Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நவீன புலிகளாக இன்று உருவெடுத்துள்ளோம்
#1
நவீன புலிகளாக இன்று உருவெடுத்துள்ளோம்: சிறப்புத்தளபதி நகுலன்


சிறிலங்காவின் அனைத்து படைப்பலத்தையும் வெல்லக்கூடிய சக்திவாய்ந்த படைக்கட்டமைப்புக் கொண்ட நவீன புலிகளாக இன்று உருவெடுத்துள்ளோம் என சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத்தளபதி நகுலன் தெரிவித்துள்ளார்.


கிளிநொச்சியில் ஆரம்பிக்கப்பட்ட அனைத்து மக்களுக்குமான இராணுவப் பயிற்சி ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்தாவது,

அன்புக்குரிய மக்களே, நாங்கள் கடந்தகால வரலாறுகளை மறந்துவிட முடியாது எங்களுடைய விடுதலைப் போராட்டத்தையும், எங்களுடைய உண்மையான நிலைப்பாடுகளையும் சர்வதேச சமூகம் எங்களுக்கு முன்னால் வந்து நின்று கொண்டு நீதியாக தீர்க்குமென்று இனியும் கனவு காணமுடியாது.

ஏனெனில் மன்னார்ப் பகுதியில் ஒரு சிறுவனுடன் குடும்பத்திற்கு நடந்த கதியும், யாழ்ப்பாணத்தில் குறுகிய நாட்களுக்குள் அந்த கோரச் சம்பவங்களை கூட தட்டிக்கேட்காத சர்வதேச சமூகம் எமது முழுப்பிரச்சினையில் எவ்வாறு தீர்வுகாணும்? இவ்வாறு நாளுக்கு நாள் எமது மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்படுகின்ற கொடுமைகளை நாங்கள் ஒரு முடிவுக்கு கொண்டு வரவேண்டியவர்களாக இன்றைய கால கட்டத்தில் உள்ளோம்.

உங்களுக்குத் தெரியும் இந்த கிளிநொச்சி மண்ணை மீட்டெடுப்பதற்காக எமது போராளிகள் கொடுத்த உயிர் தியாகங்களும் சிந்திய குருதியும் தான் இன்று நாங்கள் இந்த இடத்தில் நின்று கதைக்கக்கூடிய நிலை உருவாக்கியது.

அனால் இன்று இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மக்களின் ஒவ்வொரு நாள் பொழுதுகளும் நிம்மதியாக இல்லை. இன்று உயிருடன் இருப்பானா? நாளைக்கு இருப்பானா? நாளைக்கு சூரிய உதயத்தை பார்ப்பானோ என்ற அச்சத்தில் உள்ளனர்.

இன்று மக்கள் படையாக பயிற்சி எடுக்க வந்திருக்கும் உங்களிடம் நாங்கள் கேட்பது உங்களின் இராணுவப் பயிற்சியின் ஊடாக நீங்கள் அனைவரும் நாங்கள் பாதுகாத்து நின்ற நீண்ட கிலோமீற்றர் தூரத்தை நீங்கள் வந்து காத்து நிற்பீர்களா இருந்தால் நாங்கள் அதற்கு அப்பால் போய் எமது மண்ணில் தரித்து நிற்கும் சிங்கள காடையரை சுக்குநூறாக்கி எமது தாயகத்தில் இருக்கின்ற ஒவ்வொரு காடையருக்கும் சமாதியைக் கட்டுவோம்.

நீங்கள் எங்கள் தலைவரையும் நன்றாக விளங்கிக் கொள்ள வேண்டும். எங்களுடைய தலைவரை வென்று விட வேண்டும் என்பதற்காகவும் அழித்துவிட வேண்டுமென்பதற்காகவும் முயற்சித்தவர்கள். தங்களுடைய இறுதிக்காலத்தில் தமது இயலாமையால் எமது தலைவரைப் புகழ்ந்த வரலாறுகள் உண்டு. இதற்கு இந்தியா கூட விதிவிலக்கல்ல இந்தியாவின் டிக்சிட் தொடக்கம் சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி மற்றும் ரத்வத்தை கூட எமது தலைவரை புகழ்பவர்களாகத்தான் உள்ளார்கள். ஏனெனில் தலைவர் தனது மதிநுட்பமான செயற்பாடுகளால் சிறிலங்கா இராணுவத்திற்கும் சர்வதேசத்திற்கும் தகுந்த பதிலலைக் கொடுத்தார்.

இன்று சிறிலங்கா இராணுவமோ சிறிலங்கா அரசோ விடுதலைப் புலிகளை கடந்த காலப் புலிகளாக கருதுபவர்களாக இருந்தால் அது அவர்களுக்குரிய சாவு மணியாகத்தான் இருக்கும். இந்த 2006 ஆம் ஆண்டிலே நவீன புலிகளால் எந்த ஒரு சிறிலங்கா படைப்பலத்தையும் வெல்லக்கூடிய சக்தி வாய்ந்த படைக்கட்டமைப்பைக் கொண்ட நவீன புலிகளாக நாங்கள் இன்று உருவெடுத்துள்ளோம். இன்று எமது மண்ணில் இருக்கின்ற சிங்களப் படைகளை அழித்தொழிப்பதற்கான அந்த நாட்களை மணிக்கணக்கில் காத்துக்கொண்டிருக்கின்றோம்.

எனவே இராணுவ கட்டுப்பாட்டிலுள்ள அப்பான எமது தாயக உறவுகளே, நீங்கள் அனைவரும் குறிப்பிட்ட காலத்திற்குள் பாதுகாப்பான எமது பகுதிக்குள் வந்து அந்த மண்ணை நீங்கள் வீடுவிப்பீர்களாக இருந்தால் நாங்கள் குறுகிய காலத்திற்குள் அவற்றை மீட்டெடுத்து தரக்கூடிய ஏது நிலையை ஏற்படுத்தித்தர வேண்டுமென நாங்கள் இந்த இடத்தில் கேட்டுக்கொள்கின்றோம்.

ஏனெனில் எந்த ஒரு விடுதலை இயக்கமும் தன்னுடைய இறுதிக்கால கட்டத்திலே தனது ஒட்டுமொத்த செயற்பாடுகளையும் பயன்படுத்தி தமது தாயக மண்ணில் உள்ள இராணுவத்தை வெளியேற்றுவதற்கான ஒரு இறுதிக்கட்டப் போராட்டத்திற்கு தயாராகுகின்ற போது அனைத்து மக்களும் அங்கு செல்ல வேண்டியவர்களாக இருக்கின்றோம்.

இவை அனைத்தையும் தலைமை தாங்கி எந்த ஒரு சவாலையும் எதிர்கொண்டு எந்தப் படையையும் வெல்லக்கூடிய எமது தலைவருடைய படைப்பலத்திற்கு நீங்களும் தோள் கொடுப்பீர்களாக மாறுவீர்களாக இருந்தால் எமது இறுதிப் போராட்டத்தின் அந்த உச்ச கட்ட நடவடிக்கை மூலம் நாங்கள் எமது பகுதிகளில் உள்ள சிங்களக் காடையரை வெளியேற்றி எமது மண்ணில் நாங்கள் சுதந்திரமாக வாழ வழிசமைக்க முடியும் எனவும் நகுலன் தெரிவித்தார்.

புதினம்
Reply


Messages In This Thread
நவீன புலிகளாக இன்று உருவெடுத்துள்ளோம் - by நர்மதா - 01-20-2006, 06:24 PM
[No subject] - by மேகநாதன் - 01-20-2006, 07:28 PM
[No subject] - by தூயவன் - 01-21-2006, 04:26 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)