01-20-2006, 04:23 PM
narathar Wrote:kuruvikal Wrote:குறுக்காலபோனவரே.. உங்களுக்கு நிச்சயமா இதுக்கு பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை. காரணம் நீங்கள் ஒன்றும் குழந்தைகள் அல்ல. ஒரு ஆய்வின் அடிப்படை அது தரும் முடிவு.. அதன் பயன்பாடு.. அது மீள் உறுதிப்படுத்தல் ஆய்வு.. அதை நிறுவத்தக்க வேறு ஆய்வுகள் கொண்டு எடுக்கப்படும் இறுதிவரைபு என்று ஆய்வு முடிவுகள் தொடர்பில் பல நிலைகள் இருக்கிறது உங்களுக்கு தெரியும். இங்கு தரப்பட்ட ஆய்வு முடிவின் பிரகாரமே கருத்து வைக்கப்படுகிறது.அதில் நீங்கள் குறை கண்டுபிடிக்க இது வெறும் ஆவண ஆய்வல்ல. இது பரிசோதனை ரீதியான ஆய்வு முடிவு..! அங்கு பல நிலை செயன்முறைகள் தரவுகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த ஆய்வு முடிவை வெறும் ஆவண ரீதியான ஆய்வுச் சான்றுகளை வைத்து முறியடிக்க முடியாது. அதேவேளை இவ்வாய்வு முடிவே இறுதியானது என்றும் சொல்லப்படவில்லை. இருப்பினும் இவ்வாய்வு முடிவின் பிரகாரம் ராஜாதிராஜா இட்ட தலைப்பில் தவறில்லை. இதையேதான் சாரமாக 1 முதல் தற்போது வரை சொல்லிட்டு இருக்கிறம். அது புரியல்ல என்பது எமது குற்றமல்ல..! :wink:
குருவியாரே ராஜாதிராஜ இட்டது ஆய்வல்ல விஞ்ஞான சொற்களால் எழுதப்பட்ட ஒரு புனை கதை(psedo science) ,என்பதைத் தான் சொல்லிக் கொண்டு இருகிறோம்,முதலில் இது ஒரு ஆய்வு என்பதை நிருபிக்கவும்.ராஜாதிராஜவே கேட்டுச் சொல்கிறேன் என்ற பின்னர் நீர் இதில் விதண்டவாதம் செய்வது எதனால்?ஓர் ஆய்வென்பது மற்றய துறை சார் அரிஞ்ஞர்களால் (peer review)ஆராயப்பட்டு விமர்சிக்கப்பட்டே ஏற்றுக் கொள்ளப் படுகிறது என்பது விஞ்ஞான ஆய்வுகளின் அடிப்படை.
அது ஆய்வு முடிவாகத்தான் இருக்கும்.. அங்கு சில அடிப்படை உயிரியல் தொழில்நுட்ப புரட்டோகோல்கள் பாவிக்கப்பட்டு பெறப்பட்ட தரவுகளுக்கு ஒத்த தரவுகள் உண்டு. அதுமட்டுமன்றி ஆய்வு வெளியிடப்பட்ட விபரங்கள் உண்டு. அவற்றை அடிப்படையாக வைத்து உங்கள் ஆட்சேபனைகளை மேலதிக விளக்கங்களை அங்கேயே சமர்பிக்கலாம் அல்லது கோரலாமே..! அவர்கள் அதற்கான விளக்கத்தை தருவார்கள். அதை சாதாரணமாக இக்களத்தில் கதைப்பது போல செய்ய முடியாது. வலுவான காரணங்களோடு உங்கள் சந்தேகம் இருக்குமாயின் மட்டுமே அது சாத்தியம். குறிப்பாக இவ்வாய்வில் எங்கெங்கு பிழைகள் உண்டு என்பது கட்டாயம் சுட்டிக்காட்டப்பட வேண்டும். நடைமுறை ஆதாரங்களோடு...அல்லது இது போன்ற வேறு ஆய்வுமுடிவுகளோடு ஒப்பிட்டு. அதற்கு முதல் குறித்த ஆய்வறிக்கை முழுமையாக தரப்படவில்லை..! அதை ராஜாதிராஜா முழுமையாகத் தந்தால் சிறப்பாக இருக்கும். அவர் சில முடிவுகளை மட்டுமே தந்திருக்கிறார்..! பாவிக்கப்பட புரட்டக்கோல்கள் அடங்கிய செயன்முறை விபரங்கள் உள்ளடக்கப்படவில்லை..! ஆனால் அதை மட்டும் வைத்து அதை ஆய்வுமுடிவல்ல என்றும் அறுதிட்டு தீர்மானிக்கவும் முடியாது..! :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

