01-20-2006, 05:29 PM
kuruvikal Wrote:அது ஆய்வு முடிவாகத்தான் இருக்கும்.. அங்கு சில அடிப்படை உயிரியல் தொழில்நுட்ப புரட்டோகோல்கள் பாவிக்கப்பட்டு பெறப்பட்ட தரவுகளுக்கு ஒத்த தரவுகள் உண்டு. அதுமட்டுமன்றி ஆய்வு வெளியிடப்பட்ட விபரங்கள் உண்டு. அவற்றை அடிப்படையாக வைத்து உங்கள் ஆட்சேபனைகளை மேலதிக விளக்கங்களை அங்கேயே சமர்பிக்கலாம் அல்லது கோரலாமே..! அவர்கள் அதற்கான விளக்கத்தை தருவார்கள். அதை சாதாரணமாக இக்களத்தில் கதைப்பது போல செய்ய முடியாது. வலுவான காரணங்களோடு உங்கள் சந்தேகம் இருக்குமாயின் மட்டுமே அது சாத்தியம். குறிப்பாக இவ்வாய்வில் எங்கெங்கு பிழைகள் உண்டு என்பது கட்டாயம் சுட்டிக்காட்டப்பட வேண்டும். நடைமுறை ஆதாரங்களோடு...அல்லது இது போன்ற வேறு ஆய்வுமுடிவுகளோடு ஒப்பிட்டு. அதற்கு முதல் குறித்த ஆய்வறிக்கை முழுமையாக தரப்படவில்லை..! அதை ராஜாதிராஜா முழுமையாகத் தந்தால் சிறப்பாக இருக்கும். அவர் சில முடிவுகளை மட்டுமே தந்திருக்கிறார்..! பாவிக்கப்பட புரட்டக்கோல்கள் அடங்கிய செயன்முறை விபரங்கள் உள்ளடக்கப்படவில்லை..! ஆனால் அதை மட்டும் வைத்து அதை ஆய்வுமுடிவல்ல என்றும் அறுதிட்டு தீர்மானிக்கவும் முடியாது..! :wink:
அதென்ன ஆய்வு முடிவாகத் தான் இருக்கும்,?இருக்குதா? இல்லயா?
சரியாகத் தெரியாமல் எப்படி அதை ஆய் வென்று இப்படி ஒற்றைக் காலில் நிற்கிறீர்?எதற்காக?


