01-20-2006, 03:47 PM
Quote:குருவியாரே, ராஜாதிராஜா ஆரியப்படையெடுப்பு பொய் என்று நிரூபிக்கப்பட்டுவிட்டது என்று வேறு பகுதிகளில் எழுதியதற்கு ஆதாரம் மேலதிக தகவல் தராமல் மொட்டையாக சொல்ல வேண்டாம் என்று கூறியதால் தான் இந்த விவாத தலைப்பு அவரால் போடப்பட்டது. அவர் இங்கு வைத்த தகவல்கள் தான் ஆரியப்படையெடுப்பு நிரூபிக்கப்பட்டுவிட்டது என்றதற்கு ஆதாரமாக வைக்கப்பட்டது.
8 பக்கங்கள் எழுதின பிறகு நீர் ஏன் குத்துக்கரணம் அடிக்குறீர் அவர் சார்பில் அது தான் நிலையானது என்று அவரோ இல்ல எவருமோ சாதிக்கவில்லை. நாளை இன்னொரு ஆய்வு அதை மறுதலிக்கலாம். ஆனால் இந்த இடத்திலும்... என்று?
குறுக்காலபோனவரே.. உங்களுக்கு நிச்சயமா இதுக்கு பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை. காரணம் நீங்கள் ஒன்றும் குழந்தைகள் அல்ல. ஒரு ஆய்வின் அடிப்படையில் அது தரும் முடிவு.. அதன் பயன்பாடு.. அதன் மீள் உறுதிப்படுத்தல் . அதை நிறுவத்தக்க வேறு ஆய்வுகள் கொண்டு எடுக்கப்படும் இறுதிவரைபு என்று ஆய்வு முடிவுகள் தொடர்பில் பல நிலைகள் இருக்கிறது. அவை உங்களுக்கு தெரியும். இங்கு தரப்பட்ட ஆய்வு முடிவின் பிரகாரமே கருத்து வைக்கப்படுகிறது.அதில் நீங்கள் குறை கண்டுபிடிக்க இது வெறும் ஆவண ஆய்வல்ல. இது பரிசோதனை ரீதியான ஆய்வு முடிவு..! அங்கு பல நிலை செயன்முறைகள் தரவுகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த ஆய்வு முடிவை வெறும் ஆவண ரீதியான ஆய்வுச் சான்றுகளை வைத்து முறியடிக்க முடியாது. அதேவேளை இவ்வாய்வு முடிவே இறுதியானது என்றும் சொல்லப்படவில்லை. இருப்பினும் இவ்வாய்வு முடிவின் பிரகாரம் ராஜாதிராஜா இட்ட தலைப்பில் தவறில்லை. இதையேதான் சாரமாக 1 முதல் தற்போது வரை சொல்லிட்டு இருக்கிறம். அது புரியல்ல என்பது எமது குற்றமல்ல..! :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

