிரி வலிந்து தொடங்க முனைகின்றான். இனியும் கைகட்டி வாய்பொத்தி பேசா மடந்தைகளாக பொறுத்துக் கொண்டிருந்தது போதும் போரைத் தொடங்க ஆணையிடுங்கள். ஒயாத அலையென புயலாகப் புறப்படும் பொங்கியெழும் மக்கள் படை.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்

மக்கள் சார்பாக,
வெகுசன ஒன்றியம்,
மட்டக்களப்பு மாவட்டம்</span>


<b><i>தகவல் மூலம்- ஈழநாதம் - மட்டக்களப்பு பதிப்பு</i></b>
"
"
Reply


Messages In This Thread
[No subject] - by மேகநாதன் - 01-12-2006, 09:15 AM
[No subject] - by மேகநாதன் - 01-20-2006, 07:12 PM
[No subject] - by மேகநாதன் - 01-20-2006, 07:15 PM
[No subject] - by yarlmohan - 01-20-2006, 07:16 PM
[No subject] - by மேகநாதன் - 01-20-2006, 07:23 PM
[No subject] - by iruvizhi - 01-20-2006, 08:56 PM
[No subject] - by மேகநாதன் - 01-21-2006, 06:50 AM
[No subject] - by மேகநாதன் - 01-21-2006, 06:54 AM
[No subject] - by மேகநாதன் - 01-21-2006, 06:58 AM
[No subject] - by மேகநாதன் - 01-21-2006, 06:58 AM
[No subject] - by Mathuran - 01-21-2006, 11:57 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)